'ஐப்பசி பௌர்ணமி, சிவன் செண்டிமெண்ட், தாமரையோடு காமாட்சி விளக்கு!' - தனுஷ் மகளிரண...
``அவரை இக்னோர் பண்ணுங்க... அவரும் அவர் ஸ்டேட்மெண்டும்" - சேகர் பாபு குறித்து அமைச்சர் மரிய வில்சன்!
சென்னை காசிமேட்டில் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் (IOC) மற்றும் TNPTC இணைந்து மானிய விலையிலான எரிபொருள் விற்பனை மையத்தை தொடங்கப்பட்டது. இந்த நிகழ்வில் அமைச்சர்கள் ஸ்ரீநாத், மரிய வில்சன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். அதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய மீன் வளத்துறை அமைச்சர் ஸ்ரீநாத், ``மீனவச் சகோதரர்கள் பயன்பாட்டிற்காக திறக்கப்பட்டிருக்கும் இந்த பங்க் அவர்களுக்கு பெரும் உதவியாக இருக்கும் என நம்புகிறேன். மார்க்கெட் விலையிலிருந்து சுமார் ரூ.15 வரை மீனவர்களுக்கு எரிபொருள் குறைவான விலையில் கிடைக்கும். இந்த பங்க் சிறப்பாகப் பராமரிக்கப்பட்டு, நல்ல முறையில் பயன்பாட்டில் இருக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். கடல் ஆம்புலன்ஸ் குறித்த அறிவிப்பு சமீபத்தில்தான் வெளியிடப்பட்டது, அதற்கான பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகின்றன." என்றார்.

தொடர்ந்து பேசிய அமைச்சர் மரிய வில்சன், ``முதல்வர் விஜய் குறித்து ஆபசமாக பேசிய அதிமுக பெண் பேச்சாளர் பேச்சு என்பது திமுக டிஎன்ஏ-வின் மற்றொரு பிரதி. திமுக, அதிமுக, நாம் தமிழர் என எல்லாம் ஒரே டி.என்.ஏ தான். இதில் ஆச்சர்யப்பட எதுவுமில்லை." தனுஷ் மகளிர் அணி நிர்வாகிகள் கூட்டம் குறித்தும், ஒடிசா புயல் குறித்தும் கேள்வி எழுப்பப்பட்டபோது, அதற்கு பதில் சொல்லாமல் கடந்து சென்ற அமைச்சர் மரிய வில்சன், முன்னாள் அமைச்சர் சேகர் பாபு, தவெக-வுக்கு பயம் வந்துவிட்டது எனக் கூறியிருந்தது தொடர்பாக கேட்கப்பட்டது. அதற்கு அமைச்சர் மரிய வில்சன், ``அவரை கண்டுகொள்ளாதீர்கள்... அவரை இக்னோர் செய்யுங்கள்... அவரும் அவருடைய ஸ்டேட்மெண்ட்டும்.." எனத் தெரிவித்திருக்கிறார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://tinyurl.com/2b963ppb
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...https://tinyurl.com/2b963ppb
















