செய்திகள் :

ஆட்சியருக்கு ஆபாச மெசேஜ்: தவெக எம்எல்ஏ மீது சிபிசிஐடி விசாரணை கோரி டிஜிபி-யிடம் ஆர்.எஸ்.பாரதி புகார்

post image

தி.மு.க அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி இன்று (12.11.2026) தமிழ்நாடு அரசின் காவல்துறை தலைமை இயக்குநர் (DGP) அவர்களை நேரில் சந்தித்து, கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் திருமதி ஜே.இ. பத்மஜா, இ.ஆ.ப., அவர்களுக்கு பாலியல் தொல்லை அளித்தல், ஆபாசமான மின்னணுச் செய்திகளை அனுப்புதல்,

அரசு ஊழியரை மிரட்டுதல் மற்றும் அவரது இல்லத்திற்குள் அத்துமீறி நுழைதல் ஆகிய குற்றச்சாட்டுகள் தொடர்பாக, கள்ளக்குறிச்சி சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் திரு சி. அருள் விக்னேஷ் (தமிழக வெற்றிக் கழகம்) மீது FIR) பதிவு செய்யவும், நியாயமான, சுதந்திரமான விசாரணை நடத்தவும் புகார் மனு அளித்திருக்கிறார்.

கள்ளக்குறிச்சி தவெக எம்.எல்.ஏ அருள் விக்னேஷ்
கள்ளக்குறிச்சி தவெக எம்.எல்.ஏ அருள் விக்னேஷ்

அந்தப் புகார் மனுவில்...

குற்றச்சாட்டுகள்

ஆளும் கட்சியைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர் சி. அருள் விக்னேஷ், அரசு ரீதியான தொடர்பு மூலம் கிடைத்த மாவட்ட ஆட்சியரின் கைபேசி எண்ணிற்கு வாட்ஸ்அப் வழியாக ஆபாசமான மற்றும் பாலியல் ரீதியான செய்திகளை அனுப்பியதாகவும், நேரிலும் தகாத முறையில் நடந்து கொண்டதாகவும் ஊடகங்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகளின் அறிக்கைகள் மூலம் தெரியவந்துள்ளது. மேலும், முன் அனுமதியின்றி மதுபோதையில் ஆட்சியரின் அரசு இல்லத்திற்குள் நுழைந்து தொல்லை அளித்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

சட்டப் பிரிவுகள்

இச்செயல்கள் பாரதிய நியாய சன்ஹிதா (BNS) பிரிவுகள் 75 (பாலியல் தொல்லை), 78 (பின்தொடர்தல்), 79 (பெண்ணின் கண்ணியத்தை அவமதித்தல்), 329, 333 (அத்துமீறி நுழைதல்), 351 (மிரட்டல்), 221, 224 (அரசு ஊழியரைத் தடுத்தல்) மற்றும் தகவல் தொழில்நுட்பச் சட்டம் பிரிவு 67, தமிழ்நாடு பெண்கள் வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் ஆகியவற்றின் கீழ் பிணையில் வெளிவர முடியாத குற்றங்களாகும் என மனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

நடவடிக்கை இல்லாதது குறித்து கேள்வி

நவம்பர் 9-ஆம் தேதியே கள்ளக்குறிச்சி மாவட்ட திமுக சார்பில் மாவட்டக் காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளிக்கப்பட்டும், ஆட்சியரின் கணவர் தலைமைச் செயலாளருக்கும் முதலமைச்சருக்கும் கடிதம் எழுதியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியும் இதுவரை எஃப்.ஐ.ஆர் (FIR) பதிவு செய்யப்படவில்லை என ஆர்.எஸ். பாரதி தெரிவித்துள்ளார். உள்கட்சி விசாரணையோ, அமைச்சரின் உறுதிமொழியோ சட்டப்பூர்வ குற்றவியல் விசாரணைக்கு மாற்றாகாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சிங்கப்பெண் சிறப்புப் படை மீது விமர்சனம்

பெண்கள் பாதுகாப்பிற்காக முதலமைச்சரின் நேரடிக் கண்காணிப்பில் உருவாக்கப்பட்ட 'சிங்கப்பெண் சிறப்புப் படை', ஆளும் கட்சி எம்.எல்.ஏ மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளதால் எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் மௌனம் காப்பதாக மனுவில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

ஆர்.எஸ். பாரதி
ஆர்.எஸ். பாரதி

முக்கியக் கோரிக்கைகள்

''சம்பந்தப்பட்ட சட்டமன்ற உறுப்பினர் சி. அருள் விக்னேஷ் மீது உடனடியாக எஃப்.ஐ.ஆர் பதிவு செய்ய வேண்டும்.

உள்ளூர் காவல்துறை ஆளும் கட்சி எம்.எல்.ஏ-வின் செல்வாக்கிற்கு உட்பட வாய்ப்புள்ளதால், விசாரணையை சிபிசிஐடி-க்கு மாற்றி, காவல் கண்காணிப்பாளர் (SP) அந்தஸ்திற்குக் குறையாத பெண் அதிகாரி தலைமையில் விசாரிக்க வேண்டும்.

வாட்ஸ்அப் செய்திகள், அழைப்பு விவரங்கள், ஆட்சியர் இல்லத்தின் சிசிடிவி காட்சிகள் மற்றும் பார்வையாளர் பதிவேடுகளை உடனடியாகப் பறிமுதல் செய்து பாதுகாக்க வேண்டும்.

மாவட்ட ஆட்சியர், அவரது குடும்பத்தினர் மற்றும் ஊழியர்களுக்கு முழுமையான பாதுகாப்பு வழங்க வேண்டும்" என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://tinyurl.com/2b963ppb

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...https://tinyurl.com/2b963ppb

தவெக 6 மாத ஆட்சி: ``முதலமைச்சரின் கட்டுப்பாட்டை மீறி நிர்வாகம் சென்றுவிட்டது.!" - அதிமுக ஜெயக்குமார்

தவெக அரசின் இந்த 6 மாதகால ஆட்சி எப்படி இருந்தது என்பது குறித்து தமிழ்நாட்டின் பிரதான கட்சிப் பிரதிநிதிகளிடம் பேசினோம். அந்த வகையில் முதல் பகுதியில் நாராயணன் திருப்பதியிடம் பேசியவை கட்டுரையாக வந்திருந்... மேலும் பார்க்க

FIIs தொடர் முதலீடு: வரிக் குறைப்பிற்காக நிபுணர்கள் செய்த 'லாபி' - பிரவீன் சக்கரவர்த்தி குற்றச்சாட்டு

இந்த நவம்பர் மாதம் தொடங்கியதிலிருந்து வெளிநாட்டு நிறுவன முதலீட்டாளர்கள் (FIIs) இந்தியாவில் அதிகம் முதலீடு செய்து வருகிறார்கள்.கடந்த ஐந்து நாள்களில் மட்டும் வெளிநாட்டு நிறுவன முதலீட்டாளர்கள் இந்தியாவில... மேலும் பார்க்க

"தமிழ்நாட்டின் ஒப்புதல் இல்லாமல் கர்நாடகா ஒரு பக்கெட் நீரைக்கூட நிறுத்த முடியாது"- துரைமுருகன் உறுதி

``மேகதாது அணையைக் கட்டுவதற்கு யாரிடமும் அனுமதி கேட்கத் தேவையில்லை’’ என்று சமீபத்தில் பேசியிருந்தார் கர்நாடக மாநில முதல்வர் டி.கே.சிவக்குமார். அவரின் இந்தப் பேச்சுக்கு தமிழகத்திலிருந்து கடும் கண்டனங்கள... மேலும் பார்க்க

தவெக 6 மாத ஆட்சி: ``அரசு தவறுகளிலிருந்து பாடம் கற்றுக்கொள்வதாகத் தெரியவில்லை" - நாராயணன் திருப்பதி

தமிழ்நாட்டின் முதல்வராக தவெக தலைவர் விஜய் பதவியேற்று இன்றுடன் 186 நாள்கள் ஆகிறது. புதிய ஒரு கட்சி ஆட்சிக்கு வருகிறது என்றால், ஆட்சிக் களத்தைக் முழுவதுமாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரவே சில காலம் ஆகும்... மேலும் பார்க்க

பெரியார் நூலக விவகாரம்: "போலி நூல்கள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்" - அன்புமணி கோரிக்கை

அகல்விளக்கு பதிப்பகம், பீனிக்ஸ் பதிப்பகம் போன்ற பதிப்பகங்களில் இருந்து எவ்வளவு நூல்கள் வாங்கப்பட்டன? அவற்றின் மதிப்பு என்ன? அவற்றை வாங்குவதற்காகப் பரிந்துரைத்தவர்கள் யார்? கொள்முதல் அனுமதி வழங்கியவர்க... மேலும் பார்க்க

இந்தியாவின் அனல் மின் நிலையத் தலைநகரம் ஆகிறதா தூத்துக்குடி? - எச்சரிக்கும் பூவுலகின் நண்பர்கள்

தூத்துக்குடியில் அமைக்கப்பட இருக்கும் அனல்மின் நிலையம் குறித்து பூவுலகின் நண்பர்கள் அமைப்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறது. அந்த அறிக்கையில், "தூத்துக்குடியில் ஏற்கனவே Moxie, NTPL, SEPC, TNPGCL, DC... மேலும் பார்க்க