செய்திகள் :

"தமிழ்நாட்டின் ஒப்புதல் இல்லாமல் கர்நாடகா ஒரு பக்கெட் நீரைக்கூட நிறுத்த முடியாது"- துரைமுருகன் உறுதி

post image

``மேகதாது அணையைக் கட்டுவதற்கு யாரிடமும் அனுமதி கேட்கத் தேவையில்லை’’ என்று சமீபத்தில் பேசியிருந்தார் கர்நாடக மாநில முதல்வர் டி.கே.சிவக்குமார்.

அவரின் இந்தப் பேச்சுக்கு தமிழகத்திலிருந்து கடும் கண்டனங்கள் எழுந்த நிலையில், இந்த விவகாரம் சம்பந்தமாக தி.மு.க பொதுச்செயலாளரும் முன்னாள் நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகன் தனது காட்பாடி இல்லத்தில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார்.

அப்போது அவர் அளித்த பேட்டியில், ``கர்நாடக முதல்வர் டி.கே.சிவக்குமார் அமைச்சரானதில் இருந்தே மேகதாது அணையை பற்றி பேசிக்கொண்டிருக்கிறார். `நாங்கள் கட்டுவோம்’ என்று அவர் சொல்வதே முடியாத காரியம். காரணம், காவேரி இருமாநிலங்களில் ஓடுகின்ற ஆறு. இதில், எந்தவொரு மாநிலமும் தன்னிச்சையாக அணைகளைக் கட்டுவது, நீரைத் தேக்குவது என்பது முடியாத காரியம்.

எங்கெல்லாம் இரு மாநிலங்களுக்கு இடையில் ஆறுகள் ஓடுகிறதோ, அங்கெல்லாம் பிரச்னைதான். முல்லைப் பெரியாறு, கிருஷ்ணா நதி உள்ளிட்ட ஆறுகளிலும் பிரச்னைகள் இருக்கின்றன. அதனால்தான் முல்லைப் பெரியாறு அணையைப் பலப்படுத்துவது, புதிய அணை கட்டுவது என்பதிலும் கேரளா முடிவெடுக்க முடியாது. அது நம்மைச் சார்ந்த ஒரு பிரச்னை.

துரைமுருகன்

அதேபோலத்தான் காவேரியும். `காவேரியில் நாங்கள் அணை கட்டுவோம்’ என்பதே அபத்தம். அதற்கு வாய்ப்பிருந்தால், இந்நேரம் கட்டியிருப்பார்கள். ஆனால், அதற்கு வாய்ப்பே இல்லை. தமிழ்நாட்டின் ஒப்புதல் உரிமை இல்லாமல், எந்தக் காரணத்தைக்கொண்டும் ஒரு பக்கெட் தண்ணீரைக்கூட அவர்களால் நிறுத்த முடியாது.

`எப்படியாவது ஒப்புதல் வாங்க வேண்டும்’ என்று அவர்கள் நினைக்கிறார்கள். அது நம்மிடம் கிடையாது. சட்டப்படியாக நீதிமன்ற உத்தரவும் இல்லை. நீதிபதி சொல்லிவிட்டால்கூட அணையைக் கட்ட முடியாது. அதற்கான ஆயத்தங்களை எடுக்க வேண்டும். முதலில் மத்திய நீர்வள ஆணையத்துக்குச் செல்ல வேண்டும். வனத்துறை, சுற்றுச்சூழல் அனுமதி என இவ்வளவு பிரச்னைகளைத் தாண்டி வர வேண்டும்.

ஏற்கெனவே, ஒருமுறை நம்மைக் கேட்காமல் மத்திய அரசு அனுமதி கொடுத்ததாகக் கூறி வனத்துறைக்கு அனுப்பினார்கள். அப்போது, `அனுமதி கொடுக்க முடியாது’ என்று அனுப்பிவிட்டார்கள். தடைக்கற்களைத் தாண்டுவது என்பது சுலபம் அல்ல. டி.கே.சிவக்குமார் ஆர்வத்தின் காரணமாகச் சொல்கிறாரே தவிர, அவரின் பேச்சை ஆக்கப்பூர்வமாக எடுத்துக்கொள்ளக் கூடாது’’ என்றார் துரைமுருகன்.

FIIs தொடர் முதலீடு: வரிக் குறைப்பிற்காக நிபுணர்கள் செய்த 'லாபி' - பிரவீன் சக்கரவர்த்தி குற்றச்சாட்டு

இந்த நவம்பர் மாதம் தொடங்கியதிலிருந்து வெளிநாட்டு நிறுவன முதலீட்டாளர்கள் (FIIs) இந்தியாவில் அதிகம் முதலீடு செய்து வருகிறார்கள்.கடந்த ஐந்து நாள்களில் மட்டும் வெளிநாட்டு நிறுவன முதலீட்டாளர்கள் இந்தியாவில... மேலும் பார்க்க

தவெக 6 மாத ஆட்சி: ``அரசு தவறுகளிலிருந்து பாடம் கற்றுக்கொள்வதாகத் தெரியவில்லை" - நாராயணன் திருப்பதி

தமிழ்நாட்டின் முதல்வராக தவெக தலைவர் விஜய் பதவியேற்று இன்றுடன் 186 நாள்கள் ஆகிறது. புதிய ஒரு கட்சி ஆட்சிக்கு வருகிறது என்றால், ஆட்சிக் களத்தைக் முழுவதுமாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரவே சில காலம் ஆகும்... மேலும் பார்க்க

பெரியார் நூலக விவகாரம்: "போலி நூல்கள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்" - அன்புமணி கோரிக்கை

அகல்விளக்கு பதிப்பகம், பீனிக்ஸ் பதிப்பகம் போன்ற பதிப்பகங்களில் இருந்து எவ்வளவு நூல்கள் வாங்கப்பட்டன? அவற்றின் மதிப்பு என்ன? அவற்றை வாங்குவதற்காகப் பரிந்துரைத்தவர்கள் யார்? கொள்முதல் அனுமதி வழங்கியவர்க... மேலும் பார்க்க

இந்தியாவின் அனல் மின் நிலையத் தலைநகரம் ஆகிறதா தூத்துக்குடி? - எச்சரிக்கும் பூவுலகின் நண்பர்கள்

தூத்துக்குடியில் அமைக்கப்பட இருக்கும் அனல்மின் நிலையம் குறித்து பூவுலகின் நண்பர்கள் அமைப்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறது. அந்த அறிக்கையில், "தூத்துக்குடியில் ஏற்கனவே Moxie, NTPL, SEPC, TNPGCL, DC... மேலும் பார்க்க

'மதுரைக்குள் போஸ்டர்கள் ஒட்டக் கூடாது' - போஸ்டர் கலாசாரத்திற்கு முற்றுப்புள்ளி வைத்த மாநகராட்சி

மதுரை பலவற்றுக்கு பெயர் பெற்றிருந்தாலும் மதுரையில் ஒட்டப்படும் அரசியல் போஸ்டர்கள், பிறந்தநாள் போஸ்டர்கள், ரசிகர்களின் சுவரொட்டிகள், விழாக் காலங்களில் வைக்கப்படும் பேனர்கள் போன்றவற்றுக்குத் தனி கவனம் க... மேலும் பார்க்க

வாணியம்பாடி: திருமணத்துக்கு மறுத்த 17 வயது மாணவி கடத்தல்; தாய்மாமன் குடும்பத்தினர் 15 பேர் கைது

திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அருகேயுள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த 17 வயதான மாணவி, தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். மாணவியை அவரது தாய்மாமன் மகன் திருமணம் செய்ய விருப்பம் தெரிவி... மேலும் பார்க்க