செய்திகள் :

ஆட்டோ கட்டணம் உயர்வு: '1.8 கி.மீக்கு ரூ.50' - Waiting Charge, இரவு கட்டணம் எவ்வளவு? அரசு அறிவிப்பு

post image

ஆட்டோக்களுக்குப் புதிய கட்டணம் நிர்ணயித்து உத்தரவைப் பிறப்பித்துள்ளது தமிழ்நாடு அரசு.

2014-ம் ஆண்டு அக்டோபருக்குப் பிறகு, ஆட்டோ கட்டணத்தை உயர்த்தி இப்போதுதான் உத்தரவிட்டுள்ளது.

தமிழ்நாடு அரசின் உத்தரவின் படி,

குறைந்தபட்ச தூரம்: 1.8 கிலோமீட்டர்.

குறைந்தபட்ச கட்டணம்: ரூ.50

கூடுதலாகும் ஒவ்வொரு கிலோமீட்டருக்கும்: ரூ.25

காத்திருப்புக் கட்டணம்: ஒரு நிமிடத்திற்கு ரூ.1

மலைப்பாதைக் கட்டணம்: குறைந்தபட்சக் கட்டணத்தில் இருந்து 1.2 மடங்கு.

ஆட்டோ கட்டணம் உயர்வு
ஆட்டோ கட்டணம் உயர்வு

அடிப்படைக் கட்டணம் ரூ.60; கூடுதலாக ஆகும் ஒவ்வொரு கிலோமீட்டருக்கு ரூ.30.

இரவு நேரக் கட்டணம்: இரவு 10 மணி முதல் அதிகாலை 5 மணி வரை வழக்கமான கட்டணத்தில் இருந்து 1.5 மடங்கு உயர்வு.

எந்தெந்தப் பகுதிகளுக்கு இந்த உத்தரவு?

1988-ஆம் ஆண்டின் மோட்டார் வாகனச் சட்டத்தின் கீழ், சென்னை பெருநகரப் பகுதி மற்றும் தமிழ்நாட்டின் பிற பகுதிகளில் இயங்கும் ஒப்பந்த ஊர்தி (Contract Carriage) ஆட்டோ ரிக்‌ஷாக்களுக்கான கட்டண விகிதங்களை உயர்த்துதல் தொடர்பான அறிவிப்பு என்று தமிழ்நாடு அரசின் உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

`நீங்க ஊறுகாயா தொட்டுக்க நான் தான் கிடைச்சேனா.?' - சசிகலாவை நீக்கிய அஇபுதமமுக சக்ரவர்த்தி பேட்டி

`அகில இந்திய புரட்சித் தலைவர் மக்கள் முன்னேற்றக் கழக'த்திலிருந்து அதன் பொதுச் செயலாளர் வி.கே. சசிகலாவை கட்சியின் தலைவர் சக்ரவர்த்தி நீக்கியிருக்கிறார்.கடந்த சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன் கட்சியின் பொ... மேலும் பார்க்க

இஸ்ரேல் தேர்தல் முடிவுகள் Tie? நெதன்யாகுவின் பெரும்பான்மைக்குச் சிக்கல்? வெளியான கருத்து கணிப்புகள்

இஸ்ரேலில் நேற்று (அக்டோபர் 27) நாடாளுமன்றத் தேர்தல் நடந்து முடிந்திருக்கிறது.2023-ம் ஆண்டு அக்டோபர் ஹமாஸ் தாக்குதலுக்குப் பிறகும், ஈரான் போருக்குப் பிறகும், இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு சந்திக்கும் முதல்... மேலும் பார்க்க

முதிய பெற்றோரைக் கைவிட்டால் 3 ஆண்டுகள் சிறை; கேரள முதியோர் பாதுகாப்பு மசோதாவின் சிறப்புகள் என்னென்ன?

கேரளத்தில் முதியோர்களின் நலன், கண்ணியம் மற்றும் உரிமைகளைப் பாதுகாப்பதை உறுதிசெய்யும் நோக்கில் கொண்டுவரப்பட்ட ‘2026-ம் ஆண்டின் கேரள மூத்த குடிமக்கள் பராமரிப்பு மற்றும் உரிமைகள் பாதுகாப்பு மசோதா’ சட்டப்... மேலும் பார்க்க

DPDP: `பத்திரிகை சுதந்திரம் கேள்விக்குறியாகும்'- வழக்கு தொடர்ந்த 21 செய்தி நிறுவனங்கள்; விவரம் என்ன?

டிஜிட்டல் செய்தி இணையதளங்களின் செயல்பாடுகளுக்கும் பத்திரிகைச் சுதந்திரத்துக்கும் மத்திய அரசின் தனிநபர் தரவுப் பாதுகாப்புச் சட்டம் (DPDP Act) அச்சுறுத்தலாக இருப்பதாகக் கூறி, இந்தியாவின் 21 முன்னணி செய்... மேலும் பார்க்க

``ஒரே நாளில் 17 கைதிகள் சிறையிலிருந்து தப்பிச் செல்லும் அவலநிலை நிலவுகிறது” - கனிமொழி சாடல்!

தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த தூத்துக்குடி மக்களவைத் தொகுதி உறுப்பினர் கனிமொழி, ”தமிழக வெற்றிக் கழகம் ஆட்சிப் பொறுப்பேற்றுக் கொண்டதிலிருந்து தமிழ்நாடு முழுவதும் கிட்டத்தட்ட ... மேலும் பார்க்க