இரவு பார்ட்டிக்கு எதிர்ப்பு, கேமரா மூலம் கண்காணிப்பு: ஆத்திரத்தில் மாமனாரை ஆள்வை...
`ஆளுங்கட்சியினர் அதிமுகவினரை தாஜா செய்கிறார்கள்; இடைத்தேர்தலில் நாங்கள்..!' - எடப்பாடி பழனிசாமி
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசியிருக்கிறார்.
"இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள இரண்டு தொகுதிகளும் (மதுராந்தகம், தாராபுரம்) ஏற்கெனவே அதிமுக வெற்றி பெற்ற இடங்கள். ஆனால், குதிரை பேரம் நடத்தி எங்களின் எம்.எல்.ஏ-க்களை ராஜினாமா செய்ய வைத்தார்கள்.
இரண்டு தொகுதிகளிலும் அதிமுக வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டு, அவர்கள் வெற்றி பெறுவார்கள். எங்கள் இயக்கத்தில் இருக்கும் சிலரை ஆளுங்கட்சியினர் தாஜா செய்துகொண்டிருக்கின்றனர்.

ஏனென்றால் ஆளுங்கட்சிக்கு போதிய பலம் இல்லை. தவெக ஆட்சி அமைப்பதற்கு சில கட்சிகள் துணை நின்றன. ஆனால் அந்தக் கட்சிகளிடம் இருந்தே எதிர்ப்பு வந்துவிட்டது.
சட்டமன்றத்தில் ஆளுங்கட்சியும், எதிர்க்கட்சியும் பிரச்னைகளைப் பேசுகிறார்களே தவிர, மக்கள் பிரச்னைகளைப் பற்றி பேசுவதில்லை. ஆளுங்கட்சி செய்யும் தவறுகளைச் சுட்டிக்காட்டி கேள்வி எழுப்புகிறோம். ஆனால், ஆளுங்கட்சி தரப்பில் இருந்து எந்த பதிலும் கொடுக்கப்படவில்லை" என்று தெரிவித்திருக்கிறார்.

















