செய்திகள் :

"ஆளும் கட்சியை விட எதிர்க்கட்சிகளின் குரல் வலிமை பெற வேண்டும்" - சட்டசபையில் வன்னியரசு பேச்சு

post image

தமிழ்நாடு சட்டமன்ற சபாநாயகராகப் போட்டியின்றி இன்று ஜே.சி.டி.பிரபாகர் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்.

புதிய சபாநாயகருக்கு எம்எல்ஏக்கள் அனைவரும் சட்டசபையில் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

அந்தவகையில் சட்டசபையில் பேசிய விசிக எம்எல்ஏ வன்னியரசு, "'பெரும்பான்மை மக்களை விட சிறுபான்மை மக்களின் குரல் வலுப்பெற வேண்டும்.

விசிக வன்னியரசு
விசிக வன்னியரசு

அப்போதுதான் நாடு செழுமை பெறும்' என்று அம்பேத்கர் கூறியதைப் போல இந்தச் சட்டசபையில் ஆளும் கட்சியை விட எதிர்க்கட்சிகளின் குரல் வலிமை பெற வேண்டும்.

எதிர்க்கட்சிகளின் நியாயங்களை சபாநாயகர் புரிந்துகொள்ள வேண்டும். பாகுபாடு இல்லாமல் சட்டசபையை சபாநாயகர் வழிநடத்த வேண்டும். விசிக சார்பில் இரண்டு உறுப்பினர்கள் அவைக்கு வந்திருக்கிறோம். எங்களின் குரல் தமிழ்நாட்டின் குரல். தேசத்தின் குரல். அது அவையில் மறுக்கப்படக்கூடாது.

இன்று 717 மதுக்கடைகளை மூட வேண்டும் என்று முதல்வர் கையெழுத்திட்டதை விசிக வரவேற்கிறது. அதேபோல முன்னாள் முதல்வர் மற்றும் அரசியல் தலைவர்களைச் சந்தித்து முதல்வர் மேற்கொண்ட நாகரிக அரசியலை வரவேற்கிறோம்" என்று வன்னியரசு பேசியிருக்கிறார்.

'ஆளும்கட்சி உறுப்பினர்களை விட மற்ற கட்சி உறுப்பினர்களின் எண்ணிக்கைதான் அதிகம், அதனால்.!'- ஸ்டாலின்

தமிழ்நாடு சட்டமன்ற சபாநாயகராகத் தேர்வாகி இருக்கும் ஜே.சி.டி.பிரபாகருக்கு தமிழக முன்னாள் முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்து எக்ஸ் தளப்பக்கத்தில் பதிவு ஒன்றைப் பதிவிட்டிருக்கிறார். அவர் வெளியிட்டிருக... மேலும் பார்க்க

"நானும் முதல்வரும் ஒரே கல்லூரியில் படித்தவர்கள்தாம்; ஆனால்" - உதயநிதி பேச்சைக் கேட்டு சிரித்த விஜய்

தமிழ்நாடு சட்டமன்ற சபாநாயகராகப் போட்டியின்றி இன்று ஜே.சி.டி.பிரபாகர் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். புதிய சபாநாயகருக்கு எம்எல்ஏக்கள் அனைவரும் சட்டசபையில் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர். அந்த வக... மேலும் பார்க்க

'சபாநாயகரை ஏன் அவை முன்னவரும், எதிர்க்கட்சி தலைவர் அமர வைக்கிறார்கள்?' - விஜய் சொன்ன குட்டி வரலாறு

தமிழ்நாடு சட்டமன்றம் இன்று கூடியுள்ளது. சபாநாயகராக தவெக சட்டமன்ற உறுப்பினர் ஜே.சி.டி.பிரபாகர் தேர்ந்தெடுக்கப்பட்டு, சபாநாயகர் இருக்கையில் அமர வைக்கப்பட்டார். அதன் பின், ஒவ்வொரு கட்சிக்கும் பேச வாய்ப்ப... மேலும் பார்க்க

"இன்றும் இந்தியர்கள் 'கூலி' என இகழப்படுகிறோம்; அதே கூலியின் வாரிசு தான் நான்' - ட்ரினிடாட் பிரதமர்

பீகாரின் ஒரு குக்கிராமத்தில் வறுமையின் பிடியில் சிக்கி, பிழைப்புக்காகக் கப்பல் ஏறிய ஓர் ஏழைத் தொழிலாளியின் வாரிசுதான் பின்னாளில் ஒரு நாட்டின் பிரதமராக உயர்வார் என்று அன்று எவரும் கற்பனை செய்துகூடப் பா... மேலும் பார்க்க

சட்டசபை: "அரசு சிறப்பாகச் செயல்பட, எதிர்க்கட்சிகளுக்குப் பேச வாய்ப்பு தாருங்கள்" - இபிஎஸ்

தமிழ்நாடு சட்டமன்ற சபாநாயகராகப் போட்டியின்றி இன்று ஜே.சி.டி.பிரபாகர் தமிழ்நாடு சட்டமன்ற சபாநாயகராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். புதிய சபாநாயகருக்கு எம்எல்ஏக்கள் அனைவரும் சட்டசபையில் வாழ்த்துகளைத்... மேலும் பார்க்க