செய்திகள் :

இடைத்தேர்தல்: ``தவெக, திமுக, அதிமுக முகாமிட்டு பணம் கொடுக்கின்றனர்" - சிபிஐ வீரபாண்டியன்

post image

தேர்தல் ஆணையத்தின் மீதான குற்றச்சாட்டுக்கு எதிராகவும், தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும் எனவும் இடதுசாரி கட்சிகள் சென்னையில் போராட்டம் நடத்தின. அப்போது செய்தியாளர்களிடம் பேசிய சிபிஐ வீரபாண்டியன், ``CPI, CPI(M)0, CPI(ML), SUCI உள்ளிட்ட அனைத்து இடதுசாரி இயக்கங்களும் இணைந்து இப்போராட்டத்தை முன்னெடுத்துள்ளோம். உலகிலேயே மிகப்பெரிய நாடாளுமன்ற ஜனநாயகத்தைக் கொண்ட நாடு இந்தியா. இத்தனை கோடி மக்களும், பல அரசியல் கட்சிகளும் பங்கேற்கும் இந்த ஜனநாயகச் சிறப்பையே உலக அறிஞர்கள் ‘ஜனநாயகத்தின் திருவிழா’ (Festival of Democracy) என்றும், ‘ஜனநாயகத்தின் நடனம்’ (Dance of Democracy) என்றும் போற்றினர். அத்தகைய சிறப்பியல்பு கொண்ட இந்திய ஜனநாயகத்தின் உயிரை ஒன்றிய அரசு இன்றைக்கு நெரித்துள்ளது.

முதல்வர் விஜய் - சத்தியபாமா
முதல்வர் விஜய் - சத்தியபாமா

சதிகளின் மூலம் சுமார் 13 கோடி மக்களின் வாக்களிக்கும் உரிமையைத் தடை செய்து படுகொலை புரிந்துள்ள நிலைக்குத் தார்மீக மற்றும் நேரடிப் பொறுப்பேற்று தலைமை தேர்தல் ஆணையர் உடனடியாகப் பதவி விலக வேண்டும். அவர் பதவி விலகும் வரை இடதுசாரிகளின் இந்தப் போராட்டம் தொடர்ந்து தீவிரமாக நடைபெறும். உலகில் மக்கள் அதிகாரத்தின் குறியீடாக விளங்குவது வாக்குச்சீட்டுதான். செருப்பு தைக்கும் ஏழைத் தொழிலாளி முதல் அம்பானி வரை யார் வாக்களித்தாலும் அதற்கு ஒரே மதிப்புதான்.

நாடாளுமன்ற ஜனநாயகம் மற்றும் அரசியல் சமத்துவத்தின் அடித்தளத்தையே நாட்டின் பிரதமர் மோடியும், உள்துறை அமைச்சர் அமித் ஷாம் கழுத்தறுத்து சிதைத்துவிட்டனர்.

தற்போது நடைபெறவுள்ள தேர்தலில் இடதுசாரிகள் சார்பில் தாராபுரம், மதுராந்தகம் ஆகிய தொகுதிகளில் வேட்பாளர்கள் களம் காண்கின்றனர். ஆனால், இத்தொகுதிகளில் திமுக, அதிமுக, தவெக ஆகிய கட்சிகளைச் சேர்ந்த பெரும் வசதி படைத்தவர்கள் முகாமிட்டு, இந்திய-பாகிஸ்தான் பிரிவினையின் போது எல்லையைக் குறிக்க தூங்காமல் கணக்கெடுத்த ராட்க்ளிஃப் (Radcliffe) போல, வீடு வீடாகச் சென்று ஆய்வு நடத்துகின்றனர்.

வீரபாண்டியன்
வீரபாண்டியன்

கொள்கைகளைப் பேசாமல், எந்த வீட்டுக்கு எத்தனை வாக்குகள் இருக்கின்றன, ஒரு வாக்கிற்கு எவ்வளவு பணம் கொடுக்கலாம் என்று கணக்கெழுதும் வேலையிலேயே அவர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். டாக்டர் அம்பேத்கர் கூறியது போல, வாக்குச்சீட்டு என்பது நீண்ட நெடிய போராட்டத்தின் ரத்தத் திட்டு. ஒரு மனிதன் தனது கதியைத் தானே தீர்மானிக்கும் அதிகாரம் கொண்ட முக்கியக் கருவி. அத்தகைய வாக்குச்சீட்டை விலை பேசுவதும், அதற்கு விலையாவதும் பெரும் குற்றச் செயலாகும்.

இத்தகைய குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்களை வரலாறு நிச்சயமாகக் குற்றவாளிக்கூண்டில் நிறுத்தும். கம்யூனிஸ்ட் கட்சியின் தோழர்கள் வீடு வீடாகச் சென்று ஏழை எளிய மக்களின் முகங்களைப் பார்த்து, வாக்குச்சீட்டின் மதிப்பையும் அதன் ஜனநாயகப் பெருமையையும் எடுத்துரைத்து வாக்கு சேகரித்து வருகின்றனர். மாற்றாக, எதிர்முகாமில் உள்ளவர்கள் கொள்கை அரசியல் பேசத் திராணியின்றி, தனிப்பட்ட விமர்சனங்களிலும் பெண்களைப் பற்றிய கீழ்த்தரமான பேச்சுகளிலும் ஈடுபட்டு வருகின்றனர். எனவே, தந்தை பெரியார், டாக்டர் அம்பேத்கர், மகாத்மா காந்தி மற்றும் மார்க்ஸிய கொள்கை வழிநின்று மக்களுக்காகப் போராடும் கம்யூனிஸ்டுகளின் அரசியலைச் சீர்தூக்கிப் பார்த்து, தமிழ்நாட்டு மக்கள் இடதுசாரிகளுக்குச் சட்டமன்றத்தில் வாய்ப்பளித்து நல்ல தீர்ப்பை வழங்க வேண்டும்." என்றார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://tinyurl.com/2b963ppb

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...https://tinyurl.com/2b963ppb

`தொழில் நிறுவனங்களுக்கு மின்சாரம் வழங்காமல் ஜெனரேட்டர்களை இயக்கச் சொல்வதா?' - நயினார் கண்டனம்!

"ஜெனரேட்டர்களை இயக்கிக்கொள்ளுமாறு உயர் அழுத்தத் தொழில் நிறுவனங்களை தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகம் (TNPDCL) அறிவுறுத்துவது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது" என்று தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தவெக... மேலும் பார்க்க

'முதல்வர் விஜய்யின் வீட்டுக்கு எதிரே நடைபாதையில் தவெகவினரின் அபாய பேனர்!' - கவனிக்குமா தலைமை?

முதல்வர் விஜய்யின் பட்டினப்பாக்கம் வீட்டுக்கு எதிரே மக்கள் நடப்பதற்காக அமைக்கப்பட்டிருக்கும் நடைமேடையில் தவெகவினர் தொடர்ந்து அபாயமான முறையில் பேனர் வைத்து இடையூறு ஏற்படுத்துவதாக மக்கள் புகார் கூறுகின்... மேலும் பார்க்க

கோவை : பெருமாள்முடி, மேல்முடி கோவில்களுக்கு செல்ல பக்தர்களுக்கு கட்டுப்பாடு – காரணம் என்ன?

கோவை மாவட்டம் ஆனைக்கட்டி அருகேயுள்ள பெருமாள் முடி மற்றும் மேல்முடி ஆகிய மலைப்பகுதியில் உள்ள கோவில்களுக்கு புரட்டாசி மாத சனிக்கிழமைகளில் மட்டுமே பக்தர்கள் செல்ல அனுமதி அளிக்கப்பட்டு வருகிறது. இதனிடையே ... மேலும் பார்க்க

’கேப்டன் ஆன்மா பற்றி பேசுவதற்கு ஆதவ் அர்ஜூனாவிற்கு அருகதையே கிடையாது’ –பிரேமலதா விஜயகாந்த் காட்டம்!

கோவை விமான நிலையத்தில் தே.மு.தி.க பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், “தே.மு.தி.க, தி.மு.க கூட்டணியில் இருப்பதால் கூட்டணி தர்மத்தை மதித்து ஸ்டாலி... மேலும் பார்க்க

கும்பகோணம் நிதி நிறுவன விவகாரம்: திமுக எம்.பி கல்யாணசுந்தரம் உட்பட 4 பேர் மீது வழக்கு பதிவு!

கும்பகோணம் பரஸ்பர ஸகாய நிதி நிறுவன லிமிட்டெடில் தலைவராக திமுக ராஜ்ய சபா எம்.பி கல்யாணசுந்தரம் இருந்து வந்தார். இதன் இயக்குநராக முன்னாள் திமுக எம்.எல்.ஏ அன்பழகன், நிர்வாக இயக்குநராக வேலப்பன், கூடுதல் இ... மேலும் பார்க்க