செய்திகள் :

"இந்தியாவின் சிறந்த முதலமைச்சர்களில் ஸ்டாலினும் ஒருவர்..!" - CJP அபிஜித் தீப்கே

post image

கரப்பான்பூச்சி ஜனதா கட்சியின் நிறுவனர் அபிஜித் தீப்கே. டெல்லி ஜந்தர் மந்தரின் போராட்ட வெற்றிக்குப் பிறகு, இந்தியாவில் உள்ள பல மாநிலங்களின் பள்ளிகளுக்கு சென்று, அங்குள்ள கட்டமைப்புகளைப் பார்வையிட்டு வருகிறார்.

அவர் செல்லும் இடங்களில் கட்டமைப்பு மோசமாக இருந்தால், அதை சமூக வலைதளங்களில் பதிவிட்டு, அனைவரின் கவனத்திற்கும் கொண்டு வருகிறார்.

இந்த நிலையில், நேற்று தொலைகாட்சி பேட்டி ஒன்றில் பங்கேற்றிருக்கிறார். அதில் அவரிடம், 'இந்தியாவில் சிறந்த முதலமைச்சர் யார்?' என்கிற கேள்வி கேட்கப்பட்டது.

திமுக தலைவர் ஸ்டாலின்
திமுக தலைவர் ஸ்டாலின்

"தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருந்த மு.க. ஸ்டாலின் இந்தியாவின் சிறந்த முதலமைச்சர்களில் ஒருவர். அவர் பொருளாதாரத்தை நல்ல நிலைக்கு கொண்டு வந்திருந்தார்.

கேரளாவில் பினராயி விஜயன் கல்வி மற்றும் சுகாதார மாதிரியை மிக நன்றாக அமைத்தார்.

டெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவாலும் பள்ளிகள் மற்றும் சுகாதாரத் துறையில் நன்றாக பணியாற்றி இருக்கிறார். நேர்மையாக சொல்ல வேண்டுமானால், இன்னும் நிறைய பேர் இருக்கிறார்கள். நன்றாக பணியாற்றி இருக்கிறார்கள்" எனத் தெரிவித்தார்.

"சோஃபா செட் இல்ல, லாக்கரே வந்தாலும்கூட தேமுதிக தன்னுடைய..!"- கூட்டணி மாறுவது குறித்து பிரேமலதா

தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் நேற்று (ஆகஸ்ட். 25) கடலூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டிருக்கிறார். கூட்டத்தில் பேசிய அவர், "நமக்கு (தேமுதிக) என்ன அழைப்பு வரவில்லை என்று நினைக்க... மேலும் பார்க்க

'அப்படி பேசியிருக்கக் கூடாது..!'- மதிமுக குறித்து பேசிய செங்கோட்டையன்; துரை வைகோ ரியாக்ஷன் என்ன?

மதிமுக குறித்த தவெக அமைச்சர் செங்கோட்டையனின் பேச்சு குறித்து அக்கட்சியின் முதன்மைச் செயலாளர் துரை வைகோ பேசியிருக்கிறார்.கோபிசெட்டிப் பாளையத்தில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் பேசிய அமைச்சர் செங்கோட்டையன... மேலும் பார்க்க

ஈரானுடன் வணிகம் செய்த 4 இந்திய நிறுவனங்கள்; இப்போது அமெரிக்காவின் ‘தடை’ வலையில்! என்ன நடக்கும்?

ராணுவத் தாக்குதலிலிருந்து பொருளாதாரத் தாக்குதலுக்கு மாறியுள்ளது ஈரான் போர். அமெரிக்க அரசு ஈரானுக்கு எதிராக ‘Operation Economic Outcast’ என்கிற ஆபரேஷனைத் தொடங்கியுள்ளது. இதன்படி, ஈரானுடன் வணிகம் செய்யு... மேலும் பார்க்க

அமெரிக்க வரியால் வணிகங்களுக்கு பாதிப்பு; இதனால், அவற்றுக்கு $7.5 பில்லியன் கனட அரசு உதவி!

கடந்த ஆகஸ்ட் 22-ம் தேதி முதல், கனடாவில் இருந்து அமெரிக்காவிற்கு இறக்குமதி ஆகும் சில பொருள்களுக்கு 50 சதவிகித வரியை விதித்திருக்கிறார் அமெரிக்க அதிபர் ட்ரம்ப். மேலும், “2027-ம் ஆண்டு ஜனவரி 1-ம் தேதி மு... மேலும் பார்க்க

கச்சா எண்ணெய் விலையில் அமெரிக்காவிற்கும், ட்ரம்பிற்கும் சறுக்கல்; ஓமன், ஈரானுக்கு சக்சஸ்?

ஈரான் போர் காரணமாக, கடந்த சில நாள்களாகவே கச்சா எண்ணெய் விலை ஒரு பீப்பாவிற்கு 90 டாலர்களைத் தாண்டி விற்பனையாகிக் கொண்டிருந்தது. இந்த நேரத்தில்தான், கடந்த 19-ம் தேதி, ஈரானுக்கு எதிரான ‘பொருளாதார D-Day’-... மேலும் பார்க்க