செய்திகள் :

இந்தியா கூட்டணி: பழைய கம்பீரம்; மாறாத பாணி- மாதிரி நடாளுமன்றத்தில் மீண்டும் ஒலித்த மீரா குமார் குரல்

post image

இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரைப் பதவி நீக்கம் செய்யக் கோரி டெல்லியில் நேற்று (அக்.31) இந்தியா கூட்டணிக் கட்சிகள் நடத்திய மாதிரி நாடாளுமன்றத்தில் ஒருமனதாகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவின் இல்லத்திற்கு வெளியே உள்ள காலியிடத்தில் இந்த மாதிரி நாடாளுமன்ற அமர்வு நடைபெற்றது.

மாதிரி நாடாளுமன்றம்
மாதிரி நாடாளுமன்றம்

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களான சோனியா காந்தி, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, கே.சி.வேணுகோபால், ப.சிதம்பரம், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் மாணிக்கம் தாகூர், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் எம்.பி., மதிமுகவின் தலைமை நிலையச் செயலாளர் துரை வைகோ எம்.பி., தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

மாதிரி நாடாளுமன்றக் கூட்டத்தில், மீரா குமார் மீண்டும் சபாநாயகர் இருக்கையில் அமர்ந்து கூட்டத்தை வழிநடத்தியது அரசியல் வட்டாரத்தில் கவனம் பெற்றுள்ளது.

81 வயதான மீரா குமார், கடந்த 2009 முதல் 2014 வரை மக்களவை சபாநாயகராகப் பொறுப்பு வகித்தவர். இந்தியாவின் முதல் பெண் மக்களவை சபாநாயகர் என்ற பெருமையும் அவருக்கு உண்டு. அவையில் உறுப்பினர்கள் பேசும்போது நேரத்தைப் பின்பற்றச் செய்வது, விதிமுறைகளை மதிக்க வைப்பது, அதே நேரத்தில் கண்ணியத்தைக் காப்பது ஆகியவற்றில் தனக்கென ஒரு பாணியை அவர் உருவாக்கியிருந்தார்.

மீரா குமார்
மீரா குமார்

அந்தப் பழைய பாணியையே டெல்லியில் நடைபெற்ற மாதிரி நாடாளுமன்றக் கூட்டத்திலும் மீண்டும் வெளிப்படுத்தியிருக்கிறார்.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீரா குமார் மீண்டும் சபாநாயகர் இருக்கையில் அமர்ந்து, தனது பழைய கம்பீரமான குரலில் உறுப்பினர்களை வழிநடத்தியக் காட்சி இணையத்தில் வைரலாகி இருக்கிறது.

ஜெர்மனியில் வெடித்த Gen Z போராட்டம்: 34 நகரங்களின் வீதியில் இறங்கிய இளைஞர்கள்!

ஜெர்மனியில் கல்வி மற்றும் பொதுச் சேவைகளுக்கான நிதியை அதிகரிக்க வலியுறுத்தியும், கட்டாய ராணுவ சேவைத் திட்டத்தைக் கைவிடக் கோரியும் இளைஞர்கள் தீவிரப் போராட்டத்தில் இறங்கியுள்ளனர். 'Gen Z regelt' என்ற அமை... மேலும் பார்க்க

"இப்போதெல்லாம் மின்கட்டணத்தைக் கேட்டாலே ஷாக் அடிக்குது"- தவெக வை விமர்சித்த எடப்பாடி பழனிசாமி

செங்கல்பட்டில் நேற்று(அக்.31) அதிமுக பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, ''தற்போதைய ஆட்சியில் மின்சாரம் எப்போது வரும் எப்போது போகும் என்றே தெரிய... மேலும் பார்க்க

அதிமுக-விலிருந்து வேலுமணி, சி.வி.சண்முகம் நீக்கம்? - இ.பி.எஸ் எடுத்த அதிரடி முடிவு?

அ.தி.மு.கவிலிருந்து முன்னாள் அமைச்சர்கள் சி.வி.சண்முகம் மற்றும் எஸ்.பி.வேலுமணியை நீக்க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதற்கான அறிவிப்பு விரைவில் வரலாம்... மேலும் பார்க்க

தங்கை மகளின் திருமணம்; எலஹங்கா அரண்மனையை மறுத்த ஜெகன்; `கீழ்த்தரமானவள் நான் அல்ல' - ஷர்மிளா வேதனை

ஆந்திரப் பிரதேச காங்கிரஸ் தலைவரும், முன்னாள் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியின் சகோதரியுமான ஒய்.எஸ். ஷர்மிளா, தனது மகளின் திருமணத்திற்காக குடும்பச் சொத்தைப் பயன்படுத்த ஜெகன் மறுத்ததையடுத்து, திருமண இடத்த... மேலும் பார்க்க

'டெல்லியின் மெசேஜ்' - இடைத்தேர்தலுக்கு விஜய் போடும் ஸ்கெட்ச்! - திட்டம் என்ன?

தமிழகத்தில் 5 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் விரைவில் நடக்குமென எதிர்பார்க்கப்படும் நிலையில், முதல்வர் விஜய் இடைத்தேர்தலை மனதில் வைத்து அரசு நிகழ்ச்சிகளை நடத்தத் திட்டமிட்டிருக்கிறார். முதல்வர் விஜய்தமிழ... மேலும் பார்க்க