செய்திகள் :

"இந்திய புராண கதைகளை திரையில் காட்சிப்படுத்திய விதம் எனக்கு திருப்தி அளித்ததே இல்லை!" - ராஜமெளலி

post image

இயக்குநர் எஸ்.எஸ். ராஜமௌலி, 'வாரணாசி' பட வேலையில் பரபரப்பாக இயங்கி வருகிறார். இப்படத்தில் மகேஷ் பாபு, பிரியங்கா சோப்ரா, பிரித்விராஜ் ஆகியோர் முதன்மைக் கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்கள்.

Mahesh Babu - Varanasi
Mahesh Babu - Varanasi

சமீபத்தில் 'எம்பயர் ஃபிலிம் பாட்காஸ்ட்' நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய ராஜமௌலி, இதுவரை இந்திய புராணக் கதைகள் திரையில் காட்சிப்படுத்தப்பட்ட விதம் குறித்துத் தனது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார்.

அவர் பேசுகையில், "ராமாயணம் மற்றும் மகாபாரதம் ஆகிய எங்களது புராணங்கள் இதுவரை திரையில் காட்சிப்படுத்தப்பட்ட விதம் எனக்கு முழுத் திருப்தியை அளித்ததே இல்லை.

அந்தப் புராணக் கதைகளை இன்னும் பிரமாண்டமான முறையில் ரசிகர்களுக்குக் கொண்டு சேர்க்க வேண்டும் என்ற எனது நீண்ட நாள் கனவின் விளைவுதான் இந்த 'வாரணாசி'. இந்தப் படத்தில் ராமாயணத்தைத் தழுவிய ஒரு பிரத்யேகக் காட்சி உள்ளது.

SS Rajamouli - Varanasi
SS Rajamouli - Varanasi

அந்த லுக்கில் மகேஷ் பாபுவைப் பார்த்தபோதே எனக்குச் சிலிர்த்துவிட்டது. பொதுவாகவே அவர் தன் 100% உழைப்பைக் கொடுப்பார் என்று எனக்குத் தெரியும்.

ஆனால் இந்தப் படத்திற்காக அவர் தன் 200% உழைப்பைக் கொடுத்து என்னை வியப்பில் ஆழ்த்தியுள்ளார். நாம் எதிர்பார்த்ததை விடவும் அந்தப் பாத்திரத்தை அவர் மிகச் சிறப்பாகச் செய்திருக்கிறார்.

இந்தக் குறிப்பிட்ட ராமர் காட்சியை மட்டும் நாங்கள் சுமார் 60 நாட்கள் படமாக்கினோம். இது விஷுவல் ரீதியாக மட்டுமன்றி, உணர்ச்சிப்பூர்வமாகவும் ரசிகர்களைப் பெரிதும் தொடும்!" எனப் பகிர்ந்திருக்கிறார்.

"திருமணம் செய்து கொள்ளலாம் என ஒரு வருடத்திற்கும் மேலாக கேட்டுக்கொண்டே இருந்தேன்!" - ராஷ்மிகா மந்தனா

விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா மந்தனா இணைந்து நடித்திருக்கும் 'ரணபலி' திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகியிருக்கிறது. திருமணத்திற்குப் பிறகு இவர்கள் சேர்ந்து நடிக்கும் திரைப்படம் இதுதான். விஜய் தேவ... மேலும் பார்க்க

Ranabali: "என்னை பார்த்து ஓவர் ஆக்டிங் என்று சொன்னாலும் பரவாயில்லை!" - ராஷ்மிகா மந்தனா

விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா மந்தனா நடித்திருக்கும் 'ரணபலி' திரைப்படம், இம்மாதம் 16-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இப்படத்தின் விளம்பரப் பணிகளில் படக்குழுவினர் ஈடுபட்டு வருகிறார்கள். அதில் பல்வேறு... மேலும் பார்க்க

'கீதா கோவிந்தம் படத்தின் முதல் நாள்... விஜய் தேவரகொண்டா கோபப்பட்டு கத்திவிட்டார்; நான்.!" - ராஷ்மிகா

‘கீதா கோவிந்தம்’, ‘டியர் காம்ரேட்’ ஆகிய படங்களுக்குப் பிறகு நடிகர் விஜய தேவரகொண்டா - நடிகை ரஷ்மிகா மந்தனா இருவரும் இணைந்து நடித்திருக்கும் படம் 'ரணபலி'. இயக்குநர் ராகுல் சங்கிருதயன் இயக்கத்தில் உருவாக... மேலும் பார்க்க

ரணபலி: ``நான் விஜய் தேவரகொண்டாவுக்கு நேரெதிரானவள்" - நடிகை ராஷ்மிகா மந்தனா

நடிகர் விஜய தேவரகொண்டா - நடிகை ரஷ்மிகா மந்தனா இருவரும் இணைந்து ரணபலி திரைப்படத்தில் நடித்திருக்கின்றனர். ‘கீதா கோவிந்தம்’, ‘டியர் தோழன்’ ஆகிய வெற்றிகரமான படங்களுக்குப் பிறகு இவர்கள் இருவரும் இணைந்து ந... மேலும் பார்க்க

Janhvi Kapoor: ``பாலியல் அத்துமீறலுக்குச் சமமானது... சும்மா விடக் கூடாது" - நடிகர் விஜய் தேவரகொண்டா

AI தொழிற்நுட்பம் எந்தளவு வசதிகளைக் கொடுக்கிறதோ அதே அளவு இடைஞ்சல்களையும், மன உளைச்சலையும் கொடுக்கிறது. சமீபகாலமாக Deepfake தொழிற்நுட்பம் மூலம் நடிகளைகள் பெரும் சவால்களை எதிர்கொண்டு வருகின்றனர்.சில மாதங... மேலும் பார்க்க

Janhvi Kapoor: ``கண்டனம் தெரிவிக்கும் நோக்கில்கூட அந்த வீடியோவை பார்க்காதீங்க" - நடிகர் சிரஞ்சீவி

கொரட்டாலா சிவா இயக்கத்தில் 2024 செப்டம்பரில் வெளியான திரைப்படம் 'தேவரா: பார்ட் 1'. ஜூனியர் என்.டி.ஆர், ஜான்வி கபூர் உள்ளிட்டவர்கள் நடித்திருந்த இந்தப் படத்துக்கு அனிருத் இசையமைத்திருந்தார். இந்தப் படத... மேலும் பார்க்க