செய்திகள் :

"இன்னைக்கு ₹80,000 செலவு... அதுவே 15 வருஷம் கழிச்சு?" - NRI-களே, கணக்கு தப்பிடுச்சுனா கஷ்டம்!

post image

துபாய் மாதிரி ஒரு வளைகுடா ஊரில் இருக்கீங்க... 45 வயசு... கைநிறைய சம்பளம், ஊர்ல சொந்த வீடு, பேங்க்ல நல்ல சேவிங்ஸ்னு கெத்தா சுத்துற ஆளா நீங்க? '60 வயசானதும் பேக்கப் பண்ணிட்டு ஊருக்குக் கிளம்ப வேண்டியதுதான்'ங்கிறதுதானே பிளான்?

எல்லாம் சரி தலைவா... ஆனா ஒரே ஒரு கணக்கை ஒழுங்கா போட்டீங்களா? ஊர் திரும்பி வந்ததும் மாசம் எவ்வளவு செலவாகும்னு யோசிச்சிருக்கீங்களா?

15 ஆண்டுகளுக்குப் பின் உங்களுக்குத் தேவைப்படும் தொகை என்ன?

இன்னைக்கு உங்க குடும்பத்தோட லைஃப்ஸ்டைலுக்கு மாசம் 80,000 ரூபாய் தேவைப்படுதுன்னு வைப்போம்.

வருஷத்துக்குச் சராசரியா 6% விலைவாசி ஏறினா... அடுத்த 15 வருஷத்துல, அதே கெத்தான வாழ்க்கையை வாழ மாசம் தோறும் தோராயமா ₹1.92 லட்சம் ரூபாய் தேவைப்படும்!

அதாவது, வருஷத்துக்கு 23 லட்சம் ரூபாய்! இதுல திடீர்னு வர்ற மெடிக்கல் செலவோ, பெரிய குடும்ப கமிட்மென்ட்களோ சேர்க்கல!

இது ஏதோ உங்களைப் பயமுறுத்தச் சொல்ற ஜோசியம் இல்லைங்க... ஒரு எதேச்சையான யதார்த்தம்! 'இன்னைக்கு பாக்கெட்ல இருக்குற பணம், நாளைக்கும் அதே நிம்மதியைத் தருமா?'ங்கிற கேள்விக்கான அலாரம்!

முதலீடு
முதலீடு

சரி... மிச்சமிருக்கிற இந்த 15 வருஷத்துல என்னதான் பண்றது?

நல்லவேளையா, பிளான் பண்ண உங்கள்கிட்ட இன்னும் 15 வருஷம் கைவசம் இருக்கு!

இன்னைல இருந்து மாசம் 50,000 ரூபாய்னு அடுத்த 15 வருஷத்துக்கு தொடர்ந்து முதலீடு செய்றீங்கனு வைப்போம். நீங்க போடுற மொத்த அசல்: 90 லட்சம் ரூபாய்.

மாதாந்திர கூட்டு வட்டி கணக்குப்படி, வருஷத்துக்கு 10% வளர்ச்சி கிடைச்சாலே (Hypothetical return), இந்த முதலீடு 15 வருஷத்துல தோராயமா 2.07 கோடி ரூபாயா எகிற வாய்ப்பிருக்கு!

(மியூச்சுவல் ஃபண்ட் முதலீடுகள் சந்தை அபாயத்திற்கு உட்பட்டவை. நிஜமான ரிட்டர்ன்ஸ் மாறுபடலாம்).

இதுல நாம புரிஞ்சுக்க வேண்டிய சீக்ரெட் என்னன்னா... உங்க எதிர்காலம்ங்கிறது இதுவரை சேர்த்து வச்சதை மட்டும் பொறுத்தது இல்லை; இனிமே எடுக்குற ஸ்மார்ட்டான நிதி முடிவுகள்லதான் இருக்கு!

ஆனா, ரிட்டயர்மென்ட் பிளானிங்கிறது வெறும் ஃபிகரை டார்கெட் பண்றது மட்டும் இல்லைங்க. கையில இருக்குற சொத்துகள், ஹெல்த்கேர் செலவு, ரிஸ்க் மேனேஜ்மென்ட், அப்புறம் பணத்தைக் காலி பண்ணாம மாசாமாசம் வருமானம் எடுக்குற டெக்னிக்னு பல விஷயங்கள் இருக்கு.

Labham Workshop for NRIs Oct 17 2026

உங்களுக்கு எதுவுமே தெரிய வேண்டாம்! எல்லாத்தையும் வெறும் 90 நிமிஷத்தில் கத்துக்கலாம்!

NRI-களுக்கு மியூச்சுவல் ஃபண்ட் தகுதி, வரி, வங்கி விதிகள்னு தலையைச் சுத்துற பல சந்தேகங்கள் இருக்கும்.

ஊர் திரும்புறதை 'வெறும் யோசனையாக' விடாம, பக்காவான 'பிளானா' மாத்துங்க!

துபாய்/Gulf வாழ்க்கையோட கடைசி வருஷம் வரை காத்துக்கிட்டு இருக்க வேண்டியதில்லை.

40 வயசைக் கடந்த வளைகுடா வாழ் தமிழர்களுக்கான பிரத்யேக ஒர்க் ஷாப்பில் இணையுங்க. மியூச்சுவல் ஃபண்ட்ஸ் பற்றி அ முதல் ஃ வரை தெரிஞ்சுக்கோங்க!

வரும் சனி, அக்டோபர் 17, மதியம் 12:30 மணிக்கு (இந்திய நேரம்) இந்த நிகழ்ச்சி நடைபெறுது. SIP, STP, SWP எல்லாத்தையும் தெரிஞ்சுக்கோங்க. மாதாமாதம் நீங்க விரும்பும் தொகையை மாத பென்ஷனாக பெற, இப்போவே அடியெடுத்து வைங்க. நிகழ்ச்சியில் 100 பேருக்கு மட்டுமே அனுமதி. இப்போதே முன்பதிவு செய்ய: https://labham.money/events/webinar-oct17-2026?utm_source=vikatan_com&utm_medium=article&utm_campaign=webinar_oct17_2026

Aadhar-ல் உங்கள் பெயர் 'எப்படி' இடம்பெற வேண்டும்? புதிய நடைமுறைக்கேற்ப பெயர் மாற்றம் செய்வது எப்படி?

2010 காலக்கட்டத்தில் ஆதார் கார்டு நடைமுறைக்கு வந்தபோது, ‘எங்கும்... எதிலும்... அனைத்திலும் ஆதார்’ என்கிற நிலை உருவாகும் என்று யாரும் கற்பனைக்கூடச் செய்து பார்த்திருக்கமாட்டோம்.அதனால், ஆதார் கார்டு எடு... மேலும் பார்க்க

லாபத்துக்கு வரி கட்டத் தேவை இல்லாத GIFT City ஃபண்டுகள்; NRI முதலீட்டாளர்களுக்கு அருமையான வாய்ப்பு!

வெளிநாடுகளில் வசிக்கும் இந்தியர்கள் இந்தியாவில் முதலீடு செய்வதற்கு நிறைய வாய்ப்புகள் உள்ளன. ரியல் எஸ்டேட், பங்குகள், பங்குச் சந்தை சார்ந்த மியூச்சுவல் ஃபண்டுகள் என அவர்களுக்குக் கிடைக்கும் வாய்ப்புகள்... மேலும் பார்க்க

35+ வயசா? உங்ககிட்ட இந்த 3 பழக்கம் இருந்தா நீங்க கண்டிப்பா பணக்காரர் ஆவீங்க!

25 வயசுல யோசிச்சுக்கூட பார்க்காத அளவுக்கு, 37 வயசுல நீங்க நல்லாவே சம்பாதிக்கலாம். ஆனா, நீங்க நினைக்கிற இடம் இன்னமும் கைக்கெட்டாத தூரத்துல இருக்கிற மாதிரியே தோணுதா?மாசம் பிறந்தா சம்பளம் வருது, பில் கட்... மேலும் பார்க்க

''அசந்து தூங்கிட்டேன். 61 லட்சம் ரூபாய் போச்சு!'' ஒரு எஃப்&ஓ வர்த்தகரின் பரிதாப அனுபவம்!

ஃப்யூச்சர் அண்ட் ஆப்ஷன் என்று சொல்லப்படும் எஃப்&ஓ வர்த்தகம் படுரிஸ்க்-ஆனது. மிக மிக ஜாக்கிரதையாக, ஸ்டாப் லாஸ் போட்டு செய்தால் மட்டுமே பெரிதாக லாபம் கிடைக்காவிட்டாலும் நஷ்டம் வராமல் தப்பிக்கலாம். க... மேலும் பார்க்க

பங்குச் சந்தை கடும் இறக்கம்... இப்போது முதலீடு செய்வது சரியான முடிவா?

இந்த வாரத்தில் உலகம் முழுக்க உள்ள பங்குச் சந்தைகள் கடும் இறக்கத்தைச் சந்தித்துள்ளன. இதனால் முதலீட்டாளர்கள் அடைந்த லாபம் அனைத்தும் போனதுடன், நஷ்டம் ஏற்படும் நிலை வந்துள்ளது. கடந்த 6 முதல் 12 மாதங்களில்... மேலும் பார்க்க

Early Retirement: 40 வயதில் ரிட்டயர்மென்ட்... சாத்தியமா, வெறும் பகல் கனவா?

"மாதம் 80,000 சம்பளம் வருது... ஆனா மாசக் கடைசியில அக்கவுண்ட் காலி! 60 வயசு வரைக்கும் இதே மாதிரி ஓடிக்கிட்டே இருக்கணுமா?"இது பலரின் மனதை தினமும் குடையும் கேள்வி.40 அல்லது 50 வயதில் வேலைக்கு 'குட்-பை' ச... மேலும் பார்க்க