செய்திகள் :

இன்ஸ்டாகிராம் காதல்; லிவிங் டுகெதர் வாழ்க்கை; இறுதியில் உயிரை மாய்த்துக்கொண்ட இளம் ஜோடி

post image

ராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜாபேட்டை பாரதி நகரைச் சேர்ந்த 28 வயதான இளைஞன் பிரசாந்த். மளிகைக் கடையில் வேலை செய்யும் சாதாரண கூலித்தொழிலாளியான பிரசாந்த்துக்கு இன்ஸ்டாகிராம் மூலம் கள்ளக்குறிச்சி மாவட்டத்திலுள்ள உளுந்தூர்பேட்டையைச் சேர்ந்த சுபலட்சுமி என்ற 21 வயது இளம்பெண் ஓராண்டுக்கு முன்பு அறிமுகமாகியுள்ளார்.

இருவருக்கும் இன்ஸ்டாவிலேயே காதல் மலர்ந்துள்ளது. இதையடுத்து, பிரசாந்த் அழைத்ததன்பேரில் தனது பெற்றோருக்குத் தெரியாமல் வீட்டிலிருந்து வெளியேறி வாலாஜாபேட்டைக்கு வந்துள்ளார் சுபலட்சுமி. இருவரும் திருமணம் செய்து கொள்ளாமல் `லிவிங் டுகெதர்’ உறவுமுறையில் கணவன் - மனைவி போல வீடு வாடகைக்கு எடுத்து சேர்ந்து வாழ்ந்துள்ளனர்.

வாலாஜாபேட்டை

இந்த நிலையில், இருவருக்குமிடையே கருத்து - வேறுபாடு ஏற்பட்டுள்ளது. அடிக்கடி சண்டைப் போட்டுக்கொண்டதால் மன வேதனைக்குள்ளான சுபலட்சுமி இன்று விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். பிரசாந்த்தும் தூக்குப்போட்டு தனது உயிரை மாய்த்துக்கொண்டுள்ளார். இதைக் கண்ட உறவினர்கள் வாலாஜாபேட்டை போலீஸாருக்குத் தகவல் தெரியப்படுத்தியுள்ளனர்.

போலீஸார் சம்பவ இடத்துக்குச் சென்று உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும், இவர்களின் மரணம் குறித்து தீவிரமாக விசாரணையும் மேற்கொண்டு வருகிறார்கள்.

கோவையில் மதுபான பாரில் கள்ளநோட்டுகளைப் புழக்கத்தில் விட முயற்சி - 5 பேர் கைது

கோவை செல்வபுரம் பைபாஸ் சாலையில் உள்ள எப்.எல்.2 பாரில் நேற்று மாலை 5 பேர் கொண்ட கும்பல் மது வாங்கிவிட்டு 500 ரூபாய் நோட்டுகளைக் கொடுத்துள்ளனர். அந்த நோட்டுகளை பார்த்து சந்தேகமடைந்த பார் ஊழியர்கள், அவர்... மேலும் பார்க்க

`மோர் வயிற்றை கெடுக்கும், அதனால் பீர் குடிங்க!' - வீடியோ வெளியிட்ட ரெஸ்டோ பார்; சீல் வைத்த ஆட்சியர்

யூனியன் பிரதேசமான புதுச்சேரி, தன்னுடைய வருவாய்க்காக பெரிதும் நம்பியிருப்பது கலால் வரியைத்தான். அதன் காரணமாகவே மது மீதான மாநில அரசின் வரியைக் குறைத்து அண்டை மாநில சுற்றுலாப் பயணிகளைக் குறி வைக்கிறது. இ... மேலும் பார்க்க

சொந்த நகைகளை ஆண் நண்பரிடம் கொடுத்துவிட்டு திருட்டு நாடகமாடிய பெண்! - போலீஸாரிடம் சிக்கியது எப்படி?

நெல்லை டவுண், வ.உ.சிதம்பரனார் தெருவைச் சேர்ந்த பாத்திர வியாபாரி பாலகுருசாமி. இவரது மனைவி ரேவதி. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளன. பாலகுருசாமி, கோயில் திருவிழாவில் பாத்திர வியாபாரம் செய்வதற்காக தென்காசி ... மேலும் பார்க்க

குழந்தைகளுக்கு சிகரெட்டால் சூடு வைத்த தாய் திருமணம் மீறிய உறவால் கொடூரம்!

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலை அடுத்த பறக்கை புல்லுவிளை பகுதியைச் சேர்ந்தவர் அழகுவேல். கூலித் தொழிலாளியான இவருக்கு சுகன்யா என்ற மனைவியும், 7 வயதில் ஒரு மகனும், 6 வயதில் ஒரு மகளும் உள்ளனர். சுகன்யாவ... மேலும் பார்க்க

திருமணம் நிச்சயம்; காதலை தொடர மறுத்த காதலி - மலைக்கு அழைத்து சென்று பள்ளத்தில் தள்ளிகொன்ற காதலன்

மகாராஷ்டிரா மாநிலம் கோலாப்பூர் அருகில் உள்ள கர்கோடி என்ற இடத்தை சேர்ந்தவர் ஸ்ரீபத் தின்கர்(25). இவர் தான் வசித்து வந்த தெருவில் வசித்த பொறியியல் கல்லூரி மாணவி தரன்னம் என்பவரை கடந்த 5 ஆண்டுகளுக்கும் மே... மேலும் பார்க்க

தருமபுரி: 'கருவில் உள்ளது ஆணா? பெண்ணா?' - வீட்டிலேயே சட்டவிரோத ஸ்கேன் செண்டர்; இருவர் கைது

வீட்டிலேயே சட்டவிரோத ஸ்கேன் செண்டர் நடத்தி கருவின் பாலினம் கண்டறிந்து சொன்ன இருவர் கைது செய்யப்பட்ட சம்பவம் தருமபுரி மாவட்டத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.கைதுதருமபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே மே... மேலும் பார்க்க