செய்திகள் :

`இரட்டை இலை விவகாரம்; 2 ஆண்டுகளாக என்ன நடவடிக்கை எடுத்தீர்கள்?' - தேர்தல் ஆணையத்திடம் கோர்ட் கேள்வி

post image

"இரட்டை இலை சின்னம், கொடி தொடர்பாக அதிமுக ஒருங்கிணைப்புக் குழுவைச் சேர்ந்த வா.புகழேந்தி கொடுத்த புகாரின் மீது நடவடிக்கை எடுக்க ஏன் தாமதம்?" என தேர்தல் ஆணையத்திடம் டெல்லி உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

டெல்லி உயர் நீதிமன்றம்

வா.புகழேந்தி அளித்த புகார் மீது உடனடியாக விசாரித்து நடவடிக்கை வேண்டும் என்று தேர்தல் ஆணையத்திற்கு டெல்லி உயர் நீதிமன்றம் கடந்த 2024 ஆம் ஆண்டு உத்தரவு பிறப்பித்திருந்தது.

ஆனால் தேர்தல் ஆணையம் அந்த உத்தரவை நடைமுறைப்படுத்தாததால், நீதிமன்ற அவமதிப்பு வழக்கை புகழேந்தி தொடர்ந்தார். அப்போது உடனடியாக பதில் அளிக்க தேர்தல் ஆணையர்களுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.

டெல்லி உயர் நீதிமன்றத்தின் ஆணையை தேர்தல் ஆணையம் அவமதித்ததாகவும், உச்ச நீதிமன்ற உத்தரவின்படி இரட்டை இலை சின்னத்தை நிலுவையில் உள்ள சிவில் நீதிமன்ற வழக்கு முடியும் வரை தடை செய்ய வேண்டும் என்று மீண்டும் கூறப்பட்டது.

இந்த முக்கிய வழக்கு டெல்லி உயர் நீதிமன்றத்தில் நீதிபதி சச்சின் தத்தா முன்பு கடந்த 16 ஆம் தேதி விசாரணைக்கு வந்தபோது வா.புகழேந்தி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், "புகார் கொடுத்து இரண்டு வருடங்களைக் கடந்தும் நடவடிக்கை எடுக்கவில்லை, தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட உள்ளது" என்று வாதிட்டனர்.

புகழேந்தி

"புகார் மீது விசாரணை நடத்தினீர்களா? இன்னும் எவ்வளவு காலம் ஆகும்? எப்போது விசாரித்து தீர்வு காணப்படும்? உயர் நீதிமன்ற உத்தரவுக்குப் பின்னும் தாமதம் ஏன்?" என்று தேர்தல் ஆணையத்திடம் நீதிபதி பல்வேறு கேள்விகளை எழுப்பினார்.

"சரியான காலத்தை தெரிவிக்க முடியாது, இந்த விவகாரத்தில் விளக்கம் கேட்டு தெரிவிக்க கால அவகாசம் அளிக்க வேண்டும்" என்று தேர்தல் ஆணையம் தரப்பில் கோரப்பட்டது.

அதை ஏற்றுக்கொண்ட நீதிபதி, "இரட்டை இலை சின்ன விவகாரம் சம்பந்தமான புகார் மீது இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து விளக்கம் அளிக்க வேண்டும்" என்று தேர்தல் ஆணைய வழக்கறிஞருக்கு அவகாசம் வழங்கி உத்தரவிட்டவர், வரும் பிப்ரவரி 23 ஆம் தேதிக்கு வழக்கை தள்ளி வைத்தார்.

Tariff: 'அதிகாரத்தை மீறி.!' - வரிக்கு எதிராக அமெரிக்க உச்ச நீதிமன்றம் தீர்ப்பு; ட்ரம்ப் - 'அவமானம்'?

உலக நாடுகளையே ஆட்டிப் படைத்த அஸ்திரம் அமெரிக்க அதிபர்‌ ட்ரம்பின் 'பரஸ்பர வரி'. இந்த வரிகளை அவர் அமெரிக்காவின் 'சர்வதேச அவசர பொருளாதார அதிகாரச் சட்டம், 1977 (IEEPA)'-ன் கீழ் அமலுக்கு கொண்டு வந்தார்.இதி... மேலும் பார்க்க

AI மாநாடு: சட்டையை கழற்றிப் போராட்டம் நடத்திய காங்கிரஸ் அணி; கண்டனம் தெரிவிக்கும் பாஜக!

இந்தியாவின் தொழில்நுட்ப வளர்ச்சியைப் பறைசாற்றும் வகையில் டெல்லியில் 'இந்திய AI உச்சிமாநாடு 2026' (India AI Impact Summit) நடைபெற்றுவருகிறது. இந்த மாநாட்டில் 100க்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து பிரதிந... மேலும் பார்க்க

திமுக கூட்டணியில் 'ஹவுஸ்புல்' - தொகுதிப் பங்கீட்டில் ஸ்டாலினுக்குக் காத்திருக்கும் சவால் என்ன?

2026 சட்டமன்றத் தேர்தலுக்கு அரசியல் கட்சிகள் தடபுடலாக தயாராகி கொண்டிருக்கின்றன.பேரணி, பிரசாரம், கூட்டணிப் பேச்சுவார்த்தை, தேர்தல் வாக்குறுதி என கட்சிகள் தீவிர களப்பணியில் இறங்கி இருக்கும் சூழலில், திம... மேலும் பார்க்க

KN Nehru: ``இதெல்லாம் எங்களுக்கு பின்னடைவல்ல..." - நீதிமன்ற உத்தரவு குறித்து ஆர்.எஸ் பாரதி!

அமைச்சர் கே.என்.நேரு மீதான அமலாக்கத்துறையின் ஊழல் புகாரின் அடிப்படையில் அவர் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என அ.தி.மு.க எம்.பி இன்பதுரை வழக்கு தொடர்ந்திருந்தார்.அந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற... மேலும் பார்க்க

`எதிர்க்கட்சித் தலைவருக்கு நன்றி' - சட்டமன்றத்தில் உணர்ச்சி வசப்பட்டுப் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின்!

ஸ்டாலின்மனநிறைவுடன் நிற்கிறேன்16-வது சட்டமன்றத் தொடரின் நிறைவு நாளான இன்று, முதல்வர் ஸ்டாலின் அவை உறுப்பினர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக உரையாற்றினார். அவரின் உரையில், ``பகுத்தறிவு பகலவன் தந்தை ப... மேலும் பார்க்க