செய்திகள் :

"அவர் வருவார் என்று நான் நினைத்துக்கூட பார்க்கவில்லை, ஆனால்.!"- தனுஷ் குறித்து மிருணாள் தாகூர்

post image

நடிகர் தனுஷ், நடிகை மிருணாள் தாகூர் இருவரும் காதலித்து வருவதாகவும், வரும் பிப்ரவரி 14 ஆம் தேதி திருமணம் செய்துகொள்ள இருப்பதாகவும் சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவின.

ஆனால் சமீபத்தில் 'India Today' ஊடகத்திற்கு பேட்டி அளித்திருந்த மிருணாள் தாகூர், "யார் எனக்கு திருமணம் என்ற வதந்தியைக் கிளப்பினார்கள் என்று தெரியவில்லை. இதுபோன்ற சம்பவங்கள் பயத்தை ஏற்படுத்துகின்றன.

சரியான நேரத்தில் சரியான நபரை சந்திக்கும்போது திருமணம் செய்துகொள்ளலாம்" என்று வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்திருந்தார்.

மிருணாள் தாகூர் - தனுஷ்
மிருணாள் தாகூர் - தனுஷ்

இந்நிலையில் தற்போது நேர்காணல் ஒன்றில் கலந்துகொண்ட மிருணாள் தாகூரிடம் தனுஷ் குறித்து கேள்வி எழுப்பப்பட்டிருக்கிறது.

அதற்கு பதிலளித்த அவர், "தனுஷ் சாரின் 'ராயன்', 'மாரி', 'ராஞ்சனா', 'கேப்டன் மில்லர்' போன்ற படங்களை பார்த்த பின் அவரது ரசிகையாக மாறிவிட்டேன்.

குறிப்பாக 'அசுரன்' படத்தை பல முறை கூட பார்ப்பேன். அவர் ஒரு கலைக்கூடம் போன்றவர்.

ஒரு நடிகராக அவரிடமிருந்து கற்றுக் கொள்ள பல விஷயங்கள் உள்ளன. மேலும், அவர் ஒரு பாடலாசிரியர், பாடகர், இயக்குநர் என பல விஷயங்களை செய்கிறார்.

'Tere Ishk Mein' படப்பிடிப்பில் அவரை சந்தித்த போது நான் தயங்கியபடி 'சார் Son of Sardaar படத்தின் திரையிடலில் கலந்து கொள்ள முடியுமா' என்று கேட்டேன்.

மிருணாள் தாகூர்
மிருணாள் தாகூர்

அவர் வருவார் என்று நான் நினைத்துக் கூட பார்க்கவில்லை. அவர் மிகவும் தன்மையானவர். அவருடன் என்றாவது இணைந்து நடிக்க வேண்டும்” என்று பேசியிருக்கிறார்.

``'சூது கவ்வும்' வெளியான போதே பெயரும் புகழும் கிடைச்சிடுச்சு; ஆனா இப்ப.." - சஞ்சிதா ஷெட்டி ஷேரிங்ஸ்

தமிழ் சினிமாவில் 'சூது கவ்வும்' படத்திற்கு தனி இடமுண்டு. அதற்கு முன் டெரராகக் காட்டிய ஆள் கடத்தல் சூதினை ஜாலி கலாட்டாவாக்கி மனதை கொள்ளை கொண்ட பெருமை 'சூது கவ்வும்’ படத்திற்கு உண்டு. நலன் குமாரசாமி இயக... மேலும் பார்க்க

KHxRK: ரஜினி - கமல் இணைந்து நடித்த படங்கள்! | Photo Album

அபூர்வ ராகங்கள் (1975)அந்துலேனி கதா (1976)மூன்று முடிச்சு (1976)அவர்கள் (1977)பதினாறு வயதினிலே (1977)ஆடு புலி ஆட்டம் (1977)இளமை ஊஞ்சலாடுகிறது (1978)வயசு பிலிச்சிந்தி (1978)தப்புத் தாளங்கள் (1978)அவள் ... மேலும் பார்க்க

KH x RK: ரஜினி கமலின் `12-07' சென்டிமென்ட்; நெல்சனுக்கு ஸ்வீட் ஷாக் கொடுத்த ரஜினி! - ப்ரோமோ அப்டேட்!

மக்கள் திலகம் எம்.ஜி.ஆர், அறுபது வயதில் சினிமாவிலிருந்து ஓய்வு பெற்று முதல்வரானார். நடிகர் திலகம் சிவாஜி, அறுபது வயதுக்குப் பிறகு சில படங்களில் கவுரவ வேடங்களில் நடித்துக் கவனம் ஈர்த்தார். சூப்பர் ஸ்டா... மேலும் பார்க்க

My Lord: "அயோத்தி-க்கு பிறகு சசிகுமார் தேர்ந்தெடுக்கும் கதைகளில்.!"- பாராட்டிய இயக்குநர் ராம்

இயக்குநர் ராஜு முருகன் இயக்கத்தில் சசிகுமார், சைத்ரா, குரு சோமசுந்தரம் ஆகியோர் நடிப்பில் வெளியாகியிருக்கும் படம் 'மை லார்ட்' . இப்படத்தை பாராட்டி இயக்குநர் ராம் வீடியோ வெளியிட்டிருக்கிறார். அதில் பேசி... மேலும் பார்க்க