செய்திகள் :

My Lord: "அயோத்தி-க்கு பிறகு சசிகுமார் தேர்ந்தெடுக்கும் கதைகளில்.!"- பாராட்டிய இயக்குநர் ராம்

post image

இயக்குநர் ராஜு முருகன் இயக்கத்தில் சசிகுமார், சைத்ரா, குரு சோமசுந்தரம் ஆகியோர் நடிப்பில் வெளியாகியிருக்கும் படம் 'மை லார்ட்' .

இப்படத்தை பாராட்டி இயக்குநர் ராம் வீடியோ வெளியிட்டிருக்கிறார்.

அதில் பேசியிருக்கும் அவர், " தமிழ் சினிமாவில் பழக்கப்பட்ட கதையில் இருந்து வழக்கமான கதையில் இருந்து மாறுபட்டு வேறொரு கதையை எடுக்கக்கூடிய துணிச்சலும், நமக்கு பரிச்சயம் இல்லாத கதை மாந்தர்களை அறிமுகப்படுத்தக்கூடிய துணிச்சலும் இயக்குநர் ராஜு முருகனுக்கு இருக்கிறது.

'மை லார்ட்'
'மை லார்ட்'

அவரின் இன்னொரு துணிச்சலானப் படைப்பு தான் 'மை லார்ட்'. அதிகாரத்தின் உச்சத்தில் இருப்பவர்களுக்கும், அதிகார உச்சத்தில் இருந்து விலகி விளிம்பு நிலையில் அதல பாதாளத்தில் உள்ள ஒருவருக்கும் நடைபெறும் கதைதான் இது.

சமூகத்தின் இரு முனைகளையும் தைரியமாக சொல்லும் துணிச்சலான படைப்பு. மானுட அரசியலை இந்தப் படம் பேசுகிறது.

அயோத்தி படத்திற்கு பிறகு சசிகுமார் தேர்ந்தெடுத்து நடிக்கும் கதைகளில் பெரிய மாற்றங்கள் நிகழ்ந்திருக்கிறது.

சசிகுமார்
சசிகுமார்

அந்த மாற்றம் தமிழ்நாட்டின் ஒவ்வொரு குடும்பத்திலும் அவரை ஒரு உறுப்பினராக இணைத்துள்ளது.

மை லார்ட்' படத்தை இயக்கிய ராஜு முருகனுக்கும், அதில் நடித்த சசிகுமாருக்கும் என்னுடைய வாழ்த்துகள்" என்று பாராட்டி பதிவிட்டிருக்கிறார்.

அவரின் கதைகளை டைரக்ட் செய்ய விரும்புறேன்! - மறைந்த இயக்குநர் சுரேஷ் சங்கையாவின் மனைவி தனிஷ் பாத்திமா

'ஒரு கிடாயின் கருணை மனு', 'சத்திய சோதனை' படங்களின் மூலம் கிராமத்து மனிதர்களின் வாழ்வியலை இயல்பும் யதார்த்தமுமாக சொன்னவர் இயக்குநர் சுரேஷ் சங்கையா. அவர் மறைவிற்கு முன் உருவான 'கெணத்த காணோம்' படம் விரைவ... மேலும் பார்க்க

My Lord: "முதல் நாள் கலெக்ஷனை பார்த்துவிட்டு எல்லோருக்கும் கொஞ்சம் பயம் வந்தது, ஆனால்.!"- சசிகுமார்

இயக்குநர் ராஜு முருகன் இயக்கத்தில் சசிகுமார், சைத்ரா, குரு சோமசுந்தரம் ஆகியோர் நடிப்பில் வெளியாகியிருக்கும் படம் 'மை லார்ட்' . இப்படத்தின் சக்ஸஸ் மீட் நேற்று (பிப்.18) நடைபெற்றது. அதில் பேசிய சசிகுமார... மேலும் பார்க்க

Dhanush: ஒரே நாளில் 3,000 ரசிகர்களைச் சந்தித்த தனுஷ்; நாளை தொடங்கும் படப்பிடிப்பு, D-55 அப்டேட்!

கடந்த ஜூன் மாதத்தில் இருந்து தனது ரசிகர்களை சந்தித்து புகைப்படம் எடுத்துக் கொள்வதை வழக்கமாகச் செய்து வருகிறார் தனுஷ். ஞாயிறுதோறும் 500 ரசிகர்களைச் சந்திப்பதுடன் அவர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொள்வது... மேலும் பார்க்க

"கேரவானுக்குள்ளேயே இருந்தால் நடிக்க முடியாது; அப்படித்தான் அவரும்" - விஜய் மீது வினோதினி விமர்சனம்

நடிகை வினோதினி வைத்தியநாதன் கடந்தாண்டு கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியிலிருந்து விலகியது பலருக்கும் நினைவிருக்கலாம். சில மாதங்களாக அவர் தவெக மீது விமர்சனங்களையும் வைத்திருந்தார்.வினோதினிஅவர் நடி... மேலும் பார்க்க