செய்திகள் :

ரன்வீர் சிங்கிடம் ரூ.10 கோடி கேட்டு அமெரிக்காவிலிருந்து மிரட்டல் - அனுப்பியது பிஷ்னோய் கூட்டாளி!

post image

சமீபத்தில் பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங்கிற்கு லாரன்ஸ் பிஷ்னோய் கூட்டத்தை சேர்ந்த ஹாரி பாக்ஸர் என்பவன் பணம் கேட்டு மிரட்டல் விடுத்திருந்தான். ரன்வீர் சிங்கின் செயலாளருக்கு வாட்ஸ்ஆப்பில் வாய்ஸ் மெசேஜ் மூலம் இந்த மிரட்டல் வந்திருந்தது. இது தவிர பாலிவுட் இயக்குனர் ரோஹித் ஷெட்டி வீட்டின் மீதும் லாரன்ஸ் பிஷ்னோய் கூட்டத்தினர் துப்பாக்கிச்சூடு நடத்தினர்.

இத்துப்பாக்கிச்சூட்டில் ஈடுபட்டவர்களை போலீஸார் கைது செய்துள்ளனர். ரன்வீர் சிங்கிற்கு வந்த மிரட்டல் தொடர்பாக போலீஸார் விசாரித்து வருகின்றனர். போலீஸார் ரன்வீர் சிங்கிற்கு வந்த மிரட்டல் வாய்ஸ் மெசேஜ் உண்மையிலேயே ஹாரி பாக்ஸருக்குரியதா அல்லது வேறு யாருடைய வாய்ஸா என்பது குறித்து விசாரணை நடத்தி வந்தனர்.

ஹாரி பாக்ஸர் வாய்ஸ் மும்பை மட்டுமல்லாமல் இந்தியாவில் எந்த விசாரணை ஏஜென்சியிடமும் இல்லை. ஹாரி பாக்ஸர் அமெரிக்காவில் பதுங்கி இருப்பதாக கூறப்படுகிறது.

இதையடுத்து ரன்வீர் சிங்கிற்கு வந்த மிரட்டல் வாய்ஸ் மெசேஜை அமெரிக்க விசாரணை ஏஜென்சிக்கு அனுப்பி அதனை ஹாரி பாக்ஸர் வாய்ஸோடு ஒத்துப்பார்க்கும்படி மும்பை போலீஸார் கேட்டுக்கொண்டனர். அமெரிக்க விசாரணை அதிகாரிகள் வந்த சத்தத்தை தங்களிடம் இருக்கும் ஹாரி பாக்ஸர் சத்தத்தோடு ஒப்பிட்டு பார்த்ததில் அது ஹாரி பாக்ஸர் சத்தம்தான் என்பது உறுதி செய்யப்பட்டதாக மும்பை குற்றப்பிரிவு போலீஸார் தெரிவித்தனர்.

அதோடு மேலும் சில இடங்களுக்கு ஹாரி பாக்ஸர் அனுப்பிய வாய்ஸ் மேசேஜை அனுப்பி அவர்களிடம் இருக்கும் சத்தத்தோடு ஒப்பிட்டு பார்க்கும்படி கேட்டுக்கொண்டுள்ளனர். மேலும் மிரட்டல் எங்கிருந்தது வந்தது என்பதையும் போலீஸார் கண்டுபிடித்துள்ளனர்.

அமெரிக்க நம்பரில் இருந்து ரூ.10 கோடி கேட்டு மிரட்டல் மெசெஜ் அனுப்பப்பட்டதாக குற்றப்பிரிவு போலீஸார் தெரிவித்துள்ளனர். இதையடுத்து ரன்வீர் சிங்கிற்கு மும்பை போலீஸார் பாதுகாப்பை அதிகரித்துள்ளனர். ரன்வீர் சிங் மேலாளரிடம் போலீஸார் வாக்குமூலம் வாங்கியுள்ளனர். லாரன்ஸ் பிஷ்னோய் கூட்டத்தில் ஹாரி பாக்ஸர் முக்கிய பிரமுகராக இருந்து வருகிறான் என்பது குறிப்பிடத்தக்கது.

`ரூ.70,000 கோடி விற்பனையை மறைத்த பிரியாணி உணவகங்கள்' - ஐதராபாத் கடை ரெய்டு மூலம் அம்பலமான மெகா மோசடி

ஐதராபாத் பிரியானி என்றாலே மிகவும் பிரபலம். நாட்டின் பெரும்பாலான இடங்களில் ஐதராபாத் பிரியானி என்ற பெயரில் அதிக அளவில் பிரியானி விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஐதராபாத்தை தலைமையிடமாக கொண்டு செயல்படும் பி... மேலும் பார்க்க

Lost 140,000 Followers: அம்பலமான உண்மை முகம்! - லட்சக்கணக்கான ஃபாலோயர்களை இழந்த சீன இன்ஃப்ளூயன்சர்?

ஒரு சீன இன்ஃப்ளூயன்சர் தனது ரசிகர்களுடன் நேரலையில் (Livestream) பேசிக்கொண்டிருக்கும் போது, இத்தனை நாளாக அவர் பயன்படுத்திய `பியூட்டி ஃபில்டர்' திடீரென வேலை செய்யாமல் போனது. இதனால் சில வினாடிகளுக்கு அவர... மேலும் பார்க்க

பஞ்சாப்: மணமகள் மீது ரூ.8.5 கோடியை மழையாக பொழிந்தார்களா உறவினர்கள்? - வைரல் வீடியோவின் பின்னணி!

திருமணம் என்றாலே உறவினர்கள் பணத்தை தண்ணீராக செலவு செய்வார்கள். பஞ்சாப் மாநிலம் டர்ன் தரன் என்ற இடத்தில் நடந்த திருமணத்தில் உறவினர்கள் மணமகள் மீது பணமழை பொழிந்த வீடியோ வைரலாகி இருக்கிறது. திருமணத்தில் ... மேலும் பார்க்க

ஆப்கன்: எலும்பு முறிய கூடாது, காயம் தெரியகூடாது!- பெண்களை அடிக்க சட்டப்பூர்வ அனுமதி வழங்கிய தாலிபான்

ஆப்கானிஸ்தானில் ஆட்சியில் இருக்கும் தாலிபான் அரசு பெண்களுக்கு பல்வேறு விதமான கட்டுப்பாடுகளை விதித்து இருக்கிறது. படிப்பதற்கு கூட கடுமையான நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளது. பெண்கள் தனியாக வெளியில் செல்ல... மேலும் பார்க்க

ஏஐ மாநாட்டில் சீன நாய் ரோபோ; வைரலான பேராசிரியர்; மன்னிப்புக் கேட்ட பல்கலைக்கழகம்; என்ன நடந்தது?

டெல்லியில் சர்வதேச ஏ.ஐ. மாநாடு நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் ஐ.டி நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள் கடைகளை அமைத்து அதில் தங்களது தயாரிப்புகளை கண்காட்சிக்கு வைத்துள்ளன. இதில் கிரேட்டர் நொய்டாவைச் சேர்ந்த க... மேலும் பார்க்க

"பிள்ளைகளின் படிப்புக்காகத்தான்" - மணியடித்தவுடன் மொபைல், டிவி ஆஃப்; வைரலாகும் மகாராஷ்டிரக் கிராமம்!

மொபைல் போன்களின் பயன்பாடு அதிகரித்த பிறகு சிறார்கள் அனைவரின் கையிலும் மொபைல் போனைப் பார்க்க முடிகிறது. இதனால் அவர்களது படிப்புக்கு மொபைல் போன்கள் தடையாக இருக்கின்றன.போன் பார்க்காமல் குழந்தைகள் படித்து... மேலும் பார்க்க