செய்திகள் :

`ED ஆதாரங்களில் முகாந்திரம் உள்ளது; கே.என் நேரு மீது வழக்குப்பதிவு செய்க.!" - உயர் நீதிமன்றம் அதிரடி

post image

தமிழக நகராட்சி நிர்வாகத்துறையில் பணி நியமனங்களுக்கு லஞ்சம் பெற்ற விவகாரம் தொடர்பாகவும், டெண்டர் ஒதுக்கீட்டில் நடந்த முறைகேடுகள் தொடர்பாகவும் வழக்குப்பதிவு செய்யக் கூறி, அமலாக்கத் துறை சார்பில் தமிழக டிஜிபி-க்கு கடிதம் அனுப்பப்பட்டிருந்தது.

இந்த கடிதத்தின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்ய உத்தரவிட வேண்டும் என அதிமுக எம்.பி. இன்பதுரை மற்றும், ஆதிநாராயணன் ஆகியோர் உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தாக்கல் செய்திருந்தனர்.

இந்த வழக்குகளை தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவஸ்தவா மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் அமர்வு விசாரித்தது.

உயர் நீதிமன்றம்

`வேறொரு வழக்கு விசாரணையில் சேகரிக்கப்பட்ட ஆதாரங்களை டிஜிபி-க்கு அனுப்பி வைத்துள்ளதாகவும், அவற்றின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்ய உத்தரவிட வேண்டும்' என அமலாக்கத் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

தமிழக அரசுத்தரப்பில், `அமலாக்கத் துறையின் கடிதம் அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டு, லஞ்ச ஒழிப்புத் துறையினர் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக' தெரிவிக்கப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள்,

``நகராட்சி நிர்வாக துறை நியமன முறைகேடு, டெண்டர் முறைகேடு தொடர்பாக அமலாக்கத் துறை வழங்கிய ஆதாரங்களில் முகாந்திரம் உள்ளது என்பதால், அதன் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்ய லஞ்ச ஒழிப்பு துறைக்கு உத்தரவிட்டுள்ளனர்.

அமலாக்க துறை போதுமான ஆதாரங்களை சமர்ப்பித்துள்ளதால், ஆரம்பகட்ட விசாரணை நடத்த தேவையில்லை. அமலாக்க துறை அளித்த கடிதங்களில் போதுமான ஆதாரங்கள் உள்ளதால் வழக்குப்பதிவு செய்து விசாரித்து சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்' என உத்தரவிட்ட நீதிபதிகள், ஆதிநாராயணன் என்பவர் தாக்கல் செய்த வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

`இலவசக் கலாசாரம் கவலையளிக்கிறது' - தமிழக அரசின் மனுமீதான விசாரணையில் உச்ச நீதிமன்றம் அதிருப்தி!

மின்சாரத் துறை சட்டத் திருத்தம் 2024-ன் விதி 23-ஐ எதிர்த்து தமிழக அரசு தாக்கல் செய்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி, மாநில அரசுகளின் இலவசத் திட்டங்கள் குறித்துத் தனது கடுமையான அதிருப்தி... மேலும் பார்க்க

நடிகை பிரதியுஷா மரண வழக்கு: 24 ஆண்டுகள் கழித்து வெளியான தீர்ப்பு; காதலனுக்கு செக்!

தமிழ் தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் நடித்து பிரபலம் அடைந்தவர் நடிகை பிரதியுஷா. தமிழில் மனுநீதி, தவசி உள்ளிட்ட படங்களிலும் நடித்துள்ளார். குறிப்பாக விஜயகாந்த் அவர்களுடன் தவசி படத்தில் அவர் நடனமாடும் `பஞ்... மேலும் பார்க்க

`'விதி'படமே வக்கீல் ஆக்குச்சு!' - நீதிபதி | `84-ல் வெளியான படம்; மறக்க முடியாத அந்த ராதா' - பூர்ணிமா

3000 வழக்குகள், முதல் பெண் தபேதார்!நடிகர் மோகன், நடிகை பூர்ணிமா, நடிகை சுஜாதா ஆகியோரின் நடிப்பில் எண்பதுகளில் வெளியாகி வசூலை வாரிக் குவித்த படம் ‘விதி’. படத்தில் வழக்கறிஞராக வரும் நடிகை சுஜாதாவின் கதா... மேலும் பார்க்க

`சிடி-யை எழுத்து வடிவமாக்க வேண்டும்; ரூ.10 லட்சம் செலுத்துக!' - தோனிக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

கடந்த 2013-ம் ஆண்டு ஐ.பி.எல். கிரிக்கெட் சூதாட்டத்தில், சென்னை அணி வீரர் மகேந்திர சிங் தோனிக்கும் தொடர்பு இருப்பதாக, ஓய்வுப் பெற்ற ஐ.பி.எஸ். அதிகாரி சம்பத் குமார், தனியார் தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சி... மேலும் பார்க்க

`ஆசிரியையின் ரூ.74 லட்ச சம்பளம்; திரும்ப செலுத்த சொன்ன கல்வித்துறை' - ரத்து செய்த உயர் நீதிமன்றம்

கிருஷ்ணகிரியைச் சேர்ந்த மார்கரெட் விமலி என்பவர் கடந்த 1999-ஆம் ஆண்டு அரூரிலுள்ள அரசு உதவிபெறும் புனித அன்னாள் தொடக்கப்பள்ளியில் இடைநிலை ஆசிரியராக நியமிக்கப்பட்டார். இரண்டு ஆண்டுகள் கழித்து கிருஷ்ணகிரி... மேலும் பார்க்க

SIR : ``விதிமுறைகளுக்கு உட்பட்டு..!" - உச்ச நீதிமன்றத்தில் `வழக்கறிஞராக' மம்தா பானர்ஜி | Live Updates

உச்ச நீதிமன்றத்தின் விதிமுறைகளுக்கு உட்பட்டு..! மம்தா பானர்ஜிமேற்கு வங்க மாநிலத்தில் எஸ்ஐஆர் நடைமுறைகளுக்கு எதிரான விவகாரத்தில் மம்தா பானர்ஜி உச்ச நீதிமன்றத்தில் அரசியல் சாசன சட்டப்பிரிவு 32 கீழ் பொது... மேலும் பார்க்க