"இசுலாமியச் சொந்தங்கள் அனுபவிக்கும் துயரங்களின் ஒரு துளிதான் இந்த ‘சிறை’!"- படத்...
SIR : ``விதிமுறைகளுக்கு உட்பட்டு..!" - உச்ச நீதிமன்றத்தில் `வழக்கறிஞராக' மம்தா பானர்ஜி | Live Updates
உச்ச நீதிமன்றத்தின் விதிமுறைகளுக்கு உட்பட்டு..!
மேற்கு வங்க மாநிலத்தில் எஸ்ஐஆர் நடைமுறைகளுக்கு எதிரான விவகாரத்தில் மம்தா பானர்ஜி உச்ச நீதிமன்றத்தில் அரசியல் சாசன சட்டப்பிரிவு 32 கீழ் பொதுநல வழக்கை தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு இன்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சூரியகாந்த் அமர்வில் விசாரணைக்கு வரும் நிலையில், மம்தா பானர்ஜியே தனது வழக்கிற்காக ஆஜராகி வாதங்களை முன்வைக்க உள்ளார்
மம்தா பானர்ஜி உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள சுய பதிவு விவரங்களில்,`நான் சட்டப் படிப்பை முடித்திருக்கிறேன். எனவே நீதிமன்றங்களில் வாதாடும் நடைமுறைகள் முழுமையாக தெரியும். உச்ச நீதிமன்றத்தின் மாண்புகள் குறித்த தகவல்களையும் முழுமையாக அறிந்து வைத்திருக்கிறேன். உச்ச நீதிமன்றத்தின் விதிமுறைகளுக்கு உட்பட்டு கண்ணியத்துடன் நீதிமன்றத்தில் நடந்து கொள்வேன்' எனக் குறிப்பிட்டிருக்கிறார்.
மம்தாவின் குற்றச்சாட்டு

தமிழ்நாடு, மேற்கு வங்கம் போன்ற சட்டமன்றத் தேர்தல் நடைபெறவிருக்கும் மாநிலங்களில் தேர்தல் ஆணையம் சிறப்பு வாக்காளர் தீவிரத் திருத்தம் (SIR) மேற்கொண்டு வருகிறது. அதே நேரம், இந்த SIR நடவடிக்கை பா.ஜ.க-வின் திட்டம் எனவும், சிறுபான்மையினர், பா.ஜ.க கட்சிக்கு எதிரானோர்களிடமிருந்து வாக்குரிமையைப் பறிக்கும் நடவடிக்கை என எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன.
குறிப்பாக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, ``தேர்தல் ஆணையம், சிறு எழுத்துப்பிழை, திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவான வாக்காளர்கள் போன்றவர்களை நீக்குகிறது. உயிரோடு இருப்பவர்களையும் இறந்தவர்கள் பட்டியலில் சேர்த்திருக்கிறது" என்றக் குற்றச்சாட்டை முன்வைத்திருந்தார்.















