விருதுநகர்: பொன்மஞ்சள் விரிப்பாய் பூத்துக் குலுங்கும் சூரியகாந்தி மலர்கள்! - Sce...
`ஜல்லிக்கட்டு போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் விடுதலை' - மதுரை மாவட்ட நீதிமன்றம்
ஜல்லிக்கட்டு விளையாட்டில் மாடுகள் துன்புறுத்தபடுவதாக பீட்டா அமைப்பு உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கினால், 2014-ம் ஆண்டு ஜல்லிக்கட்டு தடை செய்யபட்டது.
இந்த தீர்ப்பை எதிர்த்து மதுரையில் உள்ள அலங்காநல்லூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் போராட்டங்கள் வெடித்தன. அலங்காநல்லூரில் நடைபெற்ற போராட்டத்தில் ஆயிரக்கணக்கானோர் திரண்டி போராடினர். இவர்களுக்கு பொதுமக்கள் உணவு சமைத்து வழங்கும் நிகழ்வுகளும் நடந்தன.
போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களும் இளைஞர்களும் கைது செய்யப்பட்டதோடு அவர்கள் வாடிப்பட்டியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் அடைக்கப்பட்டனர். இதை தொடர்ந்து தமிழகம் முழுவதும் போராட்டங்கள் வெடித்தது.

இதனால் மத்திய அரசு, 'ஜல்லிக்கட்டு நடத்தும் முடிவை மாநில அரசே எடுக்கலாம்' என அறிவித்தது. இதனைத் தொடர்ந்து 2017 ஆம் ஆண்டு அன்று மாநில அரசு ஜல்லிக்கட்டு நடத்துவதற்கான சிறப்பு சட்டத்தை இயற்றியது. ஆனால் அவசரச் சட்டம் வேண்டாம், நிரந்தரச் சட்டம் வேண்டும் என்ற கோரிக்கையுடன் போராட்டங்கள் தொடர்ந்தன.
அப்போது அலங்காநல்லூரில் போராடிய 64 பேர் கைது செய்யப்பட்டு, அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. பின்னர் இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. இந்த வழக்கு மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் 2018 முதல் நடந்து வருகிறது. இதை தவிர மற்ற மாவட்டங்களிலும் போராட்டத்தில் ஈடுபட்ட 200 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர்.

இந்த வழக்குகளை ரத்து செய்ய வேண்டுமென அரசியல் கட்சிகள் மற்றும் பொதுமக்கள் அரசுக்கு கோரிக்கை வைத்தனர். அப்போதைய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, 'ஜல்லிக்கட்டு போராட்ட வழக்குகள் அனைத்தும் ரத்து செய்யப்படும்'என்று அறிவித்தார்.
ஆனால், சிபிசிஐடி பதிவு செய்த வழக்குகள் மட்டும் கடந்த ஒன்பது ஆண்டுகளாக தொடர்ந்து நடைபெற்று கொண்டு வந்தது

இந்த வழக்கு நடந்து கொண்டிருக்கும் போதே 3 பேர் உயிரிழந்தனர். இந்நிலையில் இன்று தீர்ப்பை வாசித்த நீதிபதி, 5 பேர் முறையாக ஆஜராகத்தால் அவர்களை தவிர மீதமுள்ள 56 பேரையும் விடுதலை செய்து உத்தரவிட்டார்.


















