செய்திகள் :

முரண்டு பிடிக்கும் சிபிஎம்; ஆப்சென்ட் ஆன விசிக! - கூட்டணி தலைவலியில் அறிவாலயம்!

post image

திமுக கூட்டணியில் நிலவி வரும் இழுபறிக்கு இன்னமும் ஒரு முடிவு கிடைக்கவில்லை. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியுடன் இன்று காலை கூட்டணி ஒப்பந்தத்தை முடித்த திமுக, இன்றே விசிக மற்றும் சி.பி.எம் உடனும் கூட்டணி ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் என எதிர்பார்க்கப்பட்டது.

CPI
CPI

ஆனால், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் 'அதிக சீட்டுகள் வேண்டும்' என்கிற தங்களின் நிலைப்பாட்டி உறுதியாக நிற்பதாலும், விசிக திடீரென முதல்வருடனான சந்திப்பை தவிர்த்ததாலும் கூட்டணியை இறுதி செய்ய முடியாமல் தலைவலியில் தவிக்கிறது அறிவாலயம்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நேற்று திமுகவுடன் மூன்றாம் கட்ட பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருந்தது. பேச்சுவார்த்தையை முடித்துவிட்டு, 'அதிக தொகுதிகளில் நிற்க வேண்டும் என்கிற எங்களின் நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கிறோம்' என பெ.சண்முகம் பேசியிருந்தார்.

இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் இருவருக்கும் ஒரே எண்ணிக்கையிலான தொகுதியை ஒதுக்கும் முடிவிலேயே திமுக இருந்தது. இதனால் இரு கட்சியினரும் ஒரே நாளில் ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், சிபிஐ இன்று காலை திமுகவுடன் 5 தொகுதிகளில் போட்டியிட ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது.

Shanmugam
Shanmugam

சி.பி.எம் க்கும் 5 தொகுதிகளை மட்டுமே கொடுக்க திமுக முடிவெடுத்திருப்பதாகவும் தகவல் வெளியானது. இதைத் தொடர்ந்து சி.பி.எம் இன் மாநில நிர்வாகக் குழு இன்று கூடியது. அந்தக் கூட்டத்தில் அதிக தொகுதிகளை கேட்டுப் பெறும் தங்களின் நிலைப்பாட்டில் உறுதியாக இருக்க சி.பி.எம் முடிவெடுத்திருப்பதாக தெரிகிறது.

அதன்படி, '6 சீட்டுக்கு மேல் என்றால் அறிவாலயத்துக்கு பேச வருகிறோம். இல்லையென்றால் எங்களை அழைக்காதீர்கள்.' என கறாராக ஒரு செய்தியை சி.பி.எம் திமுக தரப்பு கூறிவிட்டதாகவும் தோழர்கள் வட்டத்தில் கிசுகிசுக்கின்றனர்.

அதிக தொகுதிகளை கொடுக்க மனமில்லாத திமுக, விட்டுப்பிடிக்கும் மைண்ட் செட்டுக்கு வந்திருப்பதாக கூறுகின்றனர் அறிவாலய வட்டாரத்தினர்.

சி.பி.எம் போல விசிக முரண்டு பிடிக்கவில்லை. கடந்த முறை போட்டியிட்டதிலிருந்து சீட்டுகள் குறையாது என விசிக தரப்புக்கு திமுக உத்தரவாதமும் கொடுத்திருந்தது. இதைத் தொடர்ந்து விசிக இன்று மாலை கூட்டணி ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதாக தகவல் வெளியானது. விசிக தரப்பிலும் மாலை 5:30 மணியளவில் அறிவாலயத்தில் முதல்வரை சந்திக்க நேரம் வாங்கப்பட்டிருந்தது.

திருமாவளவன்
திருமாவளவன்

ஆனால், திடீரென மாலை 5:10 மணிக்கு முதல்வரை சந்திக்க வரவில்லை என விசிக தரப்பில் சொல்லப்பட்டதாக கூறுகின்றனர் அறிவாலய வட்டாரத்தினர். 'சீட் குறைப்பு இல்லை' என்கிற போதும் கடைசி நிமிடத்தில் விசிக முதல்வரின் அப்பாய்ண்மெண்டை கேன்சல் செய்ததில் அறிவாலயமே குழம்பி போயிருக்கிறது.

அறிவாலயத்தின் தொகுதி பங்கீடு தலைவலி என்று முடியுமோ?

State Politics: `முயன்று பார்க்கும் கனிமொழி' - தள்ளிப்போடும் தலைமை?

துாத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினராக உள்ள கனிமொழி, தி.மு.க வின் தென்மண்டல பொறுப்பாளராகவும் இருக்கிறார். வரும் சட்டமன்ற தேர்தலில் கனிமொழி கையிலெத்தெடுத்த ஒரு மூவ் காரணமாக தி.மு.க தலைமையும் கொஞ்சம் ஷாக்... மேலும் பார்க்க

``ராகுல் காந்தியைப் பார்க்கும்போது அசௌகரியமாக இருக்கிறது" - கங்கனா ரனாவத்

நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடர் நடந்து வருகிறது. எரிவாயு தட்டுப்பாடு முதல் ஈரான் - அமெரிக்க, இஸ்ரேல் போர் வரை பல்வேறு விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்படுகிறது. இந்த நிலையில், கடந்த 12-ம் தேதி சம... மேலும் பார்க்க

சேகர் பாபு தொகுதியில் ரஜினி ரசிகரை களமிறக்கும் விஜய்? - பின்னணி என்ன?

அமைச்சர் சேகர் பாபுவின் துறைமுகம் தொகுதியில் ரஜினி ரசிகர் மன்ற மாவட்டத் தலைவர் அசோக் குமாரை வேட்பாளராக நிறுத்த தவெக ஆயத்தமாகி வருவதாக கிசுகிசுக்கின்றனர் பனையூர் வட்டாரத்தினர். ஆனால், அட்வகேட் ஒருவரும்... மேலும் பார்க்க

முடிவுக்கு வரும் இழுபறி? ஒப்பந்தமாகும் திமுக - விசிக கூட்டணி.! எத்தனை தொகுதிகள்?

திமுக விசிக கூட்டணி இடையே தொகுதி பங்கீட்டில் இழுபறி நீடித்த நிலையில் பேசுவார்த்தையில் ஒரு முடிவு எட்டப்பபட்டிருப்பதாக கூறப்படுகிறது. விசிகவுக்கும் எத்தனை தொகுதிகள் ஒதுக்கப்படும் என விசாரித்தோம். திரும... மேலும் பார்க்க

'1 மணி நேரத்தில் 51 விருப்ப மனுக்கள் மட்டுமே விநியோகம்;ஆர்வம் காட்டாத நிர்வாகிகள்! - அப்செட் சசிகலா?

அனைத்திந்திய புரட்சித் தலைவர் மக்கள் முன்னேற்றக் கழகம் மூலம் தமிழகம் மற்றும் புதுச்சேரி சட்டமன்றத் தேர்தலுக்கான விருப்பமனு விநியோகத்தை தொடங்கியிருக்கிறார் சசிகலா. நிர்வாகிகள் மத்தியில் விருப்ப மனு வாங... மேலும் பார்க்க