செய்திகள் :

சேகர் பாபு தொகுதியில் ரஜினி ரசிகரை களமிறக்கும் விஜய்? - பின்னணி என்ன?

post image

அமைச்சர் சேகர் பாபுவின் துறைமுகம் தொகுதியில் ரஜினி ரசிகர் மன்ற மாவட்டத் தலைவர் அசோக் குமாரை வேட்பாளராக நிறுத்த தவெக ஆயத்தமாகி வருவதாக கிசுகிசுக்கின்றனர் பனையூர் வட்டாரத்தினர்.

ஆனால், அட்வகேட் ஒருவரும் இதே தொகுதியில் சீட் கேட்டு முட்டி மோதி வருவதால் போட்டி சுவாரஸ்யமடைந்திருப்பதாக கூறுகின்றனர் விவரமறிந்தவர்கள்.

Vijay
Vijay

சில வாரங்களுக்கு முன்பு ரஜினி ரசிகர் மன்றத்தின் தென் சென்னை கிழக்கு மாவட்டச் செயலாளர் `சினோரா' அசோக் குமார் ஆதவ் மூலமாக விஜய்யின் முன்னிலையில் தவெகவில் இணைந்திருந்தார். தொழிலதிபரான இவர் கட்சிக்குள் வரும்போதே துறைமுகம் தொகுதியை குறிவைத்துதான் வந்தார் என்கின்றனர் தவெகவினர்.

'அசோக் குமார் தொழில்ரீதியாக ஆதவ்வுக்கு நெருக்கமானவர். அந்த பழக்கத்தில்தான் தலைவரையே நேரில் சந்தித்து கட்சியிலும் இணைந்தார். தலைமை சைதாப்பேட்டைக்கும் துறைமுகத்துக்கும் மட்டுமே இன்னும் மா.செக்களை நியமிக்கவில்லை. சைதாப்பேட்டை தொகுதியை ஏற்கனவே பொதுச்செயலாளர் ஆனந்துக்கு நெருக்கமான ஒரு தொழிலதிபர் கேட்கிறார். அவருக்கு தொகுதியை வாங்கி கொடுக்கும் முடிவில் பொதுச்செயலாளர் இருக்கிறார்.

துறைமுகம் தொகுதிக்கு அட்வகேட் விஜயகுமார் முட்டி மோதிக் கொண்டிருக்கிறார். கடந்த வாரத்தில் தலைமை நடத்திய நேர்காணலிலும் கலந்துவிட்டு வந்தார். இவரே சமீபத்தில் கட்சிக்குள் வந்தவர்தான். ஆனாலும் மக்கள் இயக்க நிர்வாகிகளாக இருந்தவர்கள் யாரும் சீட் கேட்கவில்லை என்பதால், தனக்கு சீட் கிடைக்கும் என நம்பிக்கையோடு இருந்தார். இப்போது அதில்தான் சிக்கலே வந்திருக்கிறது.

Ashok
Ashok

ரஜினி ரசிகரான அசோக்கும் துறைமுகத்தை கேட்கிறார். ஆதவ் தன்னுடைய கோட்டாவில் அசோக்குக்கு சீட் பெற்றுத்தர முயற்சிக்கிறார். ஆதவ்வே நேரடியாக சிபாரிசு செய்வதால் அசோக்கின் பெயரே துறைமுகம் தொகுதிக்கு டிக் ஆக வாய்ப்பிருக்கிறது' என்கின்றனர் உள்விவகாரம் அறிந்த நிர்வாகிகள் சிலர்.

'விஜய் அண்ணங்கிட்டயே துறைமுகம் தொகுதியை நான் பார்த்துக்கிறேன்னு அசோக் அண்ணன் சொல்லிடாரு' என ஆதவ்வும் நேற்று கொளத்தூரில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசியிருக்கிறார். ஆக, ரஜினி ரசிகருக்காக ஓட்டு கேட்க தயாராகி வருகின்றனர் தவெகவினர்?

State Politics: `முயன்று பார்க்கும் கனிமொழி' - தள்ளிப்போடும் தலைமை?

துாத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினராக உள்ள கனிமொழி, தி.மு.க வின் தென்மண்டல பொறுப்பாளராகவும் இருக்கிறார். வரும் சட்டமன்ற தேர்தலில் கனிமொழி கையிலெத்தெடுத்த ஒரு மூவ் காரணமாக தி.மு.க தலைமையும் கொஞ்சம் ஷாக்... மேலும் பார்க்க

``ராகுல் காந்தியைப் பார்க்கும்போது அசௌகரியமாக இருக்கிறது" - கங்கனா ரனாவத்

நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடர் நடந்து வருகிறது. எரிவாயு தட்டுப்பாடு முதல் ஈரான் - அமெரிக்க, இஸ்ரேல் போர் வரை பல்வேறு விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்படுகிறது. இந்த நிலையில், கடந்த 12-ம் தேதி சம... மேலும் பார்க்க

முடிவுக்கு வரும் இழுபறி? ஒப்பந்தமாகும் திமுக - விசிக கூட்டணி.! எத்தனை தொகுதிகள்?

திமுக விசிக கூட்டணி இடையே தொகுதி பங்கீட்டில் இழுபறி நீடித்த நிலையில் பேசுவார்த்தையில் ஒரு முடிவு எட்டப்பபட்டிருப்பதாக கூறப்படுகிறது. விசிகவுக்கும் எத்தனை தொகுதிகள் ஒதுக்கப்படும் என விசாரித்தோம். திரும... மேலும் பார்க்க

'1 மணி நேரத்தில் 51 விருப்ப மனுக்கள் மட்டுமே விநியோகம்;ஆர்வம் காட்டாத நிர்வாகிகள்! - அப்செட் சசிகலா?

அனைத்திந்திய புரட்சித் தலைவர் மக்கள் முன்னேற்றக் கழகம் மூலம் தமிழகம் மற்றும் புதுச்சேரி சட்டமன்றத் தேர்தலுக்கான விருப்பமனு விநியோகத்தை தொடங்கியிருக்கிறார் சசிகலா. நிர்வாகிகள் மத்தியில் விருப்ப மனு வாங... மேலும் பார்க்க

நெல்லை: காருக்குள் தாயை கட்டியணைத்தபடி கருகிக்கிடந்த குழந்தைகள்; 4 பேர் உயிரிழப்பின் பகீர் பின்னணி!

குடும்பத்துடன் உயிரிழப்பதற்கு சற்று நேரத்துக்கு முன்பு ஆற்றங்கரை பள்ளிவாசல் பகுதியில் உள்ளவர்களுக்கு உணவு அளித்துள்ளனர். அத்துடன், ஏழைகள் மாற்றுத் திறனாளிகளுக்காக புத்தாடை வாங்கி வந்து கொடுத்து மகிழ்ந... மேலும் பார்க்க