செய்திகள் :

With Love: 'டூரிஸ்ட் ஃபேமிலி' படத்தின் சின்ன டச்..!" - சிம்ரன் டு எஸ்.ஜே.சூர்யா பாராட்டு!

post image

‘லவ்வர்’ மற்றும் ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ ஆகிய படங்களில் உதவி இயக்குநராகப் பணியாற்றிய மதன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘வித் லவ்’ (With Love). ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ படத்தின் இயக்குநரும் நடிகருமான அபிஷன் ஜீவிந்த் கதாநாயகனாக அறிமுகமாகும் இந்தப் படத்தில் அனஸ்வரா ராஜன் கதாநாயகியாக நடித்துள்ளனர். ஷான் ரோல்டன் இசையமைத்திருக்கும் இந்தப் படத்தை சௌந்தர்யா ரஜினிகாந்தின் Zion Productions மற்றும் மகேஷ் ராஜின் MRP Entertainment ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்திருக்கின்றன. பிப்ரவரி 6-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் இந்தப் படத்தின் சிறப்பு திரையிடல் சென்னை சத்யம் திரையரங்கில் நடைபெற்றது.

நடிகை ஸ்ருதிஹாசன்
நடிகை ஸ்ருதிஹாசன்

இந்த நிகழ்வில் ரஜினிகாந்த், நடிகை ஸ்ருதிஹாசன், இசையமைப்பாளர் அனிருத், இயக்குநர்கள் நெல்சன், கே.எஸ். ரவிக்குமார், சசிகுமார், சிம்ரன், சமுத்திரக்கனி, ஏ.ஆர். ரஹ்மானின் மகன் அமீன், விக்ரம் பிரபு எனப் பெரும் திரைப்பட்டாளமே கலந்துகொண்டது. திரைப்படத்தைப் பார்த்தப்பிறகு திரைப்பிரபலங்கள் சொன்னவை...

நடிகை ஸ்ருதி ஹாசன்:

``உண்மையிலேயே இன்று இந்தப் படத்தைப் பார்த்ததில் மிகுந்த மகிழ்ச்சி. படம் மிகச் சிறப்பாக வந்திருக்கிறது. நான் இந்தத் திரைப்படத்தை முழுமையாக ரசித்துப் பார்த்தேன். இந்தப் படம் நம் பழைய நினைவுகளை மீட்டெடுக்கும் ஒரு அழகான ‘நாஸ்டால்ஜிக்’ அனுபவத்தைத் தருகிறது.

அதே சமயம், இன்றைய காலத்திற்கு ஏற்ற வகையில் மார்டன் படமாகவும் உருவாக்கப்பட்டுள்ளது. படத்தின் எழுத்தும், இயக்கமும் மிகவும் நேர்த்தியாக இருக்கிறது. நடிகர்களின் பர்ஃபாமன்ஸும் அற்புதமாக இருந்தது. ஒட்டுமொத்தக் குடும்பமும் இணைந்து ரசிக்கக்கூடிய ஒரு அழகான படைப்பு. படத்தின் வெளியீட்டிற்காக நான் மிகவும் ஆவலோடு காத்திருக்கிறேன். படக்குழுவுக்கு என் வாழ்த்துகள்."

நடிகர் எஸ்.ஜே.சூர்யா
நடிகர் எஸ்.ஜே.சூர்யா

நடிகர் எஸ்.ஜே.சூர்யா:

``ரொம்ப நாளைக்குப் பிறகு ஒரு நல்ல 'ஃபீல் குட்' படம் பார்த்த திருப்தி. தற்போது 'ஜென்-சி' கிட்ஸ் காதல் என்று சொல்லிப் பல படங்கள் வந்தாலும், ஒரு நல்ல காதல் படம் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு 'வித் லவ்' ஒரு மிகச்சிறந்த உதாரணம். அனஸ்வரா மிகவும் 'க்யூட்' ஆகவும் அழகாகவும் நடித்துள்ளார். அவரது நடிப்பு மிகவும் இயல்பாக இருந்தது. குறிப்பாக, அவர் தனது காதலனைச் சந்திக்கும் காட்சிகள் மற்றும் அந்த உணர்ச்சிகரமான தருணங்கள் மிகவும் லவ்லியாக இருந்தன.

படத்தில் எமோஷன் மட்டுமல்லாமல் கமர்ஷியல் அம்சங்களும் சிறப்பாக அமைந்துள்ளது. படத்தில் ஒரு மாஸ் மசாலாவான பகுதியும் இருக்கிறது. குறிப்பாக 'அவள் அருவாளா' பாடலில் அவர்கள் காட்டிய அந்த எனர்ஜி மற்றும் உழைப்பு மிகவும் அழகு. எனக்கே இந்தப் படத்தை இன்னும் இரண்டு, மூன்று முறை பார்க்க வேண்டும் என்ற ஆசை வந்துவிட்டது. இயக்குநர் மதனின் நேர்த்தியான திரைக்கதையையும், சௌந்தர்யா ரஜினிகாந்த் மற்றும் மகேஷ் ஆகியோரின் தரமான தயாரிப்பும் பாராட்டுக்குரியது. இது மக்கள் அனைவரும் குடும்பத்துடன் பார்த்து ரசிக்க வேண்டிய ஒரு அழகான படம்."

நடிகை சிம்ரன்
நடிகை சிம்ரன்

நடிகை சிம்ரன்:

``ரொம்ப நாளைக்கு அப்புறம் ஒரு நல்ல 'ஃபீல் குட்' லவ் ஸ்டோரியைப் பார்த்த உணர்வு இருக்கிறது. அனஸ்வரா மற்றும் அபிஷந்த் இருவரும் மிக அற்புதமாக நடித்துள்ளனர். இவர்களுக்கிடையேயான கெமிஸ்ட்ரி படத்திற்குப் பெரிய பலம். இயக்குநர் மதன் முதல் முறையிலேயே முத்திரை பதித்திருக்கிறார். குறிப்பாக, 'டூரிஸ்ட் ஃபேமிலி' படத்தின் ஒரு சிறிய டச் இந்தப் படத்திலும் ஆங்காங்கே தெரிகிறது. அது ரசிகர்களுக்குப் பிடித்தமான ஒரு விஷயமாக இருக்கும். இது நிச்சயம் திரையரங்குகளில் பெரிய வெற்றியைப் பெறும். நான் இந்தப் படத்தை மிகவும் ரசித்தேன், அதேபோல் ஆடியன்ஸும் கண்டிப்பா கொண்டாடுவாங்க. ஒரு நல்ல படைப்பைத் தயாரித்த சௌந்தர்யா ரஜினிகாந்த் மற்றும் மகேஷ் ஆகியோருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள்."

"இசுலாமியச் சொந்தங்கள் அனுபவிக்கும் துயரங்களின் ஒரு துளிதான் இந்த ‘சிறை’!"- படத்தை பாராட்டிய சீமான்

விக்ரம் பிரபு நடிப்பில் கடந்த டிசம்பர் 25 ஆம் தேதி வெளியான திரைப்படம் 'சிறை'.'டாணாக்காரன்' இயக்குநர் தமிழ் எழுதிய கதையை, அறிமுக இயக்குநர் சுரேஷ் இயக்கியிருந்தார்.'7 Screen Studio' லலித் குமார் தயாரித்... மேலும் பார்க்க

With Love: ``96, ஆட்டோகிராப், ராஜா ராணி மாதிரியான படம்.!" - இயக்குநர் கே.எஸ் ரவிக்குமார்

‘லவ்வர்’ மற்றும் ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ ஆகிய படங்களில் உதவி இயக்குநராகப் பணியாற்றிய மதன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘வித் லவ்’ (With Love). ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ படத்தின் இயக்குநரும் நடிகருமான அபிஷன் ஜீவி... மேலும் பார்க்க

With Love: மகள் தயாரித்த படம் குறித்து நடிகர் ரஜினிகாந்தின் 'ஒன் லைன்' விமர்சனம்!

இன்றைய இளைஞர்களின் காதல், கனவுகள் மற்றும் வாழ்வியலை மையமாக வைத்து உருவாகியுள்ள ‘வித் லவ்’ (With Love) திரைப்படம் வரும் பிப்ரவரி 6-ம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது. வெளியீட்டிற்கு முன்பே... மேலும் பார்க்க

Re Releases: 'இந்த மாதம் ரீ ரிலீஸ் மாதம்!'; வரிசைகட்டும் ரீ ரிலீஸ் படங்கள் - என்னென்ன தெரியுமா?

கடந்த சில வருடங்களாக ரீ-ரிலீஸ் படங்களும் திரையரங்குகளில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றன. அதற்கு உதாரணமாக 'கில்லி', '3' போன்ற படங்களின் ரீ ரிலீஸை சொல்லலாம்.இந்த ரீ-ரிலீஸ் டிரெண்டில் கடந்தாண்டு வெளியா... மேலும் பார்க்க

Madhavan: "நான் செய்துவந்த வேலைகளால் மிகவும் விரக்தியடைந்து போயிருந்தேன்!" - நடிகர் மாதவன்

நடிகர் மாதவன் சமீபத்தில் பாலிவுட்டில் வெளியான ‘துரந்தர்’ படத்தில் நடித்திருந்தார். அது மட்டுமல்ல, கடந்த 2025-ம் ஆண்டு மிகவும் பிஸியாகவே அவர் வலம் வந்தார். 2012-ஆம் ஆண்டுக்குப் பிறகு தமிழ் சினிமாவிலிரு... மேலும் பார்க்க