செய்திகள் :

"ஒரு கட்சி தலைவருக்கு நாலு விஷயங்கள் தெரிய வேண்டாமா?" - விஜய்க்கு எடப்பாடி பதிலடி!

post image

கடந்த சில வாரங்களுக்கு முன்புதான் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முதற்கட்டமாக 5 தேர்தல் வாக்குறுதிகளை அறிவித்திருந்தார்.

குறிப்பாக திமுக ஆட்சியில் மாதந்தோறும் 1000 ரூபாயாக வழங்கப்படும் உதவித்தொகை அதிமுக ஆட்சிக்கு வந்தால் 2000 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும் என்று அறிவித்திருந்தார்.

அதுமட்டுமின்றி பெண்களுக்கு மட்டும் அல்லாமல் ஆண்களுக்கும் இலவச பேருந்து வசதி ஏற்படுத்தப்படும் என்று தெரிவித்திருந்தார்.

எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி

இரண்டாம் கட்ட வாக்குறுதி

இந்நிலையில் இரண்டாம் கட்டமாக தேர்தல் வாக்குறுதிகளை இன்று (பிப்.4) எடப்பாடி பழனிசாமி அறிவித்திருக்கிறார்.

*சிறுபான்மையினர் மகளிருக்கு வட்டி இல்லாக் கடன்

* ஜல்லிக்கட்டு நடத்த 5 லட்சம் மானியம்

* மாற்றுதிறனாளிகளின் கூட்டுறவுக் கடன் தள்ளுபடி

* முதியோருக்கான ஓய்வூதியம் ரூ. 2000

* ஆண்டுக்கு மூன்று சிலிண்டர்கள் இலவசம்

* மாணவர்களின் கல்விக்கடன் ரத்து செய்யப்படும்

போன்ற வாக்குறுதிகளை அறிவித்திருக்கிறார்.

விஜய்க்கு ஒன்றுமே தெரியவில்லை!

இதனைத்தொடர்ந்து அதிமுகவை விஜய் விமர்சித்தது குறித்து செய்தியாளர்கள் சந்திப்பில் எடப்பாடி பழனிசாமியிடம் கேள்வி கேட்கப்பட்டது.

அதற்கு பதிலளித்த அவர், " ஒரு சம்பவம் (கரூர்) நடந்து 72 நாட்கள் கழித்து தான் அவர் வெளியில் வந்தார்.

வெளியே வந்தால் தான் விஜய்க்கு விஷயம் தெரியும். விஜய்க்கு ஒன்றுமே தெரியவில்லை.

ஒரு கூட்டணி கட்சிக்கு யார் தலைமை தாங்குகிறார்கள் என்று கூட அவருக்கு தெரியவில்லை.

தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு அதிமுக தலைமைத் தாங்கும் என்று ஏற்கனவே தெளிவுபடுத்தி விட்டார்கள்.

ஒரு கட்சி தலைவருக்கு நாலு விஷயங்கள் தெரிய வேண்டாமா?. ஒரு முறையாவது முதலில் செய்தியாளர்களைச் சந்தித்து அவரை பேச சொல்லுங்கள்.

தவெக தலைவர் விஜய்
தவெக தலைவர் விஜய்

யாரை குறிப்பிடுகிறார்?

ஊழல் சக்தி என்று அவர் யாரை குறிப்பிடுகிறார். எங்களை எல்லாம் ஊழல் என்று சொல்லவே முடியாது.

அதிமுக ஆட்சியில் என்னை ஊழல்வாதி என்று குற்றம்சாட்டி இருந்தார்கள். ஆனால் நான் நிரபராதி என்று நீதிப்பெற்று வெளியில் வந்திருக்கிறேன்.

அதிமுகவில் இருந்து வெளியேறிய ஒருத்தர் தவெகவில் இணைந்திருக்கிறார். அவர் ஊழல் குற்றச்சாட்டில் சிறையில் இருந்து வெளியே வந்தவர் தான். அப்போது விஜய் யாரைக் குறிப்பிடுகிறார்.

எங்களைக் குறிப்பிட்டு சொன்னால் அதற்கான பதிலை தெளிவாகச் சொல்லுவோம்" என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்திருக்கிறார்.

திருநெல்வேலி: மூடிக் கிடக்கும் ஆதிதிராவிடர் சமுதாயக்கூடம்; சீரமைத்துத் திறக்கப்படுமா?!

திருநெல்வேலி சந்திப்பு அருகிலிருக்கும் இரட்டைப் பாலத்திற்குக் கீழே ஆதிதிராவிடர் சமுதாய நலக்கூடம் இருக்கிறது. இந்த சமுதாய நலக்கூடமானது அதற்கு முன்னிருக்கும் கல்வெட்டு தகவலின்படி ரூ. 30 லட்சம் மதிப்பீட்... மேலும் பார்க்க

`தேசியவாத காங்கிரஸ் அணிகள் இணைவது பற்றி பேச பட்னாவிஸுக்கு என்ன உரிமை இருக்கிறது?'- சரத் பவார் கேள்வி

மகாராஷ்டிராவில் கடந்த மாதம் 28-ம் தேதி மாநில துணை முதல்வர் அஜித் பவார் திடீரென விமான விபத்தில் காலமானார். அவரது மரணத்தைத் தொடர்ந்து அஜித் பவார் மனைவி சுனேத்ரா பவார் அவசர அவசரமாக துணை முதல்வர் பதவியை ஏ... மேலும் பார்க்க

`4 சுவருக்குள் முடிந்திருக்க வேண்டியது' பூதாகரமாக்கிய அண்ணாமலை - விலகல் அறிவிப்பின் பின்னணி!

சட்டமன்ற தேர்தல் பரபரப்புகளால் அரசியல் களம் சூடாகியுள்ளது. மதுராந்தகம் பொதுக்கூட்டத்தை நடத்தி தெம்புடன் இருந்த தேசிய ஜனநாயக கூட்டணியில், அண்ணாமலை 6 தொகுதிகளுக்கான பொறுப்பாளர் பதவியில் இருந்து விலகியிர... மேலும் பார்க்க

``பிரதமர் வந்தால் நானே நேரில் சென்று இதை வழங்குவேன்" - நரவானே எழுதிய புத்தகம் குறித்து ராகுல் காந்தி

சீன ஊடுருவல் குறித்தும், அப்போது ராணுவத் தளபதியாக இருந்த நரவானே, தான் சந்தித்த சவால்கள் குறித்தும், அரசின் சில நடவடிக்கைகள் குறித்தும் 'ஃபோர் ஸ்டார்ஸ் ஆஃப் டெஸ்டினி' என்ற புத்தகத்தில் எழுதியிருக்கிறார... மேலும் பார்க்க

'ஆண்டுக்கு 3 சிலிண்டர்கள் இலவசம் டு கல்விக்கடன் ரத்து' - 2ம் கட்ட வாக்குறுதிகளை அறிவித்த எடப்பாடி

தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கிகொண்டிருக்கிறது. இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், பேரணி, பிரசாரம், பொதுக்கூட்டம், தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தைகள் என அரசியல் களம் அனல் பறக்கிறது.இது ஒருபுறம் இருக்... மேலும் பார்க்க

``ராகுல் கேள்விகளைக் கண்டு மத்திய பாஜக அரசு ஏன் அஞ்சுகிறது?" - முதல்வர் ஸ்டாலின்

சீனா ஊடுருவல் குறித்தும் அப்போது இராணுவத் தளபதியாக இருந்த நரவானே சந்தித்த சவால்கள் குறித்தும், அரசின் சில நடவடிக்கைகள் குறித்தும் 'ஃபோர் ஸ்டார்ஸ் ஆ டெஸ்டினி' என்ற புத்தகத்தில் எழுதியிருக்கிறார். அந்த ... மேலும் பார்க்க