செய்திகள் :

'மீண்டுமா?' 2 நாள்களில் ரூ.7,500 ஏறிய தங்கம் விலை; இப்போதே வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்வதா? | Gold

post image

கடந்த ஆண்டில் இருந்து 'கிடுகிடு'வென ஏறி வந்த தங்கம் விலை, கடந்த 29-ம் தேதி வரை ரூ.1.34 லட்சம் வரை சென்றது.

இது சென்னையின் தங்கம் விலை நிலவரம்.

அதன் பிறகு, 'விறுவிறு'வென இறங்கியது. 'ஒளி தெரிகிறது' என்று மக்கள் கொஞ்சம் சந்தோஷப்பட்டுக் கொண்டிருந்த வேளையில், தங்கம் விலை மீண்டு.....ம் உயரத் தொடங்கியிருக்கிறது.

நேற்றும், இன்றும் மட்டுமே தங்கம் கிராமுக்கு ரூ.950-ம், பவுனுக்கு ரூ.7,600-ம் உயர்ந்துள்ளது.

இந்த விலை தொடருமா... இப்போது என்ன செய்வது என்பதை விளக்குகிறார் பங்குச்சந்தை நிபுணர் ரெஜி தாமஸ்.
பங்குச்சந்தை நிபுணர் ரெஜி தாமஸ்
பங்குச்சந்தை நிபுணர் ரெஜி தாமஸ்

"சர்வதேச சந்தையில் தங்கம் மற்றும் வெள்ளி விலை ஏறியிருப்பதே, இன்றைய தங்கம் விலை உயர்விற்கான காரணம்.

தங்கம் விலை இப்போது ஏன் உயர்கிறது?

சில நாள்களாக, தங்கம் விலையில் கரெக்‌ஷனும், இன்னொரு பக்கம், பிராஃபிட் டேக்கிங்கும் நடந்தன. இவை இரண்டும் ஒரு முடிவிற்கு வர, இப்போது மீண்டும் முதலீட்டாளர்கள் தங்கத்தின் பக்கம் வந்திருக்கின்றனர்.

இது வழக்கமான பேட்டர்ன் தான்.

அமெரிக்க ஃபெடரல் ரிசர்வ் வங்கியின் அடுத்த கவர்னர் யார் என்கிற எதிர்பார்ப்பு இருந்து வந்தது. அதற்கான பதில், 'கெவின் வாஸ்' என்று தெரிய வந்தது.

இந்தப் பதில் தெரிவதற்கு முன்னால், தங்கம் விலையில் ஒரு நிலையற்ற தன்மை இருந்தது. பதில் தெரிந்ததும், சந்தை ஒரு நிலைத்தன்மையைப் பெற்றது.

தங்கம் விலை ஏற்றம்
தங்கம் விலை ஏற்றம்

ஆனால், இந்த ஒரே ஒரு கேள்வியால் மட்டும் தங்கம் விலை உயர்ந்து வந்ததா என்று கேட்டால், 'இல்லவே இல்லை'. இதைத் தாண்டி பல காரணிகள் தங்கம் விலையில் முக்கிய பங்காற்றின.

ஆனால், அவற்றுக்கான பதில் இன்னமும் தெரியவில்லை. அவை இன்னும் தொடர்ந்துகொண்டே தான் இருக்கின்றன.

ஆக, உலக அளவில் ஒரு நிலையற்ற தன்மை இருந்துதான் வருகிறது.

அதனால், முதலீட்டாளர்கள் தங்கம், வெள்ளியில் மீண்டும் முதலீடு செய்யத் தொடங்கியிருக்கிறார்கள்.

'நாம்' என்ன செய்யலாம்?

தங்கம் மற்றும் வெள்ளி ETF-ல் சிறிய அளவில் முதலீடு செய்யலாம். SIP போட்டு வருபவர்கள் குறைந்த தொகையை தொடர்ந்து முதலீடு செய்து வரலாம்.

தங்க நகை வாங்க நினைப்பவர்கள், 'தேவை' என்றால் மட்டும் வாங்குவது நல்லது. மற்றபடி, அவர்களுக்கும் மேலே சொன்னவை நல்ல ஆப்ஷன்.

எஸ்.ஐ.பி SIP
எஸ்.ஐ.பி SIP

ஆனால், எக்காரணத்தைக் கொண்டும் லம்சம் தொகையை முதலீடு செய்துவிடாதீர்கள்.

கமாடிட்டி சந்தையைப் பொறுத்த வரை, எப்போதுமே 'டிரேடிங்' தான் சிறந்த... சூப்பர் ஆப்ஷன்.

அதனால், தங்கம், வெள்ளியில் இப்போது நல்ல டிரேடிங் வாய்ப்பு காத்திருக்கிறது.

ஆனால், டிரேடிங்கின் போது மிக மிக கவனம் தேவை".

பங்குச்சந்தை சம்பந்தப்பட்ட தினம் தினம் தகவல்களைத் தெரிந்துகொள்ள 'Vikatan Play'-ல் 'Opening Bell Show' தினமும் காலை கேளுங்கள்.

Vikatan Play-ல் Opening Bell Show
Vikatan Play-ல் Opening Bell Show

Data in this section is not a buy/sell recommendation but only a compilation of information on various technical/volume-based parameters

Analyst certifies that all of the views, if any, expressed in this report reflect his personal views about the subject company or companies and its or their securities, and no part of his compensation was, is or will be, directly or indirectly related to specific recommendations or views expressed in this report. Analyst affirms that there exists no conflict of interest that can bias his views in this report. The Analyst does not hold any share(s) in the company/ies discussed.

INVESTMENT IN SECURITIES MARKET ARE SUBJECT TO MARKET RISKS. READ ALL THE RELATED DOCUMENTS CAREFULLY BEFORE INVESTING. Registration granted by SEBI and certification from NISM in no way guarantee the performance of the intermediary or provide any assurance of returns to investors. For a detailed disclaimer and disclosure please visit https://www.vikatan.com/business/share-market/113898-disclaimer-disclosures. Before making an investment/trading decision on the basis of this data you need to consider, with the assistance of a qualified adviser, whether the investment/trading is appropriate in light of your particular investment/trading needs, objectives and financial circumstances.

One year Price history of the daily closing price of the securities covered in this section is available at https://www.nseindia.com/report-detail/eq_security (Choose the respective symbol) /name of company/time duration)

மீண்டும் 'ராக்கெட்' வேகத்தில் தங்கம் விலை: ரூ.5,000 உயர்வு; இன்றைய தங்கம் விலை என்ன?|Gold Rate

அதே விலை...இன்று தங்கம் விலை கிராமுக்கு ரூ.630 ஆகவும், பவுனுக்கு ரூ.5,040 ஆகவும் உயர்ந்துள்ளது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.20 உயர்ந்துள்ளது.Sovereign Gold Bond வைத்திருக்கிறீர்களா? - பட்ஜெட் அறிவிப்பு ... மேலும் பார்க்க

Gold: ட்ரம்ப் அசைவில் ஏற்ற, இறக்கங்களைச் சந்திக்கும் தங்க விலை; அதற்கு அப்படி என்னதான் காரணம்?

கடந்த சில மாதங்களாகவே, அமெரிக்க அதிபர் ட்ரம்பின் ஒவ்வொரு அறிவிப்புக்கும் தங்கம் விலை மாற்றத்தைச் சந்தித்து வருகிறது. அவர் சீனாவைச் சீண்டும் போதெல்லாம் தங்கம் விலை தாறுமாறாக எகிறியது. வெனிசுலா அதிபர் ம... மேலும் பார்க்க

Gold Rate: 'கொஞ்சம் ஏற்றம், கொஞ்சம் குறைவு' - இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம் என்ன?

தங்கம் | ஆபரணம்இன்று தங்கம் விலை கிராமுக்கு ரூ.80 ஆகவும், பவுனுக்கு ரூ.640 ஆகவும் உயர்ந்துள்ளது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.20 குறைந்துள்ளது.தங்கம் | ஆபரணம்இன்று ஒரு கிராம் தங்கத்தின் (22K) விலை ரூ.14,... மேலும் பார்க்க

'குறையுதே!' ரூ.7,600 குறைந்த தங்கம் விலை; இன்றைய தங்கம் விலை நிலவரம் என்ன?|Gold Rate

தங்கம் | ஆபரணம்இன்று தங்கம் விலை கிராமுக்கு ரூ.950 ஆகவும், பவுனுக்கு ரூ.7,600 ஆகவும் குறைந்துள்ளது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.20 குறைந்துள்ளது.'டக்'கென ரூ.15,000 குறைந்த தங்கம் விலை: இன்னும் குறையுமா?... மேலும் பார்க்க

'டக்'கென ரூ.15,000 குறைந்த தங்கம் விலை: இன்னும் குறையுமா? இப்போது எவ்வளவு முதலீடு செய்யலாம்?

மூன்று நாள்களுக்கு முன்பு (ஜனவரி 29), தங்கம் விலை கிராமுக்கு ரூ.1,190-உம், பவுனுக்கு ரூ.9,520-உம் உயர்ந்தது. அதன் பின், இப்போது வரை தங்கம் விலை கிராமுக்கு ரூ.1,900-உம், பவுனுக்கு ரூ.15,200-உம் குறைந்த... மேலும் பார்க்க

'ஹேப்பி நியூஸ்!' பவுனுக்கு ரூ.7,600 ; வெள்ளியும் 'அதிரடி குறைவு' இன்றைய தங்கம் விலை என்ன?|Gold Rate

தங்கம் | ஆபரணம்இன்று தங்கம் விலை கிராமுக்கு ரூ.950 ஆகவும், பவுனுக்கு ரூ.7,600 ஆகவும் குறைந்துள்ளது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.55 குறைந்துள்ளது.தங்கம் | ஆபரணம்இன்று ஒரு கிராம் தங்கத்தின் (22K) விலை ரூ.... மேலும் பார்க்க