செய்திகள் :

`மனசு பதறுகிறது; காவல்துறைக்குப் பாடம் புகட்டுவோம்' - அஜித்குமார் கொலை வழக்கு விசாரணையில் நீதிபதி!

post image

திருப்புவனம் மடப்புரம் பத்ரகாளி அம்மன் கோயில் காவலாளியாகப் பணிபுரிந்த அஜித்குமாரை, கடந்த 2025 ஜூன் 27ஆம் தேதி நகை காணாமல் போனது தொடர்பான புகாரில் தனிப்படைக் காவலர்கள் விசாரித்தனர். அதில் ஜூன் 28ஆம் தேதி அவர் கொலைசெய்யப்பட்டார்.

இந்தக் கொலை வழக்கில் தனிப்படைக் காவலர்களான கண்ணன், ராஜா, ஆனந்த், பிரபு, சங்கர மணிகண்டன் ஆகிய 5 பேர் கைதுசெய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

இதனிடையே அஜித்குமார் கொலை வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றி மதுரை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்த வழக்கில் கைதுசெய்யப்பட்டு சிறையில் உள்ள காவலர்கள் ஆனந்த் உள்ளிட்ட 5 பேர் தங்களுக்கு ஜாமீன் வழங்கக் கோரி மனுத்தாக்கல் செய்திருந்தனர்.

இந்த மனு, நீதிபதி ஸ்ரீமதி முன்பாக விசாரணைக்கு வந்தது.

அப்போது சிபிஐ தரப்பில், "அஜித்குமாரின் மரணம் ஒரு காவல் மரணம் என்பது உறுதியாகியுள்ளது. வழக்கு பதியப்பட்டுள்ள 10 பேருக்குமே இதில் தொடர்புள்ளது" எனத் தெரிவிக்கப்பட்டது.

உயர் நீதிமன்றம் மதுரைக் கிளை

அதையடுத்து நீதிபதி நகை திருட்டு புகார் அளிக்கப்பட்டது உண்மையா? என கேள்வி எழுப்பினர்.

அதற்கு சிபிஐ தரப்பில், "அது உண்மை இல்லை. அறிக்கையே தயாராகி வருகிறது." என தெரிவிக்கப்பட்டது.

அதற்கு நீதிபதி, "ஒன்றுமே இல்லாத விஷயத்திற்கு ஒருவரை அடித்துக் கொலை செய்துவிட்டனர். புகார் அளித்தவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டியதுதானே? அவர் தானே காரணம்?" எனக் கேள்வி எழுப்பினார்.

மேலும், ``இதற்கு என்ன காரணம்? முன்விரோதம் ஏதும் இருந்ததா?" எனக் கேள்வி எழுப்பினார்.

அஜித்குமார் மரண வழக்கு
அஜித்குமார் மரண வழக்கு

"முன்விரோதம் எதுவும் இல்லை. டிஎஸ்பி விசாரிக்குமாறு கூறியதால் இவ்வாறு நிகழ்ந்துள்ளது" என சிபிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

அதையடுத்து நீதிபதி, "யாராக இருந்தாலும் சிறையிலேயே இருக்கட்டும். மனசு பதறுகிறது. ஒன்றுமில்லா விஷயத்திற்கு ஒருவரை இப்படி அடித்திருக்கிறீர்கள். காவல்துறையினருக்குப் பாடம் புகட்டுவோம்" எனக் குறிப்பிட்டு வழக்கை பிப்ரவரி 17-ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

கரூர் துயரம் நிகழ்ந்த அதே வேலுச்சாமிபுரத்தில் பொதுக்கூட்டம்! - விஜய்யை சீண்டும் நாதக?

கரூர் வேலுச்சாமிபுரத்தில் நடந்த த.வெ.க தலைவர் விஜய்யின் பிரசாரக் கூட்டத்தில் நெரிசல் ஏற்பட்டு 41 பேர் பலியானார்கள். அதே வேலுச்சாமிபுரத்தில் 9.02.2025 நா.த.க பொதுக்கூட்டம் நடத்த கரூர் காவல்துறை அனுமதிய... மேலும் பார்க்க

Tax War: ரஷ்யாவின் 'வீட்டோ' முதல் ட்ரம்ப்பின் 'சந்தை' வரை... விடையின்றி நிற்கும் கேள்விகள்?!

அறிவிக்கப்படாத வரிப் போர்!அமெரிக்காஅமெரிக்க அதிபராக ட்ரம்ப் பதவியேற்றதிலிருந்து தொடர்ந்து தலைப்புச் செய்திகளில் இடம்பிடிக்கும்படியான வேலைகளைச் செய்துவருகிறார். அதே நேரம், திடீர் திடீரென அவரின் சமூக வல... மேலும் பார்க்க

அண்ணாமலை: புறக்கணிக்கும் தமிழக பாஜக; கைவிட்ட டெல்லி? - தேர்தல் பொறுப்பிலிருந்து விலகியது ஏன்?

`தேர்தல் பொறுப்பாளர் பதவியில் இருந்து விலகுகிறேன்' என பா.ஜ.க முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை அறிவித்திருப்பது தமிழக அரசியல் ஹாட் டாப்பிக்காக ஓடிக்கொண்டிருக்கிறது. 'தந்தைக்கு உடல்நிலை சரியில்லை' என அவ... மேலும் பார்க்க

தமிழ்நாட்டுக்கு 2 புல்லட் ரயில்கள்; சென்னை - பெங்களூரு 67.8 நிமிடங்களில்... அமைச்சர் அறிவிப்பு!

மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், நேற்று (ஞாயிறு) அதிவேக புல்லட் ரயில் திட்டங்கள் குறித்து செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.அப்போது அவர், ``தென் இந்தியாவில் ரயில்வேயின் அடுத்த மேம்பாட... மேலும் பார்க்க

"இதைவிட சுற்றுச்சூழலுக்கு எதிரான ஒரு பட்ஜெட்டைத் தாக்கல் செய்துவிட முடியாது!" - பூவுலகின் நண்பர்கள்

2025- 2026-ம் ஆண்டிற்கான பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். காலநிலை மாற்றத்தின் தீவிரத்தைத் தணிக்கவும், தடுக்கவும் பேரிடர் முன்னெச்சரிக்கை மற்றும் மேலாண்... மேலும் பார்க்க

`ரூ.6 லட்சம் கோடி ஊழல்; விசாரணைக்கு உத்தரவிட தயாரா?' - திமுக அரசுக்கு அன்புமணி ராமதாஸ் கேள்வி!

``திமுக மீதான ஊழல் புகார்கள் கற்பனையா? ரூ.6 லட்சம் கோடி ஊழல் குற்றச்சாட்டுகள் பற்றி விசாரணைக்கு ஆணையிட தயாரா?" எனக் கேள்வியெழுப்பி, திமுக அரசைச் சாடியிருக்கிறார், பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ். இது தொட... மேலும் பார்க்க