செய்திகள் :

கரூர் துயரம் நிகழ்ந்த அதே வேலுச்சாமிபுரத்தில் பொதுக்கூட்டம்! - விஜய்யை சீண்டும் நாதக?

post image

கரூர் வேலுச்சாமிபுரத்தில் நடந்த த.வெ.க தலைவர் விஜய்யின் பிரசாரக் கூட்டத்தில் நெரிசல் ஏற்பட்டு 41 பேர் பலியானார்கள். அதே வேலுச்சாமிபுரத்தில் 9.02.2025 நா.த.க பொதுக்கூட்டம் நடத்த கரூர் காவல்துறை அனுமதியளித்திருக்கிறது.

2025 செப்டம்பர் 27-ம் தேதி, தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் மக்கள் சந்திப்பு மற்றும் பிரசாரக் கூட்டத்தை நடத்தினார் விஜய். அந்த கூட்ட நெரிசலில் சிக்கி ஒன்றரை வயது குழந்தை முதல் 65 வயது பெண்மணி என 41 பேர் பலியாகினர்.

கரூர் துயர சம்பவம் குறித்து சி.பி.ஐ விசாரணையும் நடந்துவருகிறது. விசாரணைக்காக இரண்டுமுறை டெல்லி சி.பி.ஐ விசாரணைக்கு சென்றுவந்திருக்கிறார் விஜய். இச்சூழலில் துயர சம்பவம் நிகந்த வேலுச்சாமிபுரத்தில் 'ஏன் வேண்டும் நாம் தமிழர் ஆட்சி' என்ற பொதுக்கூட்டத்தை ஒருங்கிணைத்திருக்கிறது நா.த.க.

கரூர்: விஜய் பரப்புரை
கரூர்: விஜய் பரப்புரை

நம்மிடம் பேசிய விவரப்புள்ளிகள், "வேலுச்சாமிபுரத்தில் நா.த.க பொதுக்கூட்டம் நடத்துவதும் அதில் சாட்டை துரைமுருகன், இடும்பாவனம் கார்த்திக் பங்கேற்பதும் இயல்பாக அமைந்ததாக தெரியவில்லை. கரூர் துயர சம்பவம் நிகழ்ந்தபோது விஜய்யை வெளுத்து வாங்கியது நா.த.க முகாம்.

துயர் சம்பவத்துக்கு பொறுப்பேற்காமல் விஜய் சென்னை ஓடி பனையூரில் ஒளிந்துகொண்டதை தொடர் பிரசாரமாக முன்னெடுத்தனர். இன்றுவரையிலும் த.வெ.க-வின் அரசியலை கடுமையான விமர்சித்து வருகிறார்கள். இந்நிலையில் தேர்தல் நெருங்குவதால் கரூர் மாவட்ட பிரசாரப் பொதுக்கூட்டத்தை வேலுச்சாமிபுரத்தில் நடத்துகிறார்கள் நா.த.க-வினர்.

கரூர் துயரம்

கரூர் விவகாரத்தில் த.வெ.க-வின் மோசமான செயல்பாட்டையும் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை சென்னை அழைத்து விஜய் ஆறுதல் சொன்ன சம்பவங்கள் மீது கடும் விமர்சனங்களை எழுந்தன. அவற்றையெல்லாம் த.வெ.க- கடந்துவந்துள்ள நிலையில், கரூர் சம்பவத்தில் விஜய் கோட்டைவிட்ட விவகாரங்களை நினைவுகூறி அதை பேசுபொருளாக மாற்ற முயற்சிப்பதாகவும், கரூர் துயர சம்பவத்தில் பலியானோருக்கு அஞ்சலி செலுத்தி கவனம்ஈர்க்கும் ப்ளானுடன் நா.த.க-வினர் கரூர் செல்கின்றனர்.

துரைமுருகன், இடும்பாவனம் கார்த்திக், தமிழம் செந்தில்நாதன், சசிகுமார் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் பலரும் அந்த பொதுக்கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர். இந்த பொதுக்கூட்டத்துக்கு காவல்துறையின் அனுமதியும் கிடைத்திருக்கிறது" என்றனர்.

Tax War: ரஷ்யாவின் 'வீட்டோ' முதல் ட்ரம்ப்பின் 'சந்தை' வரை... விடையின்றி நிற்கும் கேள்விகள்?!

அறிவிக்கப்படாத வரிப் போர்!அமெரிக்காஅமெரிக்க அதிபராக ட்ரம்ப் பதவியேற்றதிலிருந்து தொடர்ந்து தலைப்புச் செய்திகளில் இடம்பிடிக்கும்படியான வேலைகளைச் செய்துவருகிறார். அதே நேரம், திடீர் திடீரென அவரின் சமூக வல... மேலும் பார்க்க

அண்ணாமலை: புறக்கணிக்கும் தமிழக பாஜக; கைவிட்ட டெல்லி? - தேர்தல் பொறுப்பிலிருந்து விலகியது ஏன்?

`தேர்தல் பொறுப்பாளர் பதவியில் இருந்து விலகுகிறேன்' என பா.ஜ.க முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை அறிவித்திருப்பது தமிழக அரசியல் ஹாட் டாப்பிக்காக ஓடிக்கொண்டிருக்கிறது. 'தந்தைக்கு உடல்நிலை சரியில்லை' என அவ... மேலும் பார்க்க

தமிழ்நாட்டுக்கு 2 புல்லட் ரயில்கள்; சென்னை - பெங்களூரு 67.8 நிமிடங்களில்... அமைச்சர் அறிவிப்பு!

மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், நேற்று (ஞாயிறு) அதிவேக புல்லட் ரயில் திட்டங்கள் குறித்து செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.அப்போது அவர், ``தென் இந்தியாவில் ரயில்வேயின் அடுத்த மேம்பாட... மேலும் பார்க்க

"இதைவிட சுற்றுச்சூழலுக்கு எதிரான ஒரு பட்ஜெட்டைத் தாக்கல் செய்துவிட முடியாது!" - பூவுலகின் நண்பர்கள்

2025- 2026-ம் ஆண்டிற்கான பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். காலநிலை மாற்றத்தின் தீவிரத்தைத் தணிக்கவும், தடுக்கவும் பேரிடர் முன்னெச்சரிக்கை மற்றும் மேலாண்... மேலும் பார்க்க

`ரூ.6 லட்சம் கோடி ஊழல்; விசாரணைக்கு உத்தரவிட தயாரா?' - திமுக அரசுக்கு அன்புமணி ராமதாஸ் கேள்வி!

``திமுக மீதான ஊழல் புகார்கள் கற்பனையா? ரூ.6 லட்சம் கோடி ஊழல் குற்றச்சாட்டுகள் பற்றி விசாரணைக்கு ஆணையிட தயாரா?" எனக் கேள்வியெழுப்பி, திமுக அரசைச் சாடியிருக்கிறார், பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ். இது தொட... மேலும் பார்க்க

`ஊழியர்களையும், ஆசிரியர்களையும் ஏமாற்ற நாடகங்கள்; திமுக ஆட்சியில் எல்லாமே ஏமாற்று வேலையா?'- அன்புமணி

`ஜனவரி மாதத்தில் ஓய்வு பெற்ற 5,000 அரசு ஊழியர்களுக்கு ஓய்வூதியம் எங்கே? திமுக ஆட்சியில் எல்லாமே ஏமாற்று வேலையா?' என திமுக அரசை நோக்கி கேள்விகளை அடுக்கியிருக்கிறார், பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்.இது தொ... மேலும் பார்க்க