செய்திகள் :

``ராகுல் கேள்விகளைக் கண்டு மத்திய பாஜக அரசு ஏன் அஞ்சுகிறது?" - முதல்வர் ஸ்டாலின்

post image

சீனா ஊடுருவல் குறித்தும் அப்போது இராணுவத் தளபதியாக இருந்த நரவானே சந்தித்த சவால்கள் குறித்தும், அரசின் சில நடவடிக்கைகள் குறித்தும் 'ஃபோர் ஸ்டார்ஸ் ஆ டெஸ்டினி' என்ற புத்தகத்தில் எழுதியிருக்கிறார். அந்த புத்தகத்துக்கு இன்னும் ஆளும் பா.ஜ.க அரசு ஒப்புதல் அளிக்கவில்லை என்பதால் இன்னும் வெளியாகவில்லை. இந்த நிலையில் , சீன ஊடுருவல் குறித்த விவாதத்தின்போது ராகுல் காந்தி, நரவானே எழுதிய புத்தகத்திலிருந்து சில வரிகளை படிக்க முயன்றார்.

நாடாளுமன்றத்தில் ராகுல் காந்தி
நாடாளுமன்றத்தில் ராகுல் காந்தி

அதற்கு கடுமையான எதிர்வினையாற்றிய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்ளிட்ட பா.ஜ.க-வினர் படிக்கவே விடவில்லை. மேலும், சீனா ஊடுருவல் பேச அனுமதியும் மறுக்கப்பட்டது.

அதைத் தொடர்ந்து, மக்களவையில் அத்துமீறியதாக தமிழக எம்.பி.க்கள் உள்பட 8 பேர் இடைநீக்கம் செய்யப்பட்டனர். அவர்கள் கூட்டத்தொடர் முழுவதும் பங்கேற்க தடை விதிக்கப்பட்டது.

இந்த நிலையில், முதல்வர் ஸ்டாலின் தன் எக்ஸ் பக்கத்தில், ``கௌரவத்திற்குரிய எதிர்க்கட்சித் தலைவரும், எனது சகோதரருமான ராகுல் காந்தி எழுப்பிய கேள்விகளைக் கண்டு மத்திய பாஜக அரசு ஏன் அஞ்சுகிறது?

தேசிய பாதுகாப்பு மற்றும் நாட்டின் பொருளாதார நலன்கள் சார்ந்த விவகாரங்களில், நாடாளுமன்ற உறுப்பினர்களின் கேள்விகளுக்குப் பதிலளிக்கவும், உரிய விளக்கங்களை அளிக்கவும் வேண்டிய கடமை அரசாங்கத்திற்கு உண்டு.

எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த எட்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டிருப்பதை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன். தேச முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சினைகள் குறித்துப் பேசுவதற்கான அவர்களின் ஜனநாயக உரிமையை மீண்டும் நிலைநாட்ட, இந்த இடைநீக்க உத்தரவை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்துகிறேன்." எனக் சபாநாயகர் ஓம்.பிர்லாவை டேக் செய்து குறிப்பிட்டிருக்கிறார்.

`4 சுவருக்குள் முடிந்திருக்க வேண்டியது' பூதாகரமாக்கிய அண்ணாமலை - விலகல் அறிவிப்பின் பின்னணி!

சட்டமன்ற தேர்தல் பரபரப்புகளால் அரசியல் களம் சூடாகியுள்ளது. மதுராந்தகம் பொதுக்கூட்டத்தை நடத்தி தெம்புடன் இருந்த தேசிய ஜனநாயக கூட்டணியில், அண்ணாமலை 6 தொகுதிகளுக்கான பொறுப்பாளர் பதவியில் இருந்து விலகியிர... மேலும் பார்க்க

"ஒரு கட்சி தலைவருக்கு நாலு விஷயங்கள் தெரிய வேண்டாமா?" - விஜய்க்கு எடப்பாடி பதிலடி!

கடந்த சில வாரங்களுக்கு முன்புதான் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முதற்கட்டமாக 5 தேர்தல் வாக்குறுதிகளை அறிவித்திருந்தார்.குறிப்பாக திமுக ஆட்சியில் மாதந்தோறும் 1000 ரூபாயாக வழங்கப்படும் உதவித்த... மேலும் பார்க்க

``பிரதமர் வந்தால் நானே நேரில் சென்று இதை வழங்குவேன்" - நரவானே எழுதிய புத்தகம் குறித்து ராகுல் காந்தி

சீன ஊடுருவல் குறித்தும், அப்போது ராணுவத் தளபதியாக இருந்த நரவானே, தான் சந்தித்த சவால்கள் குறித்தும், அரசின் சில நடவடிக்கைகள் குறித்தும் 'ஃபோர் ஸ்டார்ஸ் ஆஃப் டெஸ்டினி' என்ற புத்தகத்தில் எழுதியிருக்கிறார... மேலும் பார்க்க

'ஆண்டுக்கு 3 சிலிண்டர்கள் இலவசம் டு கல்விக்கடன் ரத்து' - 2ம் கட்ட வாக்குறுதிகளை அறிவித்த எடப்பாடி

தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கிகொண்டிருக்கிறது. இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், பேரணி, பிரசாரம், பொதுக்கூட்டம், தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தைகள் என அரசியல் களம் அனல் பறக்கிறது.இது ஒருபுறம் இருக்... மேலும் பார்க்க

”இன்று அரசியலுக்கு வரக்கூடிய நடிகர்கள் அரசியலிலும் நடிக்கிறார்கள்!” - ராஜேந்திர பாலாஜி

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “முந்தைய காங்கிரஸ் ஆட்சியைவிட பிரதமர் மோடி ஆட்சியில்தான் தமிழகத்துக்கு அதிக நிதி வந்... மேலும் பார்க்க

அன்றும் இன்றும் பரவும் தீ... இந்தி எதிர்ப்பு போராட்டமும் திமுகவும் | ‘வாவ்’ வியூகம் 04

இந்தி எதிர்ப்பு போராட்டமும் திமுகவும்‘வாவ்’ வியூகம் 04 ஜனநாயகத்தில் ‘போராட்டம்’ என்பது மிகப் பெரிய ஆயுதம். அதுவே அரசியல் என்று வரும்போது, அது கட்சிகளின் மாபெரும் சக்தி. சில போராட்டங்கள் மக்களுக்கு நன்... மேலும் பார்க்க