செய்திகள் :

பத்து ஆண்டுகளுக்குப் பிறகு சென்னையில் மீண்டும் ‘ஃபேஷன் திருவிழா’… நிப்ட் கண்காட்சி

post image

சென்னையில் கடந்த பத்து ஆண்டுகளுக்குப் பிறகு, தேசிய ஃபேஷன் தொழில்நுட்ப நிறுவனத்தின் (National Institute of Fashion Technology – NIFT) சார்பில் பிரமாண்டமான ஃபேஷன் எக்ஸிபிஷன் நடைப்பெற்றது. இவர்களோடு தஸ்தகாரி ஹாட் (Dastkari Haat) என்ற அமைப்பும் இணைந்து இந்நிகழ்வை ஏற்பாடு செய்து நடத்தி வருகின்றனர்.

கண்காட்சியில் இந்தியாவின் பல மாநிலங்களைச் சேர்ந்த கைவினைப் பொருட்கள், பாரம்பரிய ஆபரணங்கள், கண்ணாடி கலைப் பொருட்கள், மர வேலைப்பாடுகள், மணிகள், சங்கிலிகள், கலை நகைகள் என விதவிதமான கலைப்பொருட்கள் விற்பனைக்கு வைக்கட்டிருக்கின்றன.

வண்ணமயமான கண்ணாடிப் பூக்கள், பறவைகள் என குழந்தைகள் பேவரேட் லிஸ்ட் ஒருபுறமும், தெய்யம், நாட்டார் கலை வடிவங்கள் என கண்காட்சியில் ஒவ்வொன்றும் நம்மை ஈர்க்கின்றன.

தேசிய ஃபேஷன் தொழில்நுட்ப நிறுவனம் இந்தத் துறையில் முக்கியமான நிறுவனமாக இயங்கி வருகிறது. இங்கு, ஃபேஷன் டிசைனிங், டிப்ளோமா இன் ஃபேஷன், ஜுவல்லரி டிசைன் (JD), ஃபேஷன் டெக்னாலஜி (FD) போன்ற பல்வேறு ஃபேஷன் சார்ந்த படிப்புகள் நடத்தப்படுகின்றன. அதனால், இந்த கண்காட்சியை கல்லூரி மாணவர்கள், குறிப்பாக ஃபேஷன் துறையில் ஆர்வம் கொண்ட இளைஞர்கள் அதிகமாகப் பார்வையிட்டு வருகின்றனர்.

இந்த நிகழ்வினை, தமிழ்நாடு மட்டுமின்றி, வடஇந்தியா உட்பட இந்தியாவின் பல மாநிலங்களில் இருந்து மக்கள் வந்துள்ளனர். வடஇந்திய பாரம்பரிய கைவினைப் பொருட்கள், ஆடைகள், நகைகள் ஆகியவை சென்னை மக்களிடையே தனி கவனம் பெற்றுள்ளது.

இந்த ஃபேஷன் கண்காட்சி பிப்ரவரி 5ம் தேதி வரை நடைபெற உள்ளது. கலை, கைவினை, ஃபேஷன் மீது ஆர்வம் உள்ளவர்களுக்கு இந்தக் கண்காட்சி நிச்சயமாக விருந்தாக அமைந்துள்ளது.

- தீபன் சேகுவேரா, அலமேலு

'அடக்குமுறைக்கு எதிரான குரல் தான் எங்கள் இசை; எங்கள் இசை தான் அரசியல்!' - `தம்மா த பேண்ட்' குழுவினர்

‘கலை என்பது சடங்குகளிலிருந்து விடுபட்டு அரசியலை அடிப்படையாகக் கொண்ட ஒன்றாக மாறுகிறது’ - பெஞ்சமின் இவ்வாறு தங்களுடைய கலையை சமூக அரசியலுக்கும் கொண்டாட்டத்திற்குமான கருவியாய் முன்னெடுத்து, சமீபகாலமாக அட்... மேலும் பார்க்க

சிற்பக்கலையில் 50 ஆண்டுக்கால அர்ப்பணிப்பு; பத்ம ஶ்ரீ விருது பெறும் ராஜா ஸ்தபதி!

தமிழ்ச்சிற்பக்கலைத் துறையில் கடந்த 51 ஆண்டுகளாக இடைவிடாது இயங்கி வரும் சிற்பக்கலைஞர் ராஜா ஸ்தபதிக்கு, மத்திய அரசு பத்ம ஸ்ரீ விருது அறிவித்திருக்கிறது. இளம் தலைமுறையினரின் பெரும் நம்பிக்கையாய் திகழும் ... மேலும் பார்க்க

பத்ம ஸ்ரீ: "கிட்னா இருந்திருந்தா ரொம்ப சந்தோஷப்பட்டிருப்பார்" - மறைந்த ஓவியர் ஆர்.கிருஷ்ணனின் மனைவி

3000 ஆண்டுகள் பழமையான முறைப்படி...பத்ம ஶ்ரீ2026க்கான பத்ம ஶ்ரீ விருது நீலகிரி மாவட்டம் ஆலு குரும்பர் பழங்குடியினச் சமூகத்தைச் சேர்ந்த குரும்பா ஓவியக் கலைஞரான ஆர்.கிருஷ்ணனுக்குக் கிடைத்துள்ளது.3000 ஆண்... மேலும் பார்க்க

453 ஆண்டுகள் பழமையான கல்வெட்டு; ஆங்கிலேயர் கால பீரங்கி குண்டுகள்! - தொல்லியல் மாணவர்கள் கண்டெடுப்பு

நெல்லை மாவட்டம், சுற்று வட்டாரப் பகுதிகளில் மன்னர் காலத்து பல்வேறு கல்வெட்டுகள், ஆய்வில் தொடர்ந்து கிடைத்த வண்ணம் உள்ளன. நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழகத்தின் தொல்லியல் துறையின் இரண்டாம் ஆண... மேலும் பார்க்க