செய்திகள் :

தமிழ்நாட்டுக்கு 2 புல்லட் ரயில்கள்; சென்னை - பெங்களூரு 67.8 நிமிடங்களில்... அமைச்சர் அறிவிப்பு!

post image

மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், நேற்று (ஞாயிறு) அதிவேக புல்லட் ரயில் திட்டங்கள் குறித்து செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.

அப்போது அவர், ``தென் இந்தியாவில் ரயில்வேயின் அடுத்த மேம்பாட்டு முன்னெடுப்பாக, `சென்னை-பெங்களூரு-ஹைதராபாத்' வழித்தடங்களை ஹைஸ்பீடு ரயில் காரிடர்களாக மாற்றப் போகிறோம். இந்த முக்கோண இணைப்பு, ரயில் போக்குவரத்தில் முக்கியமானதாகும். இந்த முயற்சி பொருளாதார மேம்பாடு மற்றும் ஐ.டி மையங்களை இணைக்கும் நோக்கம் கொண்டிருக்கிறது. இதன் மூலம் மக்களின் பயண நேரம் பெரிதும் குறையும். இந்த புல்லட் ரயில் திட்டத்தின் மூலம் சென்னையிலிருந்து பெங்களூருவுக்கு 1 மணி 13 நிமிடங்களில் சென்றடையலாம். அதேபோல சென்னையிலிருந்து ஹைதராபாத்துக்கு 2 மணி நேரம் 55 நிமிடங்களில் சென்றடையலாம்.

புல்லட் ரயில்

இந்தத் திட்டத்தின் மூலம் தமிழ்நாடு, ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகா உள்ளிட்ட தென் மாநிலங்களில் இணைப்பை மேம்படுத்தி, பிராந்திய வளர்ச்சியை விரைவுபடுத்த முடியும் என்று எதிர்பார்க்கிறோம்" என்றார்.

மத்திய பட்ஜெட்டில் புல்லட் ரயில் திட்டத்தில் தமிழ்நாட்டுக்கு மேற்கண்ட வழித்தடங்களில் இரண்டு ரயில்கள் அறிவிக்கப்பட்டிருக்கின்றன. இந்தத் திட்டத்தின் மூலம் மக்களின் பயண நேரம் வெகுவாகக் குறையும்.

மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ்
மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ்

பொதுவாக சென்னையிலிருந்து பெங்களூருவுக்குச் செல்ல ரயிலில் 5-6 மணி நேரம் எடுக்கும். அதேபோல சென்னையிலிருந்து ஹைதராபாத்துக்குச் செல்ல 9-11 மணி நேரம் ஆகும். புல்லட் ரயில் பயன்பாட்டுக்கு வரும் பட்சத்தில் தமிழ்நாட்டு மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

"இதைவிட சுற்றுச்சூழலுக்கு எதிரான ஒரு பட்ஜெட்டைத் தாக்கல் செய்துவிட முடியாது!" - பூவுலகின் நண்பர்கள்

2025- 2026-ம் ஆண்டிற்கான பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். காலநிலை மாற்றத்தின் தீவிரத்தைத் தணிக்கவும், தடுக்கவும் பேரிடர் முன்னெச்சரிக்கை மற்றும் மேலாண்... மேலும் பார்க்க

`ரூ.6 லட்சம் கோடி ஊழல்; விசாரணைக்கு உத்தரவிட தயாரா?' - திமுக அரசுக்கு அன்புமணி ராமதாஸ் கேள்வி!

``திமுக மீதான ஊழல் புகார்கள் கற்பனையா? ரூ.6 லட்சம் கோடி ஊழல் குற்றச்சாட்டுகள் பற்றி விசாரணைக்கு ஆணையிட தயாரா?" எனக் கேள்வியெழுப்பி, திமுக அரசைச் சாடியிருக்கிறார், பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ். இது தொட... மேலும் பார்க்க

`ஊழியர்களையும், ஆசிரியர்களையும் ஏமாற்ற நாடகங்கள்; திமுக ஆட்சியில் எல்லாமே ஏமாற்று வேலையா?'- அன்புமணி

`ஜனவரி மாதத்தில் ஓய்வு பெற்ற 5,000 அரசு ஊழியர்களுக்கு ஓய்வூதியம் எங்கே? திமுக ஆட்சியில் எல்லாமே ஏமாற்று வேலையா?' என திமுக அரசை நோக்கி கேள்விகளை அடுக்கியிருக்கிறார், பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்.இது தொ... மேலும் பார்க்க

UGC:`கல்விக்கூடங்களில் கண்ணுக்குத் தெரியாத சாதி' ரோஹித் வெமுலா முதல் UGC 2026 வரை| விரிவான அலசல்

ஹைதராபாத் மத்திய பல்கலைக்கழகத்தில் பி.ஹெச்டி படித்து வந்த ரோஹித் வெமுலா, அம்பேத்கர் மாணவர் சங்கத்திலும் (ASA) உறுப்பினராக இருந்தார். ஆகஸ்ட் 2015-ல், அம்பேத்கர் மாணவர் சங்கத்துக்கும் - அகில பாரதிய வித்... மேலும் பார்க்க

`6 முறை துணை முதல்வர்' ; ஆட்சி கவிழலாம், கூட்டணி மாறலாம்! அதிகாரத்தை மட்டும் விடாத அஜித் பவார்!

மகாராஷ்டிரா அரசியலில் அண்ணா(தாதா) என்று அனைவராலும் அழைக்கப்படும் அஜித் பவாரின் அகால மரணம் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது. அவரது மரணத்தை கேட்டு தேசியவாத காங்கிரஸ் கட்சி தொண்டர்கள் கதறி அழு... மேலும் பார்க்க

திருநெல்வேலி: கோலாகலமாக நடைபெற்ற 77-வது குடியரசு தின விழா கொண்டாட்டம்.!

திருநெல்வேலி: கோலாகலமாக நடைபெற்ற 77-வது குடியரசு தின விழா கொண்டாட்டம்.! மேலும் பார்க்க