செய்திகள் :

`அதிமுக, திமுக-வை விமர்சிக்கும் விஜய், பாஜக-வை பற்றி பேசாததது ஏன்?' - திண்டுக்கல் சீனிவாசன் கேள்வி!

post image

தமிழக வெற்றிக் கழகத்தின் மூன்றாம் ஆண்டு துவக்க விழாவில் பேசிய அக்கட்சியின் தலைவர் விஜய், “மும்முனைப் போட்டி, நான்கு முனைப் போட்டி என்றெல்லாம் ஊடகங்களில் பேசுகிறார்கள். சரி, அவர்களைப் பொறுத்தவரை அது அப்படியே இருக்கட்டும். ஒரு பக்கம் மாபெரும் மக்கள் சக்தியாக நாம் நிற்கிறோம். இன்னொரு பக்கம் திமுக தலைமையில் சில கூட்டணிக் கட்சிகள் இருக்கின்றன. மற்றொரு பக்கம் பாஜக தலைமையில் மற்றும் பலர்” எனக் குறிப்பிட்டுப் பேசினார்.

பாஜக-வுடன் தமிழகத்தின் பிரதான கட்சியான அதிமுக கூட்டணியில் இருக்கும்போது அந்த கட்சியின் பெயரை குறிப்பிடாமல், பாஜக-வின் பெயரை மட்டும் குறிப்பிட்டு பேசியது, விவாதங்களைக் கிளப்பியிருக்கிறது. என்.டி.ஏ கூட்டணிக்கு பாஜக-தான் தலைமை என விஜய் மறைமுகமாகச் சொல்வதாக பேச்சுகள் எழுந்தன.

தவெக தலைவர் விஜய்

இதையடுத்து அதிமுக-வின் முன்னாள் அமைச்சர்கள் விஜய்யைக் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

இது குறித்து முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கூறுகையில், “அமித் ஷா வந்தபோது தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு அதிமுக-தான் தலைமை, கூட்டணிக்குத் தலைவர் எடப்பாடி பழனிசாமி எனத் தெளிவாகச் சொல்லிவிட்டார். பி.ஜே.பி-க்கு நாங்கள் அடிமையாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை.

சி.பி.ஐ விசாரணைக்குச் சென்று வந்த பின் தி.மு.க-வும் அ.தி.மு.க-வும் ஊழல் கட்சிகள் என்றார், எங்களுக்கு பொது எதிரி பா.ஜ.க என்றார், ஆனால் அவர் பா.ஜ.க-வை மட்டும் விமர்சிக்கவில்லை அது ஏன்?” என கேள்வி எழுப்பி உள்ளார்.

அ.தி.மு.க-வின் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், ``விஜய் எங்களுடைய கூட்டணி குறித்து கவலைப்படத் தேவையில்லை.

ஆர்.பி. உதயகுமார்
ஆர்.பி. உதயகுமார்

எங்களுடன் கூட்டணியில் இருந்தால்தான் அதைப் பற்றிப் பேச வேண்டும், கருத்து சொல்ல வேண்டும். எந்தக் கட்சி களத்தில் இருக்க வேண்டும் என்பதை மக்கள்தான் முடிவு செய்வார்கள். தேர்தல் முடிந்தால்தான்  யார் இருக்கிறார்கள், யார் காணமால் போனார்கள் என்பதைப் பார்க்க முடியும்” என்றார்.

கானல் நீராக பன்னீரின் நிலை; காத்திருப்புக்குப் பலன் கிடைக்குமா?!

மூன்று முறை முதல்வர் நாற்காலியை அலங்கரித்தவர், நீண்ட கால சட்டமன்ற உறுப்பினர், அ.தி.மு.க வின் முக்கிய முகமாக இருந்து அந்த கட்சியின் ஒருங்கிணைப்பாளர் என்கிற உச்சபட்ச பதவியை அடைந்தவர்... இப்படி அ.தி.மு.க... மேலும் பார்க்க

Lok Sabha: `நிச்சயம் அதை சொல்வேன்; அந்த வரிக்குத்தான் மோடியும்' - ராகுல் பேச்சும், பாஜக எதிர்ப்பும்!

இன்று (பிப்.2) நடைபெற்ற நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் ​​எதிர்க்கட்சி தலைவரும், காங்கிரஸ் எம்.-பியுமான ராகுல் காந்தி, 2020-ம் ஆண்டில் இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே லடாக் எல்லையில் ஏற்பட்ட மோதல் குறி... மேலும் பார்க்க

ஆரணி: வன்னியர் இட ஒதுக்கீடு கோரி பட்டதாரி இளைஞர் தற்கொலை - திமுக அரசு மீது அன்புமணி கடும் தாக்கு!

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அருகேயுள்ள புதுப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் கந்தன். இவரின் மனைவி பூங்கொடி. இவர்களுக்கு சதிஷ்குமார், விஜயகுமார் என இரு மகன்கள். இதில், மூத்த மகன் சதிஷ்குமார் பட்டப்படிப்... மேலும் பார்க்க

திருப்பரங்குன்றம் விவகாரம்: நிபந்தனை இன்றி மன்னிப்பு கோரிய மதுரை மாவட்ட ஆட்சியர்!

கடந்த மாதம் கார்த்திகை தீபத்தன்று திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்ற உத்தரவிட்டது உயர் நீதிமன்ற மதுரைக் கிளை. இதில் சட்டம் ஒழுங்கு பாதிக்கப்படுவதாகக் கூறி திருப்பரங்குன்றம் பகுதியில் 144 தடை உ... மேலும் பார்க்க

'CM கான்வாய்க்காக நிறுத்தப்பட்ட விஜய்யின் கார்; கடுப்பான முதல்வர் தரப்பு! - உளவுத்துறைக்கு 'ரெய்டு?'

தவெகவின் மூன்றாமாண்டு தொடக்க விழா விஜய் தலைமையில் பனையூரில் இன்று நடந்திருந்தது. அதே ECR யைக் கடந்துதான் முதல்வர் ஸ்டாலினும் மாமல்லபுரத்தில் சுற்றுலா உச்சி மாநாட்டை தொடங்கி வைக்க சென்றிருந்தார். முதல்... மேலும் பார்க்க

Manifesto: தேர்தல் வாக்குறுதியில் தீவிரம் காட்டும் கட்சிகள் - மக்களே உங்க கோரிக்கை என்ன? பகிருங்கள்!

தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கிகொண்டிருக்கிறது. இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், பேரணி, பிரசாரம், பொதுக்கூட்டம், தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தைகள் என அரசியல் களம் அனல் பறக்கிறது.இது ஒருபுறம் இருக்... மேலும் பார்க்க