செய்திகள் :

`6 முறை துணை முதல்வர்' ; ஆட்சி கவிழலாம், கூட்டணி மாறலாம்! அதிகாரத்தை மட்டும் விடாத அஜித் பவார்!

post image

மகாராஷ்டிரா அரசியலில் அண்ணா(தாதா) என்று அனைவராலும் அழைக்கப்படும் அஜித் பவாரின் அகால மரணம் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது. அவரது மரணத்தை கேட்டு தேசியவாத காங்கிரஸ் கட்சி தொண்டர்கள் கதறி அழுதனர். அஜித் பவார் சிறிய விமானத்தில் தேர்தல் பிரசாரத்திற்கு புறப்பட்டு சென்ற போது இந்த துயரச்சம்பவம் நடந்தது.

விமான விபத்து எப்படி நடந்தது என்பது குறித்து விமான போக்குவரத்து ஆணையம் வெளியிட்டுள்ள செய்தியில், ''விமானம் பாராமதி அருகில் 8.45 மணிக்கு சென்ற போது விமானத்தில் கடுமையான தொழில் நுட்ப கோளாறு ஏற்பட்டது.

விமானம் பாராமதி விமான நிலையத்தில் தரையிறங்கும் நேரத்தில் விமானம் பைலட் கட்டுப்பாட்டை இழந்தது. இதனால் விமானம் பாராமதி விமான நிலையத்தின் ஓடுபாதையில் விமானம் விழுந்து தீப்பிடித்துக்கொண்டது''என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

கதறி அழுத தொண்டர்கள்

இதில் விமானம் முற்றிலும் எரிந்து நாசமாகிவிட்டது. அதன் பாகங்கள் விமான நிலைய ஓடுபாதை முழுக்க பரவி கிடந்தது. அதோடு விமான நிலைய ஓடுதளம் கரும்புகையுடன் காட்சியளித்தது. அதிக அளவில் அரசியல் தலைவர்கள் பயன்படுத்திய  Learjet 45XR என்ற அந்த விமானம் VSR Ventures என்ற நிறுவனத்திற்கு சொந்தமானது ஆகும்.

100 அடியிலிருந்து விழுந்தது

விமானம் மேலிருந்து கீழே விழுந்ததை நேரில் பார்த்த ஒருவர் இது குறித்து கூறுகையில், ''விமானம் ஓடுதளத்தை நோக்கி சென்ற போது 100 அடி உயரத்தில் இருந்து கீழே விழுந்து வெடித்து தீப்பற்றி எரிந்தது. விமானம் கீழே விழுந்தவுடன் உள்ளூர் மக்கள் ஓடி வந்து விமானத்தில் இருந்தவர்களை வெளியில் எடுக்க முயன்றனர். ஆனால் தீ அதிக அளவில் எரிந்து கொண்டிருந்ததால் அவர்களால் அருகில் செல்ல முடியவில்லை'' என்று தெரிவித்தார். அஜித் பவார் மரணம் கட்சி தொண்டர்களை மிகவும் அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது.

இது குறித்து கட்சியின் மூத்த தலைவர் பிரபுல் பட்டேல் கூறுகையில், ''எனக்கு மிகவும் அதிர்ச்சியாக இருக்கிறது. சொல்வதற்கு வார்த்தைகளே இல்லை'' என்றார்.

கட்சி தொண்டர்கள் தேசியவாத காங்கிரஸ் அலுவலகத்திற்கு வந்தவண்ணம் இருக்கின்றன. அதிகமானோர் சரத்பவார் இல்லத்திற்கு சென்று துக்கம் விசாரித்து வருகின்றனர். பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மத்திய அமைச்சர் அமித் ஷா ஆகியோர் முதல்வர் தேவேந்திர பட்னாவிஸை தொடர்பு கொண்டு நிலைமையை விசாரித்து அறிந்தனர்.

பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்ட இரங்கல் செய்தியில், அஜித் பவார் மக்கள் தலைவர் என்று குறிப்பிட்டுள்ளார். அஜித் பவார் மரணம் தனக்கு தனிப்பட்ட இழப்பு என்று அமித் ஷா தெரிவித்துள்ளார். ஜனாதிபதி முர்மு, காங்கிரஸ் எம்.பி. பிரியங்கா காந்தி உட்பட தலைவர்கள் அஜித் பவார் மரணத்திற்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.

துணைமுதல்வர் ஏக்நாத் ஷிண்டே மற்றும் சரத் பவார் ஆகியோர் பாராமதிக்கு விரைந்துள்ளனர். சரத்பவார் விபத்துக்குள்ளான விமானத்தின் கருப்பு பெட்டி மீட்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

6 முறை துணை முதல்வர்

அஜித் பவார் தனது அரசியல் பயணத்தில் இதற்கு முன்பு யாருமே செய்ய முடியாத ஒரு காரியமாக 6 முறை துணை முதல்வராக இருந்திருக்கிறார்.

அதில் 2019-ம் ஆண்டு அதிகாலை நேரத்தில் தேவேந்திர பட்னாவிஸுடன் சேர்ந்து துணை முதல்வராக பதவியேற்று மிகவும் சொற்ப தினங்கள் மட்டும் பதவியில் இருந்தார். அப்படி இருந்தும் அதன் பிறகு ஆட்சிக்கு வந்த உத்தவ் தாக்கரே அமைச்சரவையிலும் அஜித் பவார்தான் துணை முதல்வர் பதவியை ஏற்றார்.

2014-ம் ஆண்டு மகாராஷ்டிரா சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சியை விட தேசியவாத காங்கிரஸ் அதிக இடங்களில் வெற்றி பெற்றது. அப்படி இருந்தும் காங்கிரஸ் நிர்ப்பந்தம் காரணமாக அஜித் பவார் துணை முதல்வராக பதவியேற்றார். பா.ஜ.க, கூட்டணி, உத்தவ் கூட்டணி, காங்கிரஸ் கூட்டணி என அனைத்து கூட்டணியிலும் அஜித் பவார் துணை முதல்வராக இருந்துவிட்டார். ஆட்சிகள் கவிழ்ந்தாலும், கூட்டணிகள் மாறினாலும் அஜித் பவாரை விட்டு துணை முதல்வர் பதவி மட்டும் சென்றதே இல்லை. அவர் கடைசி வரை துணை முதல்வராக இருந்துவிட்டு இறந்துவிட்டார்.

திருநெல்வேலி: கோலாகலமாக நடைபெற்ற 77-வது குடியரசு தின விழா கொண்டாட்டம்.!

திருநெல்வேலி: கோலாகலமாக நடைபெற்ற 77-வது குடியரசு தின விழா கொண்டாட்டம்.! மேலும் பார்க்க

பத்ம விருதுகள்: ``மம்மூட்டி, மாதவன், ரோஹித் சர்மா" - இந்திய அளவில் கவனம் பெற்ற நட்சத்திரங்கள்!

மத்திய அரசு நேற்று 2026-ம் ஆண்டுக்கான பத்ம விருதுகளை அறிவித்தது. பத்ம விபூஷண், பத்ம பூஷண் மற்றும் பத்மஸ்ரீ ஆகிய பிரிவுகளில் 131 விருதுகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இந்த பட்டியலில் ஐந்து பத்ம வி... மேலும் பார்க்க

"தேசபக்தி பற்றி எங்களுக்குப் பாடமெடுக்க வேண்டாம்" - சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின்

சட்டசபையில் இவ்வாண்டிற்கான முதல் கூட்டத் தொடரின் 5-ஆம் நாள் இன்று நடைபெற்று வருகிறது.கடந்த 20-ஆம் தேதி சட்டசபை கூடிய நிலையில், ஆளுநர் உரையை நிகழ்த்துவார் என எதிர்பார்க்கப்பட்டது.ஆனால், இம்முறையும் அவர... மேலும் பார்க்க

புதுச்சேரி: மலர் கண்காட்சிக்காகத் தயாரான 40,000 பூச்செடிகள் | Photo Album

மலர் கண்காட்சிக்கு தயாரான பூஞ்செடிகள்மலர் கண்காட்சிக்கு தயாரான பூஞ்செடிகள்மலர் கண்காட்சிக்கு தயாரான பூஞ்செடிகள்மலர் கண்காட்சிக்கு தயாரான பூஞ்செடிகள்மலர் கண்காட்சிக்கு தயாரான பூஞ்செடிகள்மலர் கண்காட்சிக... மேலும் பார்க்க

தனி தீர்மானம்: `வாழ்வாதாரத்தை வேரறுக்கும் முடிவு; மகாத்மா பெயரிலேயே திட்டம் தொடர வேண்டும்' ஸ்டாலின்

தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் தொடர்பான மாநில அரசின் தனித் தீர்மானத்தை, முதலமைச்சர் ஸ்டாலின் முன்மொழிந்தார். அதைத் தொடர்ந்து உரையாற்றிய அவர், ``மாண்புமிக... மேலும் பார்க்க