`6 முறை துணை முதல்வர்' ; ஆட்சி கவிழலாம், கூட்டணி மாறலாம்! அதிகாரத்தை மட்டும் வி...
Ajit Pawar: துணை முதல்வர் பயணித்த விமானம் விபத்து! - சொந்த ஊரில் அஜித் பவார் உயிரிழந்த சோகம்
மகாராஷ்டிராவின் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் (NCP) தலைவரும், மகாராஷ்டிர துணை முதல்வருமான அஜித் பவார் இன்று (புதன்கிழமை) காலை மும்பையிலிருந்து பாராமதிக்கு புறப்பட்டுச் சென்றார். காலை சுமார் 8:45 மணியளவில் பாராமதி விமான நிலைய ஓடுதளத்தில் விமானம் தரையிறங்க முயன்றபோது, எதிர்பாராத விதமாக விமானம் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது. விழுந்த வேகத்தில் விமானம் தீப்பற்றி எரியத் தொடங்கியதால் அப்பகுதி முழுவதும் அடர்ந்த புகை மண்டலமாகக் காட்சியளித்தது.
இந்த விபத்தில் விமானத்தில் பயணம் செய்த அஜித் பவார் உள்ளிட்ட 5 பேர் உயிரிழந்ததை சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் (DGCA) உறுதி செய்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. எனினும், அஜித் பவாரின் உடல்நிலை குறித்து அவரது அலுவலகமோ அல்லது மாநில அரசோ இதுவரை அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிடவில்லை.
An aircraft carrying Maharashtra Deputy CM Ajit Pawar faced a crash landing while landing at Baramati airport.
— (@SharfExcel) January 28, 2026
Sending prayers for his speedy recovery and well-being.#AjithPawar#MaharashtraNews
pic.twitter.com/w62yHNXf6c
விபத்து நடந்த இடத்திலிருந்து சிதறிக்கிடக்கும் விமான பாகங்கள் மற்றும் கொழுந்துவிட்டு எரியும் தீயை அணைக்கும் பணியில் அவசர மீட்புக் குழுவினர் ஈடுபட்டுள்ளனர். விபத்தில் படுகாயமடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளனர். தொழில்நுட்பக் கோளாறு காரணமாக இந்த விபத்து நடந்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது.
அஜித் பவாரின் சொந்தத் தொகுதியான பாராமதியிலேயே இந்த விபத்து நடந்துள்ளது அரசியல் வட்டாரத்திலும், அவரது ஆதரவாளர்களிடமும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
மகாராஷ்டிர அரசியலில் மிக முக்கியமான மற்றும் செல்வாக்கு மிக்க தலைவர்களில் ஒருவரான அஜித் பவார், மகாராஷ்டிர மாநிலத்தின் துணை முதலமைச்சராக ஐந்து முறைக்கும் மேல் பதவி வகித்தவர். நிதியமைச்சர், நீர்ப்பாசனத் துறை அமைச்சர் போன்ற முக்கிய பொறுப்புகளை கையாண்டவர் என்பதும் குறிப்பிடதக்கது. விபத்தின் கோரக்கட்சிகள் வெளியான நிலையில், அஜித் பவார் மரணமடைந்துட்டதாக தகவல் வெளியாகியிருக்கிறது.














