புதிய உச்சம்! - ரூ.1.25 லட்சத்தின் அருகில் தங்கம் விலை - இப்போது தங்கம் விலை என்...
"ஆட்சியில் பங்கு என்று விஜய் சொல்கிறார்; காங்கிரஸ் ஏற்றுக்கொள்ள வேண்டும்!" - எஸ்.ஏ. சந்திரசேகர்
தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் நிலையில் அரசியல் கட்சிகள் கூட்டணி குறித்த பேச்சு வார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர். அந்தவகையில் திமுக கூட்டணியில் இருக்கும் தமிழக காங்கிரஸ் கட்சி விஜய்யின் தவெகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தையில் இருப்பதாகத் தகவல்களும் வெளியாகி வருகின்றன.

இந்தச் சூழலில் விஜய்யின் தந்தை எஸ்.ஏ சந்திரசேகர் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தப்போது, " விஜய்யின் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருக்கிறது. ஆட்சியில் பங்கு என்று விஜய் சொல்கிறார். அதை காங்கிரஸ் ஏற்றுக்கொள்ள வேண்டும்.
ஏதோ ஒரு கட்சிக்கு ஆதரவு கொடுத்து, கொடுத்து காங்கிரஸ் தேய்ந்து போகிறது. ஆட்சி அதிகாரத்துக்கு வந்தால் பழைய நிலைமைக்கு காங்கிரஸ் வரும். காங்கிரஸ் வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்" என்று தெரிவித்திருக்கிறார்.













