செய்திகள் :

Dubai: வரலாற்றில் முதல்முறையாக `தங்கத் தெரு' - துபாயில் உருவாகும் கோல்ட் டிஸ்ட்ரிக்ட் தெரியுமா?

post image

ஆடம்பரம், தங்கம் என்றாலே சட்டென நினைவுக்கு வரும் நாடுகளில் குறிப்பிடதக்கது துபாய். தற்போது துபாயில் வரலாற்று சாதனை நிகழ்வாக 'துபாய் கோல்ட் டிஸ்ட்ரிக்ட்' திட்டத்தை இத்ரா துபாய் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக தொடங்கியிருக்கிறது.

துபாயின் பொருளாதாரத் திட்டமான D33-ன் கீழ், வர்த்தகம் மற்றும் சுற்றுலாவை மேம்படுத்துவதில் முக்கிய மைல்கல்லாகக் கருதப்படும் இந்த திட்டம், துபாயை உலகின் முதன்மை நகை வர்த்தக மையமாக மாற்றும் நோக்கில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்வின் தொடக்க விழா துபாய் முதலீட்டுக் கழக நிர்வாகத்தின் இயக்குநர் முகமது இப்ராஹிம் அல் ஷைபானி, இத்ரா துபாயின் தலைமைச் செயல் அதிகாரி இஸாம் கலாடரி உள்ளிட்ட உயர்மட்டத் தலைவர்கள் முன்னிலையில் நடைபெற்றது.

'துபாய் கோல்ட் டிஸ்ட்ரிக்ட் துவக்க விழா
'துபாய் கோல்ட் டிஸ்ட்ரிக்ட் துவக்க விழா

துபாய் கோல்ட் டிஸ்ட்ரிக்ட் பகுதியில் வாடிக்கையாளர்களுக்கான பிரம்மாண்ட ஷோரூம்கள், உலக நாடுகளுக்கான நகை விநியோக மையங்கள், முதலீட்டாளர்களுக்கான பிரத்யேக வசதிகள் ஆகிய அனைத்தும் ஒரே இடத்தில் கிடைக்கும் வகையில் அந்தப் பகுதி இணைக்கப்பட்டுள்ளது. 2024-25 நிதியாண்டில் மட்டும் ஐக்கிய அரபு அமீரகம் சுமார் 53.41 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புள்ள தங்கத்தை ஏற்றுமதி செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும், இந்தப் பகுதியைத் தனித்துவமாக்கும் வகையில், தங்கம், வாசனை திரவியங்கள் மற்றும் அழகுசாதனப் பொருட்கள் பிரிவில் 1,000-க்கும் மேற்பட்ட சில்லறை விற்பனையாளர்கள் உள்ளனர். ஜோயாலுக்காஸ் நிறுவனம் தனது மத்திய கிழக்கின் மிகப்பெரிய ஷோரூமை இங்கு அமைக்கவுள்ளது. மலபார் கோல்ட், தனிஷ்க், அல் ரொமைசான் போன்ற முன்னணி பிராண்டுகளும் இங்கு இடம்பிடித்துள்ளன.

துபாய்
துபாய்

தங்கத்தைப் பயன்படுத்தி நேர்த்தியாகக் கட்டப்பட்ட உலகின் முதல் ‘கோல்ட் ஸ்ட்ரீட்’ (தங்கத் தெரு) இங்கு பல கட்டங்களாக அறிமுகம் செய்யப்பட உள்ளது. இங்கு வரும் சர்வதேச வியாபாரிகள் மற்றும் சுற்றுலாப் பயணிகளுக்காக 1,000-க்கும் மேற்பட்ட அறைகளைக் கொண்ட 6 சொகுசு ஹோட்டல்கள் உள்ளன. மேலும், 'பிக் பஸ்' (Big Bus) வழித்தடங்கள் மூலம் சுற்றுலாப் பயணிகள் எளிதாக வந்து செல்லவும் வசதி செய்யப்பட்டுள்ளது.

இந்த துபாய் கோல்ட் டிஸ்ட்ரிக்ட் இந்தியா, சுவிட்சர்லாந்து, ஹாங்காங், துருக்கி உள்ளிட்ட 147 நாடுகளின் முக்கிய வர்த்தகப் பங்காளிகளாக உள்ளது.

பனிப்பொழிவில் சிக்கி இறந்த எஜமானர்; 4 நாள்களாக உடலைப் பாதுகாத்த வளர்ப்பு நாய்; இமாச்சலில் நெகிழ்ச்சி

இமாச்சலப் பிரதேசத்தில் தற்போது கடுமையான பனிப்பொழிவு இருந்து வருகிறது. பனிப்பொழிவு நடைபெறும் இடத்தில் யாராவது தனியாகச் சென்று சிக்கிக்கொண்டால் பனிக்கட்டியில் சிக்கி உயிர் பிழைப்பது கஷ்டம்.அங்குள்ள சம்ப... மேலும் பார்க்க

Republic day: மின்னொளியில் மிளிரும் புதுச்சேரி அரசு கட்டிடங்கள்!

மின்னொளியில் மிளிரும் புதுச்சேரி அரசு கட்டிடங்கள்சட்டப்பேரவை கட்டிடம்பழைய கலங்கரை விளக்கம்பிரெஞ்சு போர் நினைவிடம்சட்டப்பேரவை கட்டிடம்மத்திய கலால் துறைபுதுச்சேரி நகராட்சி கட்டிடம் புதுச்சேரி அரசு சின்ன... மேலும் பார்க்க

சென்னை: தூய்மைப் பணியாளர் பத்மாவின் நேர்மையைப் பாராட்டிய சௌபாக்கியா கிச்சன் அப்லையன்ஸ்!

சென்னையைச் சேர்ந்த 48 வயதான தூய்மைப்பணியாளர் எஸ். பத்மா பணியின் போது கண்டெடுத்த ₹ 45 லட்சம் மதிப்புள்ள தங்க நகைகளைத் திருப்பி அளித்து பரவலான பாராட்டைப் பெற்றுள்ளார்.ஜனவரி 11ஆம் தேதி வண்டிக்காரன் சாலைய... மேலும் பார்க்க

சிம்ரன் பாலா: குடியரசு தின அணிவகுப்பில் வரலாற்று சாதனை படைக்கும் ஜம்மு காஷ்மீர் பெண் அதிகாரி

புதுடெல்லியில் நடைபெறவுள்ள நாட்டின் 77-வது குடியரசு தின அணிவகுப்பில், ஜம்மு காஷ்மீரைச் சேர்ந்த 26 வயதான சிம்ரன் பாலா ஒரு வரலாற்றுச் சாதனையைப் படைக்கவுள்ளார். மத்திய போலீஸ் படையின் (CRPF) உதவித் தளபதிய... மேலும் பார்க்க

டெல்லி: அரசு விருந்தினர் மாளிகை கட்டியதில் ஊழல் - மகாராஷ்டிரா அமைச்சர் உட்பட 46 பேர் விடுவிப்பு

2005-ம் ஆண்டு மகாராஷ்டிராவில் சகன் புஜ்பால் பொதுப்பணித்துறை அமைச்சராக இருந்தபோது, டெல்லியில் `மகாராஷ்டிரா சதன்' கட்டுவதற்கு டெண்டர் விடாமல் சமன்கர் எண்டர்பிரைசஸ் என்ற நிறுவனத்திற்கு பணி வழங்கப்பட்டது.... மேலும் பார்க்க

காதலனை வரச் சொன்ன காதலி; சிக்கவைத்த உறவுக்கார பெண்; 40 நிமிடங்கள் டிரங்க் பெட்டியில்! நடந்தது என்ன?

உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூரில் வசிக்கும் இளம் பெண் ஒருவர் அதே ஊரைச் சேர்ந்த வாலிபர் ஒருவரை காதலித்து வந்தார். அந்த வாலிபர் வீடு அப்பெண்ணின் வீட்டில் இருந்து 7 வீடு தள்ளி இருக்கிறது. அப்பெண்ணின் பெற்... மேலும் பார்க்க