அஜித் பவார்: இளம் பெண் பைலட் சாம்பவி பதக் டு கேப்டன் சுமித் கபூர்! - விமானிகளின்...
Duster: `திரும்ப வந்துடுச்சுனு சொல்லுங்க!' பழசு மாதிரி இல்லை; புது காரில் நிறைய அதகளம் இருக்கு!
உங்களுக்கு எப்படியோ? என்போன்ற ஆட்டோமொபைல் ஆர்வலனுக்கு டஸ்ட்டரைத் திரும்பவும் பார்ப்பது சென்சேஷனல் நியூஸ்தான்.
2012-ல் லாஞ்ச் ஆனது டஸ்ட்டர். கிட்டத்தட்ட 10 ஆண்டுகள் ரெனோவுக்கு வாழ்க்கை கொடுத்த கார்! டஸ்ட்டர் இல்லையென்றால், ரெனோ என்ன ஆகியிருக்கும் என்கிற கேள்விகூட எழுகிறது. மிட்சைஸ் எஸ்யூவி செக்மென்ட்டையே புரட்டிப்போட்ட டஸ்ட்டருக்கு, 2022-ம் ஆண்டோடு முடிவு கட்டியது ரெனோ.
இப்போது ரெனோ மட்டுமில்லை; எஸ்யூவி ஆர்வலர்களுமே ரொம்ப ஹேப்பி. சென்னை நேரு ஸ்டேடியத்தில் பிரபுதேவாவின் ஆட்டம் பாட்டத்தோடு டஸ்ட்டரை லாஞ்ச் செய்து நேஷனல் ட்ரெண்டிங்காக்கிவிட்டது ரெனோ நிறுவனம்.
இந்தப் புது 3-வது ஜெனரேஷன் டஸ்ட்டர் எப்படி இருக்குனு பார்க்கலாம்.
முதலில் ஒரு சோகமான விஷயம் - டஸ்ட்டர் என்றாலே அந்த டீசல் இன்ஜின். மைலேஜுக்குப் பெயர் போன இன்ஜின்தான் இதன் USP-யே. புது டஸ்ட்டரில் இனி டீசல் கிடையாது. ஒன்லி பெட்ரோல் மட்டும்தான். அப்போ மைலேஜ்? அதைச் சரிக்கட்டத்தான் ஹைபிரிட் இன்ஜின் ஆப்ஷன் கொடுக்கிறது ரெனோ.

வெளியே!
வெளிநாடுகளில் ஓடிக் கொண்டிருக்கும் டஸ்ட்டரை இன்ஸ்பிரேஷனாக எடுத்து, அங்கங்கே இந்தியாவுக்கு ஏற்றபடி ஒட்டுவேலைகள் பார்த்திருக்கிறது ரெனோ. முன்பைவிட முரட்டுத்தனப் பையனாக மிரட்டுகிறான் புது டஸ்ட்டன். பிளாஸ்டிக் கிளாடிங்குகள், சதுரமான வீல் ஆர்ச்சுகள், கிண்ணென்ற ஃபெண்டர்கள், முக்கியமாக - இந்த செக்மென்ட்டில் தார் ராக்ஸுக்கே டஃப் கொடுக்கக் கூடிய கிரவுண்ட் கிளியரன்ஸ் 212 மிமீ. வேறெந்த எஸ்யூவியிலும் இல்லை. முன்பைவிட முரட்டுத்தனமாக ஆஃப்ரோடு செய்யலாம் இந்த டஸ்ட்டரில். R E N A U L T என்கிற பேட்ஜிங், காரின் முன் பக்க கிரில் முழுதும் நீள்வது வெறியை ஏற்றுகிறது.
4.3 மீட்டர் நீளத்தில், 1.6 மீட்டர் உயரத்தில், அகலமான வீல்பேஸ் 2.6 மீட்டர் இருப்பதால், இதன் ஏரோடைனமிக்ஸ் - பின் பக்கம் லெக்ரூம் என எல்லாமே பக்காவாக இருக்கும்போல் தெரிகிறது. பொதுவாக, இதுபோன்ற அதிகமான கிரவுண்ட் கிளியரன்ஸ் கொண்ட கார்களில் ஏரோடைனமிக் பாதிக்கப்படும். இதில் அதற்கேற்றாற்போல் வேலை பார்த்திருக்கிறார்களாம் டிசைனர்கள். பின் பக்கம் பூட்டுக்கும் பவர்டு டெயில் கேட் வசதி இருக்கிறது.

இப்போது பின் பக்கக் கதவுகளின் கைப்பிடியை C பில்லரில் கொடுப்பதும், பின் பக்கம் கனெக்டட் டெயில் லைட் இருப்பதும் ட்ரெண்டிங். அது இந்த டஸ்ட்டரிலும் தொடர்கிறது. ஸ்விஃப்ட், அல்ட்ராஸ் கார்களில் கதவுக் கைபிடிகள் இப்படித்தான் இருக்கும்.
இந்த ஃபங்ஷனல் ரூஃப் ரெயிலில் சுமார் 50 கிலோ லோடு அடிக்கலாம். மேல் பக்கம் டூயல் பேன் பனோரமிக் சன்ரூஃப் இருப்பது செம ஸ்டைலாக இருக்கிறது. இதன் பூட் கதவைத் திறந்தால்… எம்மாடியோவ்! 518 லிட்டர் இடவசதி.

உள்ளே…
உள்ளே 48 கலர்களில் லைட்டிங் செட் செய்து கொள்ளலாம். 6 Way அட்ஜஸ்ட் கொண்ட எலெக்ட்ரிக் பவர்டு டிரைவர் சீட், முன் பக்கம் இரண்டும் வென்ட்டிலேட்டட் சீட்கள், லெதர் அப்ஹோல்சரி -. சீட்களுக்கு மட்டுமில்லை; டேஷ்போர்டு மற்றும் டோர் பேனல்களுக்கும்தான்!
3 ஸ்போக் ஸ்டீயரிங் வீல் பிரமாதமாக இருக்கிறது. அகலமான சென்டர் கன்சோல், டூயல் ஸ்க்ரீன் செட்அப்பில் டிரைவருக்கு 10.25 இன்ச் டிஸ்ப்ளே, நடுவே 10.1 இன்ச் ப்ளோட்டிங் டச் ஸ்க்ரீன் சாஃப்ட் டச் மெட்டீரியர்கள், ஏர்வென்ட்கள் என்று உள்ளேயும் ரக்கட்தான்! கியர்பாக்ஸ் ப்ரீமியமாக இருக்கிறது.
சில கார்களில் பிசிக்கல் பட்டன்கள் இருக்காது. டஸ்ட்டரில் டிஜிட்டல் மற்றும் பிசிக்கல் பட்டன்கள் என்று இரண்டுக்குமே வாய்ப்பு இருக்கிறது. முன் பக்க ஆர்ம்ரெஸ்ட், கொஞ்சம் ஸ்டோரேஜ் கம்பார்ட்மென்ட்டாகவும் பயன்படுவது ப்ளஸ்.
முன்பு டஸ்ட்டர் வாங்கிய ஒரு நண்பரிடம், இன்னொரு நண்பர், ‛‛அதைப் போய் ஏன்யா வாங்கின? வாட்டர் பாட்டில் வைக்கக்கூட இடம் இருக்காது’’ என்று நக்கல் செய்தார். அது ஓரளவு உண்மைதான்; ஆனால் புது டஸ்ட்டரில் அப்படி இல்லை. நிறைய ஹோல்டர்கள், இடவசதி என்று கலக்குகிறது. இப்போது ஒயர்லெஸ் போன் சார்ஜர், டூயல் ஸோன் கிளைமேட் கன்ட்ரோல் வேறு!
பாதுகாப்பைப் பொருத்தவரை டஸ்ட்டர் இப்போது சூப்பர்! 360 டிகிரி கேமரா, முன் மற்றும் பின் பக்க பார்க்கிங் சென்சார்கள், டயர் ப்ரஷர் மானிட்டர் சிஸ்டம், லெவல் 2 அடாஸ், எலெக்ட்ரானிக் பார்க்கிங் பிரேக், நான்கு வீல்களுக்கும் டிஸ்க் பிரேக்குகள் என்று பின்னி எடுக்கிறான் டஸ்ட்டர் பயபுள்ள! ரெனோ கார்களில் முதல் அடாஸ் தொழில்நுட்பம் கொண்ட கார் டஸ்ட்டர்தான். 5 ஸ்டார் ரேட்டிங்கும் க்ராஷ் டெஸ்ட்டிங்கில் வாங்கப் போவதாகச் சொல்கிறது ரெனோ.

இன்ஜின் ஆப்ஷன்கள்!
புது டஸ்ட்டரில் இப்போதைக்கு மொத்தம் 2 பெட்ரோல் இன்ஜின்கள் உண்டு. ஒன்று - 163hp பவர் மற்றும் 280Nm டார்க் கொண்ட 1.3 லிட்டர் டர்போ பெட்ரோல். இதன் பெயர் டர்போ TCe 160. இன்னொன்று - 100hp பவர் மற்றும் 160Nm டார்க் தரும் சின்ன 1.0 லிட்டர் பெட்ரோல் இன்ஜின். இதன் பெயர் டர்போ TCe 100. நல்லவேளை - இரண்டுமே டர்போதான். பெரிய 1.3 லி டர்போவுக்கு 6 ஸ்பீடு மேனுவல் மற்றும் DCT ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ்! சின்ன இன்ஜினுக்கு வெறும் 6 ஸ்பீடு மேனுவல் மட்டும்தான் பாஸ்! ஓட்டுதலுக்கு டிரைவிங் மோடுகளும் உண்டு.

மாருதி மற்றும் டொயோட்டா போட்டியாளர்களைப்போல், பெட்ரோல் இன்ஜினுடன் ஹைபிரிட் இருக்கிறதாம். 109hp பவர் தரும் 1.8 லிட்டர், 4 சிலிண்டர் பெட்ரோல் இன்ஜின். இதில் 49hp பவர் தரும் எலெக்ட்ரிக் மோட்டாருடன், 20hp கொண்ட ஹைபிரிட் ஸ்டார்ட்டர் ஜெனரேட்டர் (HSG) இருக்கும். இது 1.4kWh (280 V) பேட்டரியுடன் சேர்ந்து இயங்கும். இது எல்லாம் சேர்ந்து 160hp பவர் மற்றும் 280Nm டார்க் என செம்மையாக கிடைக்கிறது. 1411 கிலோ கெர்ப் எடை கொண்ட டஸ்ட்டரை இழுக்க இந்த பவர் டார்க் செம! ஒரு விஷயம் - இந்த பவர்ட்ரெயின் இந்தத் தீபாவளிக்குத்தான் வருமாம்.
அதேபோல், ஆஃப்ரோடு அன்பர்களுக்கு இன்னொரு சோகச் செய்தியும் உண்டு. டஸ்ட்டரில் ஆல்வீல் டிரைவ் ஆப்ஷனும் கிடையாது. (AWD). 2 வீல் டிரைவ் மட்டும்தான். புது டஸ்ட்டரின் விலையை இன்னும் சொல்லவில்லை. 7 ஆண்டுகள் / 1,50,000 கிமீ ஸ்டாண்டர்டு வாரன்ட்டியும் வழங்குகிறார்கள்.


அப்போ ஆஃப்ரோடு பண்ண முடியாதா என்றால்? 18 இன்ச் அலாய் வீல்கள், 212 மிமீ கிரவுண்ட் கிளியரன்ஸ், 26.9 டிகிரி அப்ரோச் / 34.7 டிகிரி டிப்பார்ச்சர் ஆங்கிள் என ஆஃப்ரோடு அதகளத்துக்கு ரெடியாகவே இருக்கிறது புது டஸ்ட்டர். இது எவ்வளவு விலை இருந்தால் எடுபடும்னு சொல்லுங்களேன்!















