செய்திகள் :

Mahindra: குழப்பிக்காதீங்க! XUV7OO - XUV7XO ரெண்டும் ஒரே கார்தான்!எம்மாடியோவ்.. எம்பூட்டு ஹைலைட்ஸ்!

post image

‛ஜனநாயகன்’ படத்தைவிட கார் ஆர்வலர்கள் மிகவும் எதிர்பார்த்திருந்த கார் XUV7XO. ‛ஜனநாயகன்’ ரிலீஸ் தள்ளிடுச்சு; ஆனால், மஹிந்திராவின் புது ரிலீஸ் புக்கிங்கில் அள்ளிடுச்சு! ஆம், ஒரே நாளில் ஆயிரக்கணக்கில் புக்கிங் நடந்து கொண்டிருக்கிறதாம் XUV7XO காருக்கு!

அப்போ XUV7OO என்னாச்சு? என்று பலர் கேட்கிறார்கள். இரண்டுமே ஒரே கார்தான். அதாவது, XUV7OO-வின் அப்டேட் செய்யப்பட்ட ஃபேஸ்லிஃப்ட் வெர்ஷன்தான் XUV7XO. ஆனால், பார்ப்பதற்கு XUV3XO-வின் அண்ணன் போன்று இருக்கும் இந்த 7 சீட்டர் காரை, ரூ.13.66 லட்சம் எனும் எக்ஸ் ஷோரூம் விலைக்கு அறிமுகப்படுத்தி இருக்கிறது மஹிந்திரா. இதன் டாப் மாடல் 24.92 லட்சம் வரைக்கும் போகிறது. அதாவது - ஆன்ரோடு விலை சுமார் 15.90 லட்சத்தில் இருந்து 29.55 லட்சம் வரைக்கும் இந்தக் காரை வாங்க முடியும். 

XUV7XO

XUV7XO காரைப் பற்றி முக்கியமான சில ஹைலைட்ஸ் பார்க்கலாம்!

AX, AX5, AX7 என சுமார் 27 வேரியன்ட்களில் இந்தக் காரைக் கொண்டு வந்திருக்கிறது மஹிந்திரா. இது XUV7OO காரா என்று கண்டுபிடிக்கவே முடியாது. அப்படி மொத்தமாக மாறியிருக்கிறது XUV7OO. அதாவது புது XUV7XO. ரீ-டிசைன் செய்யப்பட்ட முன் மற்றும் பின் பக்க பம்பர்கள், புது ஸ்டைலில் அலாய் வீல்கள் என்று ரோடு பிரசன்ஸில் அசத்துகிறது XUV7XO. 

ஸ்ப்ளிட் செய்யப்பட்ட எல்.இ.டி ஹெட்லைட்கள் செம ஸ்டைல். கார்னரிங் மற்றும் பனிவிளக்குகள், ஐஸ் க்யூப் வடிவத்தில் க்யூட்டாக இருக்கின்றன. இதில் ஒரு விசேஷம் உண்டு. 80 கி.மீ வேகத்துக்கு மேலே போனால், இது ஒரு ஹெட்லைட் பூஸ்ட்டராகச் செயல்பட்டு, எக்ஸ்ட்ரா வெளிச்சத்தைப் பீய்ச்சுமாம். ஆனால், இது ஹைபீமில் மட்டும்தான் வேலை செய்யும். அதனால், இரவு நேரங்களில் ஹைவேஸில் செல்லும்போது விசிபிலிட்டி குறைபாடு இருக்காது. 

இந்தக் காரில் வசதிகளை வாரித் தெளித்திருக்கிறது மஹிந்திரா. அடாஸ் லெவல் 2, பெரிய பனோரமிக் சன்ரூஃப், டேஷ்போர்டு முழுதும் நீளும் டச் ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்ட்டர், முன் பக்கத்தில் பவர்டு மெமரி மற்றும் வென்ட்டிலேட்டட் சீட்கள், 2 ஸ்போக் மல்ட்டி ஃபங்ஷன் ஸ்டீயரிங் வீல், முன்பக்கப் பயணியின் சீட்டின் பின்னால், ஒரு ஸ்க்ரீன் எனக் கலக்குகிறது. டாப் மாடலில் 19 இன்ச் அலாய்; மிட் வேரியன்ட்டில் 18 இன்ச் அலாய் வீல்கள் இருக்கின்றன. புது டிசைனில் இருக்கின்றன இவை. XEV 9S காரில் இருப்பதுபோல், பின் பக்க டெயில்லைட்கள் இருக்கின்றன.

6 and 7 Seater
540 degree camera

அந்த ஃப்ளஷ் டைப் டோர் ஹேண்டில்கள் இந்த XUV7XO காரிலும் தொடர்கிறது. இது ஒரு ப்ராக்ஸிமிட்டி சென்சார் அடிப்படையில் பாப்-அவுட் ஆகும் விதம் அழகாக இருக்கும். ஹைவேஸிலும் ஸ்டெபிலிட்டி கிடைக்க உதவும். இது டாப் வேரியன்ட்டில் மட்டும்தான். 

ஸ்டீயரிங்கும் XEV 9S காரில் இருக்கும் அதே செட்அப்தான். ரீச் மற்றும் ரேக் என எல்லா ஆப்ஷன்களும் உண்டு. உயரம் குறைவானவர்கள், அதிகமானவர்கள் எல்லோருக்குமே இந்தக் கார் ஓட்டுவதற்குப் பக்காவாக இருக்கும்.

பொதுவாக, கார்களில் 360 டிகிரி கேமராதானே இருக்கும்; இதில் 540 டிகிரி கேமரா இருக்கும் என்கிறது மஹிந்திரா. டாப் வியூவையும் சேர்த்துச் சொல்கிறார்கள். இது 6 மற்றும் 7 சீட்டர் வேரியன்ட்டில் வருகிறது. பாட்டுக் கேட்க Dolby Atmos சரவுண்ட் சிஸ்டம், ஏதோ தியேட்டர் எஃபெக்ட்டில் இருக்கிறது.

டாப் 2 ட்ரிம்களில் இருக்கும் கேப்டன் சீட்களின் சொகுசு வேற லெவலில் இருக்கும். அட, இதுவும் வென்ட்டிலேட்டட்தான். குளுகுளுவென்று பயணிக்கலாம். நல்ல லெக்ரூம், ஹெட்ரூம் என சொகுசு. என்ன, பின் பக்கம் 3-வது வரிசைதான் பேருக்கு இருக்கிறது. இதில் 3 பேர் பயணிப்பது கொஞ்சம் சிரமம்தான். டாப் வேரியன்ட்டான AX7-ல் Boss Mode என்றொன்று உண்டு. முன் பக்கப் பயணியின் சம்மதம் இல்லாமலே பின்னால் உட்கார்ந்து கொண்டு முன் சீட்டை அட்ஜஸ்ட் செய்து கொள்வது. 

Stylish Interior

இதில் சஸ்பென்ஷன்தான் பெரிதும் பேசப்படுகிறது. இதிலுள்ள Davinci Damping எனும் தொழில்நுட்பம், ஓட்டுதலில் இந்தக் காரை அடுத்த லெவலுக்கு எடுத்துப் போகலாம். ஏற்கெனவே தார் ராக்ஸில் இருக்கும் Frequency Selective Dampers (FSD) எனும் கிட்டத்தட்ட அதே டெக்னாலஜிதான். இதன் சப்ளையர் Tenneco call DaVinci dampers. டெரெய்னுக்கு ஏற்ப இதன் டேம்ப்பிங் ஃபோர்ஸ் அட்ஜஸ்ட் ஆகும் விதம் அருமையாக இருக்கும். 

மொத்தம் 2 இன்ஜின் ஆப்ஷன்கள் இதில் இருக்கின்றன. 203hp பவர் மற்றும் 380Nm டார்க் தரும் 2.0 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின்; 185hp பவர் மற்றும் 450Nm டார்க் தரும் 2.2 லிட்டர் டர்போ டீசல் இன்ஜின். இதில் Zip, Zap மற்றும் Zoom என 3 டிரைவிங் மோடுகள் உண்டு. இந்த டீசல்தான் பலரது சாய்ஸாக இருக்கிறது. 75% டீசல்தான் விற்கிறதாம். ஆனால், டீசலுக்கு எப்படியும் 1.25 லட்சம் எக்ஸ்ட்ரா எடுத்து வைக்க வேண்டும். என்னது, சிஎன்ஜியா? அது மஹிந்திராகிட்டதான் கேட்கணும்? 

இரண்டிலும் 6 ஸ்பீடு மேனுவல் மற்றும் டார்க் கன்வெர்ட்டர் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் இருக்கின்றன. ஆட்டோமேட்டிக் செம ஸ்மூத்தாக இருக்கும். பெட்ரோல் மேனுவல் மாடலின் அராய் மைலேஜ் 13 கி.மீ; பெட்ரோல் ஆட்டோமேட்டிக்கின் மைலேஜ் 15 கி.மீ. இதுவே டீசல் காரின் அராய் 17 கிமீ - 16.57 கி.மீ என்று க்ளெய்ம் செய்கிறது மஹிந்திரா. 

XUV7XO
இது மஹிந்திரா சொல்லும் மைலேஜ்! நீங்கள் யாராவது XUV7XO வாங்கினால், எம்புட்டு மைலேஜ் கிடைக்குதுனு சொல்லுங்களேன்! இன்னொரு விஷயம் - இனி XUV700-வின் 5 சீட்டர் கிடையாது!

அட! U டர்ன் இண்டிகேட்டர் செமயா இருக்கே! - ஒண்ணேகால் கோடி ரூபாய்தான்; இது என்ன கார் தெரியுமா?

சும்மா ஒரு ஞாயிறன்று சோஷியல் மீடியாவை ஸ்க்ரோல் செய்து கொண்டிருந்தபோதுதான், அந்த ரீலைப் பார்த்தேன். பெரிய கண்டுபிடிப்பெல்லாம் இல்லை; ஆனால் அசத்தலாகவும், சாலைப் பயனாளர்களுக்குப் பயனுள்ளதாகவும் இருந்... மேலும் பார்க்க