செய்திகள் :

IPL 2026: பகலில் ஷூட்டிங்; மாலையில் தீவிரப் பயிற்சி; சென்னை அணியோடு இணைந்த தோனி; எடுத்த ப்ளான் என்ன?

post image

உலகக்கோப்பையே இன்னும் முடியவில்லை அதற்குள் ஐ.பி.எல்லுக்கான முகாமை தொடங்கிவிட்டது சென்னை அணி.

சி.எஸ்.எகே அணியின் திட்டம் என்ன?

தோனியும் கிட்டத்தட்ட ஐ.பி.எல். தொடங்குவதற்கு ஒரு மாதம் முன்பாகவே சென்னையில் காலடி எடுத்து வைத்துவிட்டார். சி.எஸ்.கே. அணியின் திட்டம் என்ன?

தோனி
தோனி

2019க்கு முன்பு வரைக்கும் தோனி இந்திய அணியின் போட்டி அட்டவணைகளைப் பொறுத்து இந்திய அணிக்காக ஆடிவிட்டு ஐ.பி.எல்லுக்கு ஒரு சில நாட்களுக்கு முன்புதான் சென்னைக்கு வருவார். 2019க்குப் பிறகு தோனி சர்வதேசப் போட்டிகளில் ஆடவில்லை.

சென்னை வந்த தோனி

அதன்பிறகு எப்போதுமே ஒவ்வொரு சீசனின் போதுமே சரியாக ஒரு மாதம் முன்பாகவே தோனி சென்னைக்கு வந்துவிடுவார்.

அவரின் வருகையைப் பொறுத்துதான் சென்னை அணியின் பயிற்சி செஷன்களும் திட்டமிடப்படும்.

ராஞ்சியில் முதற்கட்டமாக சில நாட்கள் பயிற்சி எடுக்கும் தோனி, சென்னையிலும் வந்திறங்கியவுடன் முதல் நாளின் பயிற்சி செஷனிலிருந்தே பயிற்சியையும் தொடங்கிவிடுவார். அதே டெம்ப்ளேட்தான் இந்த முறையும்.

ருத்துராஜ் கெய்க்வாட்
ருத்துராஜ் கெய்க்வாட்

வீடியோ வெளியிட்ட சிஎஸ்கே

மூன்று நாட்களுக்கு முன்பாக தோனி சென்னைக்கு வந்திறங்கிவிட்டார். தோனியை வரவேற்கும் விதத்தில் சென்னை அணியும் ஒரு மாஸான வீடியோவை வெளியிட்டிருந்தது.

தோனியுடன் ருத்துராஜ் கெய்க்வாட், சர்பராஸ் கான் உட்பட 10க்கும் மேற்பட்ட வீரர்களும் சென்னை அணியின் முகாமில் இணைந்துவிட்டனர்.

ஷூட்டிங்

சஞ்சு சாம்சன் போல சர்வதேச அணிகளுக்காக ஆடி வரும் வீரர்களும் உலகக்கோப்பை முடிந்தவுடன் பயிற்சி முகாமில் இணைந்து விடுவார்கள்.

நட்சத்திர விடுதியில் தங்கியிருக்கும் தோனி சில நாள்களை போட்டோஷூட்டுக்கும் சில நாள்களை விளம்பரப் படங்களின் ஷூட்டுக்கும் எஞ்சியிருக்கும் நாள்களில் ஸ்பான்சர்களுக்காக ஒன்றிரண்டு நிகழ்ச்சிகளிலும் கலந்துகொள்வார் எனத் தகவல் சொல்கின்றனர் சிஎஸ்கே வட்டாரத்தினர்.

தோனி
தோனி

இம்பாக்ட் ப்ளேயராக தோனி

பகல் நேரங்களில் மற்ற கமிட்மெண்ட்களை முடிக்கும் தோனி, மாலை 5 மணியிலிருந்து 9 மணி வரைக்கும் நாவலூரில் உள்ள சிஎஸ்கேவின் இன்னொரு மைதானத்தில் முழுமையாகப் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்.

வரவிருக்கும் சீசனில் தோனி முழுமையாக ஆடமாட்டார். இம்பாக்ட் ப்ளேயராக வேண்டுமானால் வருவார் எனத் தகவல்கள் வருகின்றன.

ஆனால், நாவலூர் மைதானத்தில் தோனி மிகத் தீவிரமாக வழக்கம் போல பேட்டிங் பயிற்சியில்தான் ஈடுபட்டு வருகிறார்.

ஆக, தோனி என்ன ரோலில் ஆடப் போகிறார் என்பது இன்னமும் முடிவாகவில்லை என்று கூட எடுத்துக்கொள்ளலாம். ஆனால், எதுவாக இருந்தாலும் முடிவு தோனி எடுப்பதுதான்.

சென்னை அணியின் முன்னாள் வீரர்களான அஷ்வினையும் ரெய்னாவையும் பயிற்சியாளர் குழுவில் இணைக்கும் மனநிலையிலும் சென்னை அணியின் நிர்வாகம் இருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது.

அஷ்வின்
அஷ்வின்

புது ஜெர்சியோடு, புது எனர்ஜியோடு கலக்க சென்னை வீரர்கள் தயாராகி வருகின்றனர். சென்னை முகாமிலிருந்து அடுத்தடுத்து என்னென்ன அப்டேட்கள் வருகின்றன என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.

"ஆரம்ப நாட்களிலிருந்தே அவரது வளர்ச்சியை நான் கவனித்து வருகிறேன்"- சஞ்சுவை பாராட்டிய சசி தரூர்

நேற்று முன் தினம் (மார்ச்.1) நடந்த டி20 உலகக்கோப்பைத் தொடரின் சூப்பர் 8 சுற்றில் வெஸ்ட் இண்டீஸ் அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி அரையிறுதி சுற்றுக்கு முன்னேறியது. இந்தப் போட்டியில்... மேலும் பார்க்க

மகத்தான சாதனைகள்; ஸ்டார்க் கண்ணீர் - கிரிக்கெட் என்றும் உங்களை நினைவில் வைத்திருக்கும் அலிஷா ஹீலி!

“இன்று நம்முடன் ஒரு அறிமுக வீராங்கனை உள்ளார். இன்றைய நாளை அவருக்கே உரியதாக்குவோம். அது நாளைய தலைமுறைக்கு ஒரு எடுத்துக்காட்டாக இருக்கும்” என்று இந்தியாவுக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் பேசியிருந்த... மேலும் பார்க்க

``சஞ்சு சாம்சனின் 97 ரன்களுக்கு இணையானது, துபே அடித்த அந்த இரண்டு பவுண்டரிகளும்!" - கோச் கம்பீர்

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான டி20 உலகக் கோப்பை 2026 சூப்பர் 8 போட்டியில் இந்தியா வெற்றி பெற்று அரையிறுதிக்குத் தகுதி பெற்ற பிறகு, இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் கௌதம் கம்பீர் செய்தியாளர்களிடம் ... மேலும் பார்க்க

T20 WC: வீரர்களுக்கு ரூ.50 லட்சம் அபராதம்; பாக். கிரிக்கெட் வாரியம் அதிரடி முடிவு?

டி20 உலகக்கோப்பைத் தொடரில் அரையிறுதிச் சுற்றுக்கு முன்னேறத் தவறிய பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்களுக்கு அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அபராதம் விதித்திருப்பதாகத் தகவல் வெளியாகி இருக்கிறது. ஐசிசி டி20 உலகக்... மேலும் பார்க்க

இளம் வேகப்பந்து வீச்சாளர்களை பட்டை தீட்டும் முயற்சி - ஜாகீர் கானை அழைக்கும் பிசிசிஐ?

நாட்டின் அடுத்த தலைமுறை வேகப்பந்து வீச்சாளர்களைப் பட்டை தீட்ட ஜாகீர் கானை இந்திய கிரிக்கெட் வாரியம் (BCCI) தேர்வு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முன்னாள் இந்திய வேகப்பந்து வீச்சாளரான ஜாகீர் கான்,... மேலும் பார்க்க

IND vs ZIM : “தென்னாப்பிரிக்கா vs வெஸ்ட் இண்டீஸ் மேட்ச்-ஐ பாத்தீங்களா?” – ஹர்திக் பாண்ட்யா பதில்

சென்னை M. A. சிதம்பரம் மைதானத்தில் நடைபெற்ற T20 உலகக் கோப்பை, இந்தியா vs ஜிம்பாப்வே போட்டியில், 72 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றுள்ளது.இதில் முக்கிய பங்களிப்பாக 50 (23) ரன்கள் எட... மேலும் பார்க்க