செய்திகள் :

'வன்முறையற்ற, சமூக பிளவுகளற்ற தமிழகத்தை உருவாக்குங்கள்' - தமிழக அரசுக்கு மாரி செல்வராஜ் கோரிக்கை

post image

நாங்குநேரி அருகே பெரும்பட்டு கிராமத்திற்குள் புகுந்த 9 பேர் கொண்ட மர்மகும்பல், அங்குள்ள தேநீர் கடை மீது பெட்ரோல் குண்டு வீசி நடத்திய கொலைவெறித் தாக்குதலில் இருவர் பரிதாபமாக உயிரிழந்திருக்கின்றனர்.

6 பேர் படுகாயத்துடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது.

இந்த சம்பவத்திற்கு அரசியல் தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்து வரும்நிலையில் இயக்குநர் மாரி செல்வராஜ் நாங்குநேரி கொலைகள் தொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார்.

மாரி செல்வராஜ்
மாரி செல்வராஜ்

அவர் வெளியிட்டிருக்கும் பதிவில், " நேற்று இரவு நாங்குநேரியில் சாமானிய மக்கள் மீது சமூகவிரோதிகள் சிலர் நிகழ்த்தியிருக்கும் கொலைவெறி தாக்குதல் பெரும் வேதனையையும் மன உளைச்சலையும் ஏற்படுத்துகிறது.

வெறும் போதை திமிரில் தொடர்ந்து தென்மாவட்டங்களில் வன்முறையையும் சாதிய பெருமிதங்களையும் விஷமாக விதைத்து வளரும் அடுத்த தலைமுறையின் கனவுக்குள்ளும் நீங்கா சமூக பதற்றத்தை சமூக இடைவெளியை திட்டமிட்டு உருவாக்க முயலும் அத்தனை சமூக விரோதிகளையும் அடையாளம் கண்டு பெரும் உக்கிரத்தோடு அவர்களை அடக்கி ஒடுக்கி சிறைப்படுத்தி வன்முறையற்ற சமூக பிளவுகளற்ற தமிழகத்திற்கான நம்பிக்கையையும் உத்திரவாதத்தையும் உருவாக்குமாறு தமிழக அரசை கேட்டுக்கொள்கிறேன்" என்று முதல்வர் ஸ்டாலினையும், உதயநிதி ஸ்டாலினையும் டேக் செய்திருக்கிறார்.

ஈரான் உடனான போர் எப்போது முடிவுக்கு வரும்? - ட்ரம்ப், நெதன்யாகு பதில் என்ன?

ஈரான் மீதான அமெரிக்கா, இஸ்ரேல் போர் மூன்று நாள்களைத் தாண்டி தொடர்ந்து கொண்டிருக்கின்றது. இந்தப் போரினால் ஹார்மோஸ் ஜலசந்தி மூடப்பட்டிருக்கிறது. இதனால், பல உலக நாடுகளுக்கு ஏற்றுமதி, இறக்குமதி சென்று சேர... மேலும் பார்க்க

ஈரான்: ஹார்முஸ் ஜலசந்தியை மூடியதால் 700 டேங்கர் கப்பல்கள் தவிப்பு; இந்தியாவில் LPGக்குத் தட்டுப்பாடு

ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையே நடந்து வரும் போர் நான்காவது நாளை எட்டி இருக்கிறது. இஸ்ரேலுடன் சேர்ந்து அமெரிக்காவும் ஈரான் மீது குண்டு வீசித் தாக்குதல் நடத்தி வருகிறது.இத்தாக்குதல் நாளுக்கு நாள் தீவிரம் அ... மேலும் பார்க்க

விஜய்யின் தஞ்சை விசிட்; முதல்வர் தலைமையில் அன்பில் இல்ல விழா! - உற்சாகம், அப்செட் - டெல்டா பரபர

விஜய் தஞ்சை விஜயம்!தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிகளை நடத்தி நிர்வாகிகள் சந்திப்பை நடத்திவருகிறார். சமீபத்தில் வேலூரில் நிர்வாகிகள் சந்திப்பை முடிந்திருந்த நிலையில், வரு... மேலும் பார்க்க

``ஈரானிய மண்ணில் நடந்த படுகொலை: மோடி அரசின் மௌனம் நடுநிலை அல்ல" - கேள்விகளை அடுக்கும் சோனியா காந்தி!

ஈரான் மீது இஸ்ரேல் - அமெரிக்கா நடத்திய தாக்குதலில் ஈரானின் உச்சத் தலைவர் அயதுல்லா கமேனி உயிரிழந்தார். இந்த விவகாரம் சர்வதேச அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த விவகாரத்தில் இந்தியா எ... மேலும் பார்க்க

`` ‘கேரளா ஸ்டோரி 2’ படத்தைத் தமிழக அரசு தடை செய்யவேண்டும், இல்லையென்றால்..!" - சீமான் எச்சரிக்கை

"இசுலாமியர்களை இழிவுபடுத்தும் ‘கேரளா ஸ்டோரி 2’ திரைப்படத்தைத் தமிழ்நாடு அரசு தடை செய்யாவிட்டால் கடுமையான பின் விளைவுகளை எதிர்கொள்ள நேரிடும்" என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் எ... மேலும் பார்க்க