மாதம் ₹ 50,000 சம்பாதிச்சும் நிம்மதி இல்லையா? புதுச்சேரியா? 35+ வயசா? '1 கோடி' ச...
UPSC / TNPSC: 'வேலை பார்த்துக்கொண்டே போட்டித் தேர்வுக்கு தயாராகுவது எப்படி?' - இராம் பிரசாத் அறிவுரை
'UPSC/TNPSC குரூப் -1, 2 -தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்களுக்கு உதவும் வகையில் ஆனந்த விகடனும் King Makers IAS அகாடமியும் இணைந்து சென்னையில் ஓர் இலவசப் பயிற்சி முகாமை நடத்தத் திட்டமிட்டிருக்கிறது.
'நீங்களும் ஆகலாம் IAS' என்ற தலைப்பிலான இந்த இலவசப் பயிற்சி முகாம் வருகிற மார்ச் மாதம் 8ஆம் தேதி சென்னை எழும்பூரில் உள்ள எத்திராஜ் மகளிர் கல்லூரியில் நடக்க இருக்கிறது. அதனுடன் ஒரு வருட இலவசப் பயிற்சிக்கான ஸ்காலர்ஷிப் தேர்வும் நடக்கிறது.

இந்த நிகழ்வில் டாக்டர். சி. சைலேந்திர பாபு, (ஐபிஎஸ் (ஓய்வு) தமிழ்நாடு முன்னாள் டிஜிபி/ காவல் துறை தலைவர்), டாக்டர். V. இராம் பிரசாத் மனோகர் (இ.ஆ.ப தலைவர், பெங்களூரு குடிநீர் வடிகால் வாரியம் நிர்வாக இயக்குநர், கர்நாடக மின்சார கழகம்) திரு. ஆதில் பெய்க் (சிவில் சர்வீஸஸ் தேர்வு பயிற்சியாளர் - King Makers IAS அகாடமி) ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொண்டு போட்டித் தேர்வுகள் குறித்த ஆலோசனைகளை வழங்க உள்ளார்கள். இவர்களுடன் King Makers IAS அகாடமியின் இயக்குநர் சத்யஶ்ரீ பூமிநாதனும் ஊக்க உரை ஆற்றுகிறார்.
ஆனந்த விகடன், King Makers IAS அகடாமி நிறுவனத்துடன் இணைந்து தமிழகத்தின் முக்கிய நகரங்களில் இதுபோன்ற இலவசப் பயிற்சி முகாமினைப் பல ஆண்டுகளாக நடத்தி வருவதன் மூலம் எண்ணற்ற போட்டித் தேர்வாளர்கள் பயனடைந்து வருகிறார்கள்.
இந்நிலையில் டாக்டர். V. இராம் பிரசாத் மனோகரைத்(இ.ஆ.ப தலைவர், பெங்களூரு குடிநீர் வடிகால் வாரியம் நிர்வாக இயக்குநர், கர்நாடக மின்சார கழகம்) தொடர்பு கொண்டு பேசினோம்.
``போட்டித் தேர்வுக்கு தயாராகும் மாணவர்களுக்கு முதலில் சுயஒழுக்கம் (Self Displine) தேவை. ஏனென்றால் நாம் ஒரு விஷயத்தை செய்ய நினைக்கும்போது பல விஷயங்கள் அதற்கு தடையாக இருக்கும். அந்த இடையூறுகளில் இருந்து தற்காத்து கொள்வதற்கு சுய ஒழுக்கம் தேவை.

இரண்டாவது டைம் மேனேஜ்மென்ட். போட்டித் தேர்வுகளில் தயாராகும் மாணவர்கள் பயிற்சிகளை மேற்கொள்ளும்போதும் சரி, தேர்வுகளை எழுதும்போதும் சரி டைம் மேனேஜ்மென்ட்டை கடைப்பிடிக்க வேண்டும்.
மூன்றாவது...பொதுவாக போட்டித் தேர்வுக்கு தயாராகும் மாணவர்கள் சிலர் நிறைய விஷயங்களை படிப்பார்கள். எதற்காக படிக்கிறோம்? என்ன படிக்கிறோம்? என்ற ஒரு தெளிவு இல்லாமல் படிப்பார்கள். ஆனால் அதற்கான சிலபஸ் என்ன? கடந்த வருடங்களில் என்ன மாதிரியான கேள்விகள் வந்திருக்கிறது என்பதை புரிந்துகொண்டு படிக்க வேண்டும்.
கிராமப்புற / தமிழ்வழி கல்வியில் படிக்கும் மாணவர்களுக்கு ஆங்கிலத்தில் பேசவோ, எழுதவோ முடியாது என்ற தாழ்வுமனப்பான்மை இருக்கும். அந்த மாணவர்கள் முதலில் எளிமையான முறையில் ஆங்கிலத்தை பேசவும், எழுதவும் கற்றுக்கொள்ள வேண்டும்.
ஆங்கிலத்தில் பேசுவதும், எழுதுவதும் ஒரு திறன் (skill) தான். அதனைத் தொடர்ந்து பயிற்சி செய்யும்போது அந்தத் திறன் வளரும். நானும் கிராமத்தில் தமிழ் வழியில் படித்த ஒரு மாணவன் தான். இந்த அணுகுமுறை மூலம் என்னுடைய ஆங்கிலத் திறனை மேம்படுத்திக்கொள்ள முடிந்தது.

தவிர போட்டித் தேர்வுக்கு தயாராகும் சிலர் வேலைப் பார்த்துகொண்டே படிப்பார்கள். அப்படி தேர்வுக்கு தயாராகுபவர்கள் டைம் மேனேஜ்மென்ட் செய்வது கொஞ்சம் கடினமாக இருக்கும். அவர்கள் அதிகாலையில் எழுந்து படிப்பது நல்லது.
அந்த நேரத்தில் வேலை அழுத்தாமல் இல்லாமல் படிக்க முடியும். மாலை வந்தப் பிறகு படித்த விஷயங்களை ரிவிஷன் செய்துகொள்ளலாம். கடினமான அழுத்தமான வேலைகளைத் தேர்ந்தெடுக்காமல் எளிமையான வேலைகளை செய்துகொண்டு தேர்வுக்கு தயாராகலாம்" என்று தெரிவித்தார்.
ஆனந்த விகடன், King Makers IAS அகடாமி நிறுவனத்துடன் இணைந்து தமிழகத்தின் முக்கிய நகரங்களில் இதுபோன்ற இலவசப் பயிற்சி முகாமினைப் பல ஆண்டுகளாக நடத்தி வருவதன் மூலம் எண்ணற்ற போட்டித் தேர்வாளர்கள் பயனடைந்து வருகிறார்கள்.

இந்தப் பயிற்சி முகாமிற்கு முன்பதிவு செய்ய 044- 66802997 என்ற எண்ணிற்கு மிஸ்ட்கால் கொடுக்கவும். அப்படி இல்லையென்றால் இந்த முகாமில் கலந்துகொள்ள விரும்புகின்றவர்கள் கீழ்க்கண்ட விண்ணப்பத்தில் பதிவு செய்து பயன்பெறலாம்.





















