செய்திகள் :

அமைச்சர் நேரு மீது FIR பதிவு செய்யாத வழக்கு - லஞ்ச ஒழிப்பு துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் நோட்டீஸ்!

post image

நகராட்சி நிர்வாகத்துறையில் பணி நியமன முறைகேடு தொடர்பாக அமைச்சர் கே.என் நேரு மீது வழக்குப் பதிவு செய்ய உத்தரவிட்டும், வழக்குப் பதிவு செய்யாத அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி தாக்கல் செய்யப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கு குறித்து லஞ்ச ஒழிப்புத்துறை பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழக நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையில், உதவிப் பொறியாளர், இளநிலை பொறியாளர், சுகாதார ஆய்வாளர் உள்ளிட்ட 2,538 பணியிடங்கள் நியமனங்களுக்கு 634 கோடி ரூபாய் லஞ்சமாக பெறப்பட்டுள்ளதால், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்யும்படி அமலாக்கத் துறை கடிதம் அனுப்பியிருந்தது.

இந்த கடிதத்தின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்ய லஞ்ச ஒழிப்புத் துறைக்கு உத்தரவிடக் கோரி அதிமுக எம்.பி. இன்பதுரை சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தார்.

உயர் நீதிமன்றம்

இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவஸ்தவா மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் அமர்வு, அமலாக்கத் துறை அனுப்பிய தகவல்களில் ஆதாரங்கள் உள்ளதாகக் கூறி, அதன் அடிப்படையில் உடனடியாக வழக்குப்பதிவு செய்யும்படி, லஞ்ச ஒழிப்புத் துறைக்கு உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில், நீதிமன்றம் உத்தரவிட்டும் வழக்குப் பதிவு செய்யாமல் நீதிமன்ற உத்தரவை வேண்டுமென்றே செயல்படுத்தாத அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென ஐ.எஸ்.இன்பதுரை சார்பில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த வழக்கு தலைமை நீதிபதி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, ஆஜரான அரசு தலைமை வழக்கறிஞர், வழக்குப் பதிவு செய்யக்கோரி பிறப்பித்த உத்தரவை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்திலேயே மறு ஆய்வு மனு தாக்கல் செய்ய முடிவு செய்துள்ளதாக கூறினார்.

இதனையடுத்து, நீதிமன்ற அவமதிப்பு வழக்கு லஞ்ச ஒழிப்புத்துறை பதிலளிக்க உத்தரவிட்ட நீதிபதிகள் வழக்கை இரண்டு வாரங்களுக்கு ஒத்திவைத்தனர்.

`அழுகை; சிரிப்பு.!' சிபிஐ-யை லெஃப்ட் ரைட் வாங்கிய நீதிமன்றம்; விடுவிக்கப்பட்ட கெஜ்ரிவால்! முழுவிவரம்

இந்திய அரசியலில் கடந்த இரண்டு ஆண்டுகளாக பெரும் புயலை கிளப்பிக் கொண்டிருந்த 'டெல்லி மதுபானக் கொள்கை ஊழல்' வழக்கில் இன்று ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க திருப்பம் ஏற்பட்டுள்ளது. டெல்லி முன்னாள் முதலமைச்சர்... மேலும் பார்க்க

உடைந்து அழுத கெஜ்ரிவால் - மதுபான கொள்கை ஊழல் வழக்கில் இருந்து விடுவிப்பு: சிபிஐக்கு கடும் கண்டனம்!

டெல்லி அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய மதுபானக்கொள்கை ஊழல் விவகாரத்தில் அம்மாநிலத்தில் முதல்வராக இருந்த அர்விந்த் கெஜ்ரிவால் 2024ம் ஆண்டு செப்டம்பர் தனது பதவியை ராஜினாமா செய்தார். டெல்லி அரசுக்க... மேலும் பார்க்க

பாஜக அரசு vs நீதித்துறை: `NJAC (2014) டு NCERT (2026)' - ஆண்டுகள் கடந்தும் தொடரும் ‘நிழல் யுத்தம்’

என்.சி.இ.ஆர்.டி பாட புத்தகத்தில் இந்திய நீதித்துறையில் ஊழல்கள் என்ற தலைப்பில் பாடம் இடம்பெற்றிருந்ததற்கு உச்ச நீதிமன்றம் கடும் கண்டனங்களை தெரிவித்துள்ளது. `இதில் தொடர்புடையவர்கள் அத்தனை பேரும் நிச்சயம... மேலும் பார்க்க

தவெக வழக்கு : `எத்தனை தேர்தல்களில் போட்டியிட்டுள்ளீர்கள்?' - உயர் நீதிமன்றம் காட்டம் | முழு விவரம்

கரூரில் தவெக சார்பில் நடைபெற்ற மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 உயிரிழந்தனர். இதையடுத்து, உயர் நீதிமன்ற உத்தரவின்படி, அரசியல் கட்சிகள் ரோடு ஷோ நடத்துவதற்கான வழிகாட்டு ந... மேலும் பார்க்க

Dhawan: முதல் மனைவி தொடர்ந்த வழக்கு.! `ஏமாற்றிப் பெற்ற சொத்து' - சட்டப் போராட்டத்தில் தவான் வெற்றி

2010-ல் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் அறிமுகமான ஷிகார் தவான், ஆகஸ்ட் 2024-ல் சர்வதேச மற்றும் உள்நாட்டு கிரிக்கெட்டில் இருந்து தனது ஓய்வை அறிவித்தார். அதைத் தொடர்ந்து தற்போது 'Da One Sports' என்ற... மேலும் பார்க்க

"இஸ்லாமியருக்கு இடம் மறுப்பு, தலித் சமைத்த உணவுக்கு எதிர்ப்பு.." - உச்ச நீதிமன்ற நீதிபதி கவலை

சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகளுக்குப் பிறகும் இந்தியாவில் ஆழமான சமூகத் தவறுகள் நீடிப்பது கவலையளிப்பதாக உச்ச நீதிமன்ற நீதிபதி உஜ்ஜல் புயான் தெரிவித்துள்ளார். ஹைதராபாத்தில் தெலங்கானா நீதிபதிகள் சங்கம் மற... மேலும் பார்க்க