செய்திகள் :

'4 மணிக்கு மகள் நிச்சயதார்த்தம்; அந்தரத்தில் கூட்டணி! சித்தரஞ்சன் சாலையில் போராடும் செல்வப்பெருந்தகை

post image

திமுக - காங்கிரஸ் கூட்டணி இழுபறியில் நீடித்து வரும் நிலையில் ப.சிதம்பரமும் செல்வப்பெருந்தகையும் முதல்வரை சந்தித்து தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றனர். மாலை 4 மணிக்கு ECR இல் மகளின் நிச்சயதார்த்தம் நடைபெறும் நிலையில் இன்னமும் கூட்டணியை இறுதி செய்ய முடியாமல் தவிப்பில் அங்குமிங்கும் அலைந்து கொண்டிருக்கிறார் செல்வபெருந்தகை.

திமுக - காங்
திமுக - காங்

திமுக - காங்கிரஸ் கூட்டணி ஒரு முடிவை நோக்கி க்ளைமாக்ஸை எட்டிக் கொண்டிருக்கிறது. மார்ச் 3 ஆம் தேதியான இன்று மாலைக்குள் கூட்டணி குறித்து ஒரு முடிவை கூறுமாறு காங்கிரஸூக்கு திமுக கெடு விதித்திருந்தது. திமுக காங்கிரஸூக்கு 27-28 சீட்கள் வரை கொடுக்க தயாராக இருக்கிறது. ஆனால், காங்கிரஸின் டெல்லி தலைமை 39 சீட்கள் வரையும் எதிர்பார்க்கிறது. அதனால்தான் திமுக கெடு விதித்தும் காங்கிரஸ் ஒரு முடிவை எடுக்காமலே உள்ளது.

திமுக உடனான கூட்டணி குறித்து காங்கிரஸின் உள்ளாகவே இரண்டுவிதமான கருத்துகள் நிலவி வருகிறது. செல்வப்பெருந்தகை, ப.சிதம்பரம் போன்றோர் திமுக உடன் கூட்டணி செல்லவே விரும்புகின்றனர். இந்நிலையில்தான், திமுக விதித்த கெடு நாளான இன்று காலை 11:40 மணியளவில் சிதம்பரத்தின் வீட்டில் செல்வப்பெருந்தகையும் அவரும் முக்கிய ஆலோசனையில் ஈடுபட்டனர்.

ப.சிதம்பரம் முதல்வரை சந்திக்க மதியம் 12:30 மணிக்கு அப்பாய்ண்மெண்டும் வாங்கப்பட்டிருந்தது. 12:25 மணியளவில் ஆலோசனையை முடித்துவிட்டு சிதம்பரமும் செல்வப்பெருந்தகையும் சித்தரஞ்சன் சாலைக்கு கிளம்பினர். 12:40 மணிக்கு முதல்வரின் வீட்டை அடைந்த இருவரும் அரைமணி நேரத்துக்கும் மேலாக முதல்வருடன் ஆலோசித்து வருகின்றனர்.

சித்தரஞ்சன் சாலை
சித்தரஞ்சன் சாலை

செல்வப்பெருந்தகையின் மகள் அக்சயா பிரியாவின் நிச்சயதார்த்தம் ECR இல் ஒரு மண்டபத்தில் இன்று மாலை 4 மணி முதல் நடக்கவிருக்கிறது. மகளின் நிச்சயதார்த்தத்துக்கு இன்னும் 2 மணி நேரமே இருக்கும் நிலையில் செல்வப்பெருந்தகை அங்குமிங்கும் அலைந்து திமுக - காங்கிரஸ் கூட்டணியை காப்பாற்ற போராடிக் கொண்டிருக்கிறார்.

`` ‘கேரளா ஸ்டோரி 2’ படத்தைத் தமிழக அரசு தடை செய்யவேண்டும், இல்லையென்றால்..!" - சீமான் எச்சரிக்கை

"இசுலாமியர்களை இழிவுபடுத்தும் ‘கேரளா ஸ்டோரி 2’ திரைப்படத்தைத் தமிழ்நாடு அரசு தடை செய்யாவிட்டால் கடுமையான பின் விளைவுகளை எதிர்கொள்ள நேரிடும்" என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் எ... மேலும் பார்க்க

`எண்ணிக்கையில் கறார் வேண்டாம்' - ராகுலை சரிகட்டிய கார்கே? - ப.சிதம்பரம் போடும் `2028' கணக்கு!

காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் முதல்வர் ஸ்டாலினை சந்தித்து பேசிய பிறகு சில தகவல்களை டெல்லி மேலிடத்திற்கு தொடர்புகொண்டு பேசியிருக்கிறார். இன்று மாலைக்குள் தி.மு.க வுடன் எண்ணிக்கை இறுதியாகும் என்கிற... மேலும் பார்க்க

லாரி லாரியாக இறங்கும் டிரம்கள் - கோவை தொண்டாமுத்தூரில் அடுத்த பரிசை இறக்கிய வேலுமணி!

கோவை மாவட்டத்தில் எப்படியாவது வெற்றி பெற திமுக தீவிரம் காட்டுகிறது. கோவையில் தங்களின் செல்வாக்கை நிரூபிக்க அதிமுக திட்டமிட்டு வருகிறது. கோவையில் அதிமுகவின் வெற்றியை வேலுமணி தன்னுடைய கௌரவ பிரச்னையாகவே ... மேலும் பார்க்க

சிதம்பரம் கொண்டு வந்த `சீக்ரெட்' மெசேஜ்! உற்சாகத்தில் தி.மு.க - `கை'கொடுக்குமா சிதம்பர முயற்சி?

காங்கிரஸ் - தி.மு.க இடையே நிலவி வந்த சிக்கலுக்கு, சிதம்பரம் வழியாக முடிவு எடுக்கபட்டுவிட்டது என்கிற தகவலை காங்கிரஸ் வட்டாரத்தினர் சிலர் உறுதிபடுத்தியுள்ளனர். ஸ்டாலினுக்கு தான் சொல்லி விரும்பிய மெசேஜை ... மேலும் பார்க்க