செய்திகள் :

உடைந்து அழுத கெஜ்ரிவால் - மதுபான கொள்கை ஊழல் வழக்கில் இருந்து விடுவிப்பு: சிபிஐக்கு கடும் கண்டனம்!

post image

டெல்லி அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய மதுபானக்கொள்கை ஊழல் விவகாரத்தில் அம்மாநிலத்தில் முதல்வராக இருந்த அர்விந்த் கெஜ்ரிவால் 2024ம் ஆண்டு செப்டம்பர் தனது பதவியை ராஜினாமா செய்தார். டெல்லி அரசுக்கு கூடுதல் வருவாய் கிடைக்கும் என்று கூறி 2021-22ம் ஆண்டு அப்போது முதல்வராக இருந்த அர்விந்த் கெஜ்ரிவால் அரசு புதிய மதுபானக்கொள்கையை கொண்டு வந்தது.

இதில் பெரிய அளவில் ஊழல் நடந்திருப்பதாக அமலாக்கப்பிரிவு தெரிவித்தது. சௌத் பிளாக் என்ற நிறுவனம் அர்விந்த் கெஜ்ரிவால் மற்றும் ஆம் ஆத்மி கட்சி தலைவர்களுக்கு ரூ.100 கோடி லஞ்சம் கொடுத்தாக அமலாக்கப்பிரிவு குற்றம்சாட்டியது.

மேலும் தனியாருக்கான லாபம் 5 சதவீதத்தில் இருந்து 12 சதவீதமாக அதிகரிக்கப்பட்டதாக சிபிஐ பதிவு செய்த முதல் தகவல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டு இருந்தது. 2022-ம் ஆண்டு டெல்லி தலைமை செயலாளர் மதுபான கொள்கையில் முறைகேடு நடப்பதாக கூறி ஆளுநர் சக்சனாவிற்கு அறிக்கை அனுப்பினார்.

அதன் அடிப்படையில் ஆளுநர் இது குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டார். இந்த ஊழலில் வழக்கில் முதல் குற்றவாளியாக அப்போதைய கலால் துறை அமைச்சராக இருந்த மணீஷ் சிசோடியா சேர்க்கப்பட்டு 2023-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் சிபிஐயால் கைது செய்யப்பட்டார்.

அவர் 17 மாதங்களுக்கும் மேலாக சிறையில் இருந்தார். 2024ம் ஆண்டு மார்ச் மாதம் இந்த ஊழல் சதியில் முதன்மையானவர் அர்விந்த் கெஜ்ரிவால் என்று கூறி சிபிஐ அவரை கைது செய்தது. அவரும் 6 மாதம் சிறையில் இருந்தார். அதன் பிறகு நடந்த டெல்லி சட்டமன்ற தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி தோல்வியை தழுவியது. அவர்கள் மீதான வழக்கு டெல்லி நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வந்தது.

இதில் இன்று தீர்ப்பு கூறிய நீதிமன்றம், அர்விந்த் கெஜ்ரிவால் மற்றும் மனீஷ் சிசோடியா ஆகிய இரண்டு பேரையும் இவ்வழக்கில் இருந்து விடுதலை செய்து உத்தரவிட்டது. டெல்லி நீதிமன்றம் தனது உத்தரவில் சிபிஐக்கு கடுமையான கண்டனத்தை தெரிவித்தது. `அரசு தரப்பு தனது குற்றச்சாட்டுகளை நம்பகமான ஆதாரங்களுடன் நிரூபிக்கத் தவறிவிட்டது' என்று கோர்ட் தீர்ப்பளித்தது. பெரிய சதி மற்றும் குற்றவியல் நோக்கம் பற்றிய கூற்றுக்கள் நீதித்துறை ஆய்வுக்கு நிற்காது என்று நீதிமன்றம் கூறியது.

``கெஜ்ரிவாலுக்கு எதிரான கடுமையான குற்றச்சாட்டுகளை நிரூபிக்க தேவையான ஆதாரங்கள் வேண்டும்" என்று கூறிய டெல்லி நீதிமன்றம், ``மத்திய சதித்திட்டத்தில் பங்கு வகித்ததற்கான காரணத்தை ஆதாரங்கள் இல்லாமல் உறுதி செய்ய முடியாது" என்றும் கூறியது. ``அரசுத் தரப்பு கூற்றுகள் ஆதாரங்களுடன் வழங்கப்படவில்லை என்று கண்டறியப்பட்டால், சி.பி.ஐ மீதான பொதுமக்களின் நம்பிக்கை பாதிக்கப்படும்" என்று நீதிமன்றம் குறிப்பிட்டது.

டெல்லி கலால் கொள்கை வழக்கில் மத்திய புலனாய்வுப் பிரிவின் (சிபிஐ) விசாரணை குறித்து டெல்லி நீதிமன்றம் கடுமையான கேள்விகளை எழுப்பி தனது கண்டனத்தை தெரிவித்தது. மேலும், கலால் கொள்கையை உருவாக்கும்போது பல நிலைகளில் ஆலோசனை நடத்தப்பட்டதாக ஆவணங்கள் கூறுகின்றன என்று நீதிமன்றம் தெரிவித்தது.

ஆனந்த கண்ணீர் விட்ட கெஜ்ரிவால்!

கோர்ட் தீர்ப்பை கேட்டதும் அர்விந்த் கெஜ்ரிவால் ஆனந்த கண்ணீர் விட்டார். இது குறித்து அவர் உணர்ச்சி பெருக்குடன் கூறுகையில்,''இந்த வழக்கு சுதந்திர இந்தியாவின் மிகப்பெரிய அரசியல் சதி. டெல்லியில் ஆம் ஆத்மி கட்சியை அதிகாரத்திலிருந்து வெளியேற்ற பாஜக திட்டமிட்டது. அதிகாரத்திற்காக யாரும் நாட்டுடனும் அரசியலமைப்புடனும் இந்த வழியில் விளையாடக்கூடாது. உண்மை வெல்லும் என்று நாங்கள் எப்போதும் கூறி வந்தோம். எங்களுக்கு நீதி வழங்கிய நீதிபதிக்கு நான் மிகவும் நன்றி கூறுகிறேன். உண்மை வென்றது" என்று கெஜ்ரிவால் கூறினார்.

பாஜக அரசு vs நீதித்துறை: `NJAC (2014) டு NCERT (2026)' - ஆண்டுகள் கடந்தும் தொடரும் ‘நிழல் யுத்தம்’

என்.சி.இ.ஆர்.டி பாட புத்தகத்தில் இந்திய நீதித்துறையில் ஊழல்கள் என்ற தலைப்பில் பாடம் இடம்பெற்றிருந்ததற்கு உச்ச நீதிமன்றம் கடும் கண்டனங்களை தெரிவித்துள்ளது. `இதில் தொடர்புடையவர்கள் அத்தனை பேரும் நிச்சயம... மேலும் பார்க்க

தவெக வழக்கு : `எத்தனை தேர்தல்களில் போட்டியிட்டுள்ளீர்கள்?' - உயர் நீதிமன்றம் காட்டம் | முழு விவரம்

கரூரில் தவெக சார்பில் நடைபெற்ற மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 உயிரிழந்தனர். இதையடுத்து, உயர் நீதிமன்ற உத்தரவின்படி, அரசியல் கட்சிகள் ரோடு ஷோ நடத்துவதற்கான வழிகாட்டு ந... மேலும் பார்க்க

Dhawan: முதல் மனைவி தொடர்ந்த வழக்கு.! `ஏமாற்றிப் பெற்ற சொத்து' - சட்டப் போராட்டத்தில் தவான் வெற்றி

2010-ல் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் அறிமுகமான ஷிகார் தவான், ஆகஸ்ட் 2024-ல் சர்வதேச மற்றும் உள்நாட்டு கிரிக்கெட்டில் இருந்து தனது ஓய்வை அறிவித்தார். அதைத் தொடர்ந்து தற்போது 'Da One Sports' என்ற... மேலும் பார்க்க

"இஸ்லாமியருக்கு இடம் மறுப்பு, தலித் சமைத்த உணவுக்கு எதிர்ப்பு.." - உச்ச நீதிமன்ற நீதிபதி கவலை

சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகளுக்குப் பிறகும் இந்தியாவில் ஆழமான சமூகத் தவறுகள் நீடிப்பது கவலையளிப்பதாக உச்ச நீதிமன்ற நீதிபதி உஜ்ஜல் புயான் தெரிவித்துள்ளார். ஹைதராபாத்தில் தெலங்கானா நீதிபதிகள் சங்கம் மற... மேலும் பார்க்க

`தந்தையின் பேச்சை மகன் கேட்பதில்லையா? ; நீதிமன்ற நேரத்தை வீண் அடிக்காதீர்' - ராமதாஸ் மனு தள்ளுபடி

பா.ம.க.வில் டாக்டர் ராமதஸுக்கும், அவரது மகன் அன்புமணி ராமதாஸுக்கும் கட்சி யாருக்கு என்று மோதல் நடந்து வருகிறது. இந்த நிலையில், பா.ம.க.வுக்கு மாம்பழம் சின்னம் ஒதுக்கீடு செய்து, தேர்தல் ஆணையம் அன்புமணி... மேலும் பார்க்க

`ED ஆதாரங்களில் முகாந்திரம் உள்ளது; கே.என் நேரு மீது வழக்குப்பதிவு செய்க.!" - உயர் நீதிமன்றம் அதிரடி

தமிழக நகராட்சி நிர்வாகத்துறையில் பணி நியமனங்களுக்கு லஞ்சம் பெற்ற விவகாரம் தொடர்பாகவும், டெண்டர் ஒதுக்கீட்டில் நடந்த முறைகேடுகள் தொடர்பாகவும் வழக்குப்பதிவு செய்யக் கூறி, அமலாக்கத் துறை சார்பில் தமிழக ட... மேலும் பார்க்க