செய்திகள் :

`இனி எனது உழைப்பு முழுவதும் உதயசூரியன் சின்னத்துக்கே.!' - திமுக-வில் இணைந்த ஓ.பன்னீர்செல்வம்

post image

தமிழக அரசியலில் நிலவி வந்த பல மாத கால யூகங்களுக்கு இன்று முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. முன்னாள் முதலமைச்சரும், அ.தி.மு.க-வின் முன்னாள் ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வம், இன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தன்னை முறைப்படி தி.மு.க-வில் இணைத்துக் கொண்டார். அவருடன் அவரது ஆதரவாளர்களும், முக்கிய நிர்வாகிகளும் தி.மு.க-வில் இணைந்தனர்.

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் நம்பிக்கைக்குரிய தளபதியாக விளங்கிய ஓ.பி.எஸ், மூன்று முறை தமிழகத்தின் முதலமைச்சர் நாற்காலியில் அமர்ந்தவர். ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு எடப்பாடி பழனிசாமியுடன் ஏற்பட்ட அதிகாரப் மோதலால், அ.தி.மு.க-விலிருந்து நீக்கப்பட்டார். 'அ.தி.மு.க தொண்டர்கள் மீட்புக் குழு' என்ற பெயரில் அவர் நடத்திய தர்மயுத்தம் மற்றும் சட்டப் போராட்டங்கள் கைகூடாத நிலையில், தனது அரசியல் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு தி.மு.க-வில் இணையும் இந்த அதிரடி முடிவை எடுத்துள்ளார்.

இன்று காலை அண்ணா அறிவாலயம் வந்த ஓ.பி.எஸ்-ஸை, தி.மு.க அமைச்சர்கள், நிர்வாகிகள் வரவேற்றனர். பின்னர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினைச் சந்தித்து, அவருக்குப் பொன்னாடை அணிவித்து தி.மு.க-வின் உறுப்பினர் படிவத்தைப் பெற்றுக்கொண்டார்.

ஓ.பி.எஸ்-ஸை வரவேற்றுப் பேசிய ஸ்டாலின், ``திராவிட இயக்கக் கொள்கைகளை வலுப்படுத்தவும், தமிழகத்தின் உரிமைகளை மீட்டெடுக்கவும் அனுபவம் வாய்ந்த தலைவர்கள் இணைவது மகிழ்ச்சி அளிக்கிறது" எனத் தெரிவித்தார்.

பன்னீர் செல்வம்

தி.மு.க-வில் இணைந்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ஓ.பி.எஸ், ``அ.தி.மு.க இன்று ஒரு சிலரின் பிடியில் சிக்கிச் சிதைந்துவிட்டது. தொண்டர்களின் உணர்வுகளுக்கு அங்கே மதிப்பில்லை. தமிழகத்தை வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்லும் முதலமைச்சர் ஸ்டாலினின் கரங்களை வலுப்படுத்தவே இந்த முடிவை எடுத்துள்ளேன். இனி எனது உழைப்பு முழுவதும் உதயசூரியன் சின்னத்திற்கே. எனது சட்டமன்ற உறுப்பினர் பதவியை அவர் முறைப்படி சபாநாயகரிடம் ராஜினாமா செய்துள்ளேன்." எனறார்.

ஓ.பி.எஸ்-ஸின் இந்த மாற்றம் தென் தமிழக அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக முக்குலத்தோர் சமூக வாக்கு வங்கியில் இது மாற்றத்தை உண்டாக்கும் என அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர். அதேசமயம், இபிஎஸ் தலைமையிலான அ.தி.மு.க-வினர், ``ஓ.பி.எஸ்-ஸின் துரோகம் இன்று அம்பலமாகிவிட்டது. அவர் எப்போதும் தி.மு.க-வின் பி டீமாகவே செயல்பட்டார்" என விமர்சித்து வருகின்றனர். 2026 சட்டமன்றத் தேர்தலுக்குச் சில மாதங்களே உள்ள நிலையில், ஓ.பி.எஸ்-ஸின் இந்த நகர்வு தேர்தல் களத்தை அனல் பறக்கச் செய்துள்ளது.

ஜெயலலிதாவின் தலைமைத் தோற்றம்; கருணாநிதியின் சாமர்த்தியம் - அரசியலை மாற்றியமைத்த தொலைக்காட்சிகள் | 07

தமிழக அரசியலை மாற்றியமைத்த தொலைக்காட்சிகள்! நினைவுச் சுவடுகள் 07இந்திய அரசியலில், ஊடகமும் அரசியலும் மிக நெருக்கமாக இணைந்துள்ள மாநிலங்களில் ஒன்று தமிழ்நாடு. சமூக ஊடகங்கள் வருவதற்கு முன்னரே, அரசியல் தலை... மேலும் பார்க்க

`ஓ.பன்னீர்செல்வம் செய்தது துரோகத்தின் உச்சக்கட்டம்!' - திமுகவில் இணைந்தவரை விளாசும் அதிமுக

அ.தி.மு.க-வில் நீண்டகாலம் முக்கிய பொறுப்புகளை வகித்த ஓ.பி.எஸ்., 2017-ல் ஜெயலலிதா மறைவுக்குப் பின் முதலமைச்சராகப் பதவியேற்றார். அதற்குப்பின் நிலவிய அதிகாரப் போட்டியில் எடப்பாடி பழனிசாமியுடன் ஏற்பட்ட மோ... மேலும் பார்க்க

'எனக்கு தான் சீட்!' முட்டி மோதும் உடன்பிறப்புகள் - 'ஹைப்' ஏற்றும் நிலவரம்! பரபரக்கும் புதுக்கோட்டை

சுதந்திரஇந்தியாவோடுகடைசியாகஇணைந்தசமஸ்தானம்,முதல்பெண் மருத்துவர்டாக்டர்முத்துலட்சுமி,நடிகர்கள்பி.யூ.சின்னப்பா, ஜெமினிகணேசன்ஆகியோர்பிறந்தபகுதிஎன்றுபுதுக்கோட்டைதொகுதிக்குநிரம்பவரலாறுஇருக்கிறது.இந்தமாவட்ட... மேலும் பார்க்க

NCERT பாடத்திட்ட சர்ச்சை: 'நீதித்துறையில் ஊழல்' - கொந்தளிப்பில் உச்ச நீதிமன்றம்; பாஜக வருத்தம்

மத்தியக் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக் கவுன்சில் (NCERT) வெளியிட்டுள்ள 8-ம் வகுப்பு சமூக அறிவியல் பாடப்புத்தகத்தில், "நீதித்துறை ஊழல்" குறித்த பாடம் இடம்பெற்றது பெரும் சர்ச்சையாக வெடித்துள்ளது. 8-... மேலும் பார்க்க