செய்திகள் :

Rinku Singh: 'ஏழ்மையை வென்று மகனை கிரிக்கெட்டராக்கிய தந்தை' - ரிங்குவின் தந்தை புற்றுநோயால் மரணம்

post image

இந்திய கிரிக்கெட் வீரர் ரிங்கு சிங் ஏழ்மையான குடும்பத்தில் வளர்ந்தவர். இவரின் தந்தை கான்சந்த் சிங் LPG சிலிண்டர் டெலிவரி செய்தவர். கடின உழைப்பால் உள்ளூர் கிரிக்கெட்டில் இருந்து உயர்ந்த ரிங்கு சிங், 2018-19 ரஞ்சி டிராபியில் உத்தரப் பிரதேசத்திற்காக விளையாடி பிரபலமானார்.

2023 ஐபிஎல்-ல் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (KKR) அணிக்காக குஜராத் டைட்டன்ஸிற்கு எதிரான போட்டியில் கடைசி ஓவரில் 5 தொடர்ச்சியான சிக்ஸர்கள் அடித்து அசத்தினார். இந்த நிலையில், ரிங்கு சிங்கின் தந்தை புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் இருந்தார்.

ரிங்கு சிங் - கான்சந்த் சிங்
ரிங்கு சிங் - கான்சந்த் சிங்

இதற்கிடையில் தந்தையின் கிரிட்டிக்கலான நிலையைக் கேள்விப்பட்ட ரிங்கு சிங், சென்னையில் ஜிம்பாப்வேக்கு எதிரான டி20 உலகக் கோப்பை 'சூப்பர் 8' போட்டிக்கு முன்னதாக அணியிலிருந்து தற்காலிகமாக விலகினார்.

பின்னர் அவர் மீண்டும் அணியில் இணைந்த போதிலும், நேற்றைய ஆட்டத்தில் அவர் பிளேயிங் லெவனில் இடம்பெறவில்லை. அவருக்குப் பதில் சஞ்சு சாம்சன் அணியில் சேர்க்கப்பட்டார்.

இந்த நிலையில்தான் கிரேட்டர் நொய்டாவில் உள்ள யாதர்த் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவரது உடல்நிலை, இந்த வார தொடக்கத்தில் மோசமடைந்ததை அடுத்து அவர் வென்டிலேட்டர் உதவியுடன் வைக்கப்பட்டிருந்தார். அவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்த நிலையில், இன்று (வெள்ளிக்கிழமை) காலமானார்.

ரிங்கு சிங்கின் தந்தையின் மரணத்துக்கு முன்னாள் இந்திய வீரர் ஹர்பஜன் சிங், ``எனது இதயப்பூர்வமான எண்ணங்களும் பிரார்த்தனைகளும் ரிங்கு சிங்கின் குடும்பத்தினருடன் இருக்கும்" என இரங்கல் தெரிவித்துள்ளார்.

SL vs NZ: "எதிர்மறையான சூழலை இலங்கை அரசு தடுத்து நிறுத்த வேண்டும்"- கேப்டன் தசுன் ஷனகா வேண்டுகோள்

டி20 உலகக்கோப்பை தொடரின் சூப்பர் 8 சுற்றில் நேற்று ( பிப். 25) இலங்கை அணி, நியூசிலாந்து அணியை எதிர்கொண்டது. இந்தப் போட்டியில் நியூசிலாந்து 61 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதால் இலங்கை அணி அரையிறு... மேலும் பார்க்க

WI vs ZIM : வெஸ்ட் இண்டீஸின் மெகா வெற்றி, ஜிம்பாப்வேக்கு மட்டும் அல்ல, இந்தியாவுக்கும் சிக்கல்தான்!

நேற்று நடைபெற்ற சூப்பர் 8 போட்டி, இது ஜிம்பாப்வே அணிக்கு மட்டுமல்ல, இந்திய அணிக்கும் தலைவலியை உருவாக்கிய ஒரு போட்டி எனலாம்.சூப்பர் 8 சுற்றில் நேற்று நடைபெற்ற வெஸ்ட் இண்டிஸ் – ஜிம்பாப்வே அணிகள் இடையிலா... மேலும் பார்க்க

IND vs SA : ``அவர் உண்மையான ‘டீம் மேன்’; எங்கள் வெற்றிக்கு இதுதான் காரணம்!" - கேப்டன் மார்க்ரம்

T20 தொடரில் அசைக்க முடியாத அணியாக இருந்த இந்தியாவை சூப்பர் 8 சுற்றில் 76 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி, வலிமையான அணியாக திகழ்கிறது தென்னாப்பிரிக்கா.இந்த வெற்றி குறித்து தென்னாப்பிரிக்க அணியின் கேப்ட... மேலும் பார்க்க

முன்னாள் மனைவிக்கு 4 கோடி ரூபாய் காரை பரிசளித்த ஹர்திக்; இணையத்தில் வைரலாகும் புகைப்படம்!

கடந்த 2020-ம் ஆண்டு இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியாவும், நடாஷா ஸ்டான்கோவிக்கும் திருமணம் செய்து கொண்டனர். இருவரும் தங்களுக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த ... மேலும் பார்க்க

ரஞ்சி கோப்பை: மைதானம் இல்ல; போதிய வசதிகள் இல்ல, ஆனாலும்!- ஃபைனலில் J&K அணி; இலக்கை அடைந்தது எப்படி?

​“நாங்க சும்மா விளையாட வரல... ஜெயிக்க வந்திருக்கோம்!” - 70 ஆண்டுக்கால ஏமாற்றத்தை ஒரு ஓரமாக ஒதுக்கிவிட்டு, ரஞ்சி கோப்பை இறுதிப்போட்டிக்குள் நுழைந்து இந்திய கிரிக்கெட் உலகையே திரும்பிப் பார்க்க வைத்திரு... மேலும் பார்க்க

IND v NED : `பொதுவாக நான் பவுண்டரிகளையும், சிக்ஸர்களையும் அடிக்க விரும்புவேன்; ஆனால்.!' - சிவம் துபே

நெதர்லாந்து அணிக்கு எதிரான போட்டியில் 2 விக்கெட் மற்றும் 66 ரன்களும் எடுத்து அணியை வெற்றி பெற செய்த சிவம் துபே ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்,ஆட்டநாயகன் விருது பெற்ற பிறகு சிவம் துபே பேசியதாவது,“இந... மேலும் பார்க்க