செய்திகள் :

Dhawan: முதல் மனைவி தொடர்ந்த வழக்கு.! `ஏமாற்றிப் பெற்ற சொத்து' - சட்டப் போராட்டத்தில் தவான் வெற்றி

post image

2010-ல் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் அறிமுகமான ஷிகார் தவான், ஆகஸ்ட் 2024-ல் சர்வதேச மற்றும் உள்நாட்டு கிரிக்கெட்டில் இருந்து தனது ஓய்வை அறிவித்தார். அதைத் தொடர்ந்து தற்போது 'Da One Sports' என்ற விளையாட்டு அகாடமி மற்றும் தனது அறக்கட்டளை மூலம் பல சமூகப் பணிகளைச் செய்து வருகிறார். இவருக்கும் இவரின் முதல் மனைவிக்கும் கடந்த 2023-ம் ஆண்டு விவாகரத்து நடந்தது. அதைத் தொடர்ந்து மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியிருந்ததாக தெரிவித்திருந்தார்.

ஆயிஷா முகர்ஜி - ஷிகர் தவான்
ஆயிஷா முகர்ஜி - ஷிகர் தவான்

அந்த இக்கட்டான காலத்தில் சோபி ஷைன் என்ற பெண்ணுடன் காதல் வயப்பட்ட ஷிகர் தவான், அவரை திருமணமும் செய்திருக்கிறார். இது தொடர்பாக சில தினங்களுக்கு முன்பு அவர் வெளியிட்டிருந்த புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் வைரலானது. விவாகரத்துக்குப் பிறகு ஆயிஷா முகர்ஜி ஆஸ்திரேலிய நீதிமன்றத்தில் சொத்து பகிர்வு தொடர்பாக வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த ஆஸ்திரேலிய நீதிமன்றம், ``மொத்த சொத்து மதிப்பில் 15 சதவீதத்தை ஆயிஷாவுக்கு வழங்க வேண்டும்" என ஷிகர் தவானுக்கு உத்தரவிட்டிருந்தது.

இந்த உத்தரவை எதிர்த்து ஷிகர் தவான் டெல்லி குடும்பவியல் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தார். அதில், ``2012-ல் திருமணம் நடந்த சில காலத்திலேயே, தனது கிரிக்கெட் வாழ்க்கையையும் புகழையும் கெடுக்கும் வகையில் அவதூறு பரப்புவேன் என்று ஆயிஷா மிரட்டி, தனது பணத்தில் வாங்கிய சொத்துக்களைத் அவரின் பெயருக்கு மாற்றக் கட்டாயப்படுத்தினார்.

இதன் அடிப்படையில் அவர் 7.46 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களைத் தன்வசம் வைத்திருந்ததுடன், தவானிடமிருந்து கூடுதலாக 15.95 கோடி ரூபாய் மற்றும் ஒரு சொத்தையும் பெற்றிருந்தார். ஆனால், இவை அனைத்தும் இந்தியத் திருமணச் சட்டங்களுக்கு முரணானவை. நான் ஆஸ்திரேலிய நீதிமன்றத்தின் அதிகார வரம்பிற்கு உட்படவில்லை" என பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்திருந்தார்.

ஷிகர் தவான் - சோபி ஷைன்
ஷிகர் தவான் - சோபி ஷைன்

இந்த வழக்கில் நேற்று தீர்ப்பளிக்கப்பட்டது. அதில், ``அச்சுறுத்தல் மற்றும் மோசடி மூலம் ஷிகர் தவானிடமிருந்து பெற்ற 5.7 கோடி ரூபாயை, 9 சதவீத ஆண்டு வட்டியுடன் ஆயிஷா முகர்ஜி திருப்பித் தர வேண்டும். ஆஸ்திரேலிய நீதிமன்றம் வழங்கிய சொத்துப் பகிர்வு ஒப்பந்தம் செல்லாது. தவான் மற்றும் ஆயிஷாவின் திருமணம் இந்தியாவில் பதிவு செய்யப்பட்டதால், இந்த விவகாரத்தில் முடிவெடுக்க ஆஸ்திரேலிய நீதிமன்றத்திற்கு அதிகாரம் இல்லை.

ஆஸ்திரேலிய நீதிமன்றத்தின் உத்தரவுகள் எதற்கும் தவான் கட்டுப்பட்டவர் அல்ல. மிரட்டல், பணம் பறித்தல் மற்றும் ஏமாற்று வேலைகள் மூலம் தவானிடம் கையெழுத்து வாங்கப்பட்டிருக்கிறது. எனவே, இந்த வழக்கில் வழங்கப்பட்ட சொத்துப் பகிர்வு தொடர்பான அனைத்து ஆவணங்களும் செல்லாதவை.

இந்தியச் சட்டங்களின் கீழ் பதிவு செய்யப்பட்ட ஒரு திருமணத்தில், ஆஸ்திரேலிய குடும்பச் சட்டம் தலையிட முடியாது. அது இந்தியப் பொதுக் கொள்கை மற்றும் இந்து திருமணச் சட்டம், சொத்து மாற்றச் சட்டம் ஆகியவற்றிற்கு முரணானது" என உத்தரவிட்டிருக்கிறது.

"இஸ்லாமியருக்கு இடம் மறுப்பு, தலித் சமைத்த உணவுக்கு எதிர்ப்பு.." - உச்ச நீதிமன்ற நீதிபதி கவலை

சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகளுக்குப் பிறகும் இந்தியாவில் ஆழமான சமூகத் தவறுகள் நீடிப்பது கவலையளிப்பதாக உச்ச நீதிமன்ற நீதிபதி உஜ்ஜல் புயான் தெரிவித்துள்ளார். ஹைதராபாத்தில் தெலங்கானா நீதிபதிகள் சங்கம் மற... மேலும் பார்க்க

`தந்தையின் பேச்சை மகன் கேட்பதில்லையா? ; நீதிமன்ற நேரத்தை வீண் அடிக்காதீர்' - ராமதாஸ் மனு தள்ளுபடி

பா.ம.க.வில் டாக்டர் ராமதஸுக்கும், அவரது மகன் அன்புமணி ராமதாஸுக்கும் கட்சி யாருக்கு என்று மோதல் நடந்து வருகிறது. இந்த நிலையில், பா.ம.க.வுக்கு மாம்பழம் சின்னம் ஒதுக்கீடு செய்து, தேர்தல் ஆணையம் அன்புமணி... மேலும் பார்க்க

`ED ஆதாரங்களில் முகாந்திரம் உள்ளது; கே.என் நேரு மீது வழக்குப்பதிவு செய்க.!" - உயர் நீதிமன்றம் அதிரடி

தமிழக நகராட்சி நிர்வாகத்துறையில் பணி நியமனங்களுக்கு லஞ்சம் பெற்ற விவகாரம் தொடர்பாகவும், டெண்டர் ஒதுக்கீட்டில் நடந்த முறைகேடுகள் தொடர்பாகவும் வழக்குப்பதிவு செய்யக் கூறி, அமலாக்கத் துறை சார்பில் தமிழக ட... மேலும் பார்க்க

`இலவசக் கலாசாரம் கவலையளிக்கிறது' - தமிழக அரசின் மனுமீதான விசாரணையில் உச்ச நீதிமன்றம் அதிருப்தி!

மின்சாரத் துறை சட்டத் திருத்தம் 2024-ன் விதி 23-ஐ எதிர்த்து தமிழக அரசு தாக்கல் செய்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி, மாநில அரசுகளின் இலவசத் திட்டங்கள் குறித்துத் தனது கடுமையான அதிருப்தி... மேலும் பார்க்க

நடிகை பிரதியுஷா மரண வழக்கு: 24 ஆண்டுகள் கழித்து வெளியான தீர்ப்பு; காதலனுக்கு செக்!

தமிழ் தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் நடித்து பிரபலம் அடைந்தவர் நடிகை பிரதியுஷா. தமிழில் மனுநீதி, தவசி உள்ளிட்ட படங்களிலும் நடித்துள்ளார். குறிப்பாக விஜயகாந்த் அவர்களுடன் தவசி படத்தில் அவர் நடனமாடும் `பஞ்... மேலும் பார்க்க

`'விதி'படமே வக்கீல் ஆக்குச்சு!' - நீதிபதி | `84-ல் வெளியான படம்; மறக்க முடியாத அந்த ராதா' - பூர்ணிமா

3000 வழக்குகள், முதல் பெண் தபேதார்!நடிகர் மோகன், நடிகை பூர்ணிமா, நடிகை சுஜாதா ஆகியோரின் நடிப்பில் எண்பதுகளில் வெளியாகி வசூலை வாரிக் குவித்த படம் ‘விதி’. படத்தில் வழக்கறிஞராக வரும் நடிகை சுஜாதாவின் கதா... மேலும் பார்க்க