"ஒவ்வொரு வீட்டிலும் ஐயா நல்லகண்ணு போன்ற ஒரு பிள்ளை பிறக்க வேண்டும்" - நடிகர் ஆரி...
ஒடிசா: சுரங்கத்துறை அதிகாரி வீட்டில் சோதனை; அலமாரி, மேசைகளுக்குள் கட்டுக்காட்டாக பணம்; பின்னணி என்ன?
ஒடிசா சுரங்கத்துறை துணை இயக்குநர் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்திய சோதனையில் 4 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம், அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
ஒடிசா மாநிலம், கட்டாக் மண்டல சுரங்கத்துறை துணை இயக்குநராக தேபபத்ரா மொஹாண்டி பணியாற்றி வந்திருக்கிறார்.

இவர் நிலக்கரி விற்பனையாளர் ஒருவரிடம் நிலக்கரி கிடங்கு மற்றும் போக்குவரத்து அனுமதி வழங்குவதற்காக 30,000 ரூபாய் லஞ்சம் கேட்டதாகப் புகார் எழுந்தது.
இதையடுத்து, நேற்று (பிப். 24) இரவு ஒருவரிடம் லஞ்சம் வாங்கியபோது லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் கையும் களவுமாக மாட்டியிருக்கிறார்.
இந்தக் கைது நடவடிக்கையைத் தொடர்ந்து, புவனேஸ்வர், பத்ரக் மற்றும் கட்டாக் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள அவரது வீடு மற்றும் அலுவலகங்களில் போலீசார் அதிரடி சோதனையை நடத்தி இருக்கின்றனர்.
இந்தச் சோதனையில், நேற்று புவனேஸ்வரில் உள்ள தேபபத்ரா மொஹாண்டியின் வீட்டில் டிராலி பேக்குகள் மற்றும் அலமாரிகளில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 4 கோடி ரூபாய் ரொக்கப் பணத்தை போலீசார் பறிமுதல் செய்திருக்கின்றனர்.

இது தவிர, 1.20 லட்சம் ரூபாயும், 130 கிராம் தங்க நகைகளும் அவரது அலுவலக மேசையிலிருந்து கண்டறியப்பட்டன. வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்தது தொடர்பாக அவரிடம் தீவிர விசாரணை நடந்து வருகிறது.



















