செய்திகள் :

தஞ்சாவூர்: மாநகராட்சியில் வேலை வாங்கித் தருவதாக ரூ.42 லட்சம் மோசடி; உதவி பொறியாளர் மீது வழக்கு

post image

தஞ்சாவூர், அண்ணாநகர் பகுதியைச் சேர்ந்தவர் மணிமாறன். இவர் தஞ்சாவூர் மாநகராட்சியில் தற்காலிக ஊழியராகப் பணியாற்றினார். இவரின் மனைவி செல்வி. இவர்களுக்கு, தஞ்சாவூர் மாநகராட்சியில் உதவி பொறியாளராகப் பணியாற்றிய கார்த்திகேயனுடன் பழக்கம் ஏற்பட்டது.

கார்த்திகேயன் தஞ்சாவூர் மாநகராட்சியில் அதிகாரம் மிக்கவராக வலம் வந்தார். ஸ்மார்ட் சிட்டி திட்டப் பணிகள் இவர் கண்ணசைவு படியே நடந்ததாகச் சொல்வார்கள். ஸ்மார்ட் சிட்டி திட்டப் பணியில் நடந்த பல முறைகேடுகளுக்கு கார்த்திகேயன்தான் மூளையாக இருந்தார் என்கிற குற்றச்சாட்டும் கிளம்பியது.

தஞ்சாவூர் மாநகராட்சி
தஞ்சாவூர் மாநகராட்சி

இந்நிலையில், கார்த்திகேயன், கடந்த 2021ம் ஆண்டு மணிமாறனிடமும் அவரின் மனைவி செல்வியிடமும், அவர்களின் மகன் மற்றும் மகளுக்கு மாநகராட்சியில் நிரந்தர அரசுப் பணி வாங்கித் தருவதாகக் கூறி பணம் கேட்டுள்ளார்.

இதை நம்பிய மணிமாறனும் அவரின் மனைவி செல்வியும், கடந்த 2021ம் ஆண்டு ஏப்ரல் 1ம் தேதி முதல் 2025ம் ஆண்டு ஜூன் 1ம் தேதி வரை, கார்த்திகேயனின் மகள் சுவேதா வங்கிக் கணக்கின் மூலம் ரூ.42 லட்சம் கொடுத்துள்ளனர். ஆனால், சொன்னபடி கார்த்திகேயன் வேலை வாங்கித் தராமல் இழுத்தடித்துள்ளார்.

இதற்கிடையே கார்த்திகேயன் மீது பல்வேறு விமர்சனங்கள் எழுந்ததால் பண்ருட்டி நகராட்சியில் உதவி பொறியாளராகப் பணியிட மாற்றம் செய்யப்பட்டார். ''எப்ப வேலை வாங்கிக் கொடுப்பீங்க?'' என்று செல்வி பலமுறை கார்த்திகேயனிடம் கேட்டும் முறையான பதில் அளிக்கவில்லை.

இதையடுத்து பாதிக்கப்பட்ட செல்வி, தஞ்சாவூர் மாவட்ட குற்றப்பிரிவு போலீஸில் புகார் அளித்தார். இதன்பேரில் தஞ்சாவூர் மாநகராட்சி முன்னாள் உதவிப் பொறியாளர் கார்த்திகேயன் மற்றும் அவரின் மகள் சுவேதா ஆகியோர் மீது இன்ஸ்பெக்டர் சுப்பிரமணியன் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகிறார்.

இந்தச் சம்பவம் தஞ்சாவூர் மாநகராட்சி வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மாநகராட்சி குப்பைகளை அகற்றுவதில், சுமார் ரூ.10 கோடி முறைகேடு நடந்திருப்பதாகப் புகார் எழுந்த விவகாரத்தில், கார்த்திகேயன் மீது லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் ஏற்கனவே வழக்குப்பதிவு செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.

கார்த்திகேயனிடம் தீர விசாரித்தால் பல உண்மைகள் வெளிச்சத்திற்கு வரும் என்று பரவலாகப் பேசப்படுகிறது.

ஒடிசா: சுரங்கத்துறை அதிகாரி வீட்டில் சோதனை; அலமாரி, மேசைகளுக்குள் கட்டுக்காட்டாக பணம்; பின்னணி என்ன?

ஒடிசா சுரங்கத்துறை துணை இயக்குநர் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்திய சோதனையில் 4 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம், அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. ஒடிசா மாநிலம், கட்டாக் மண்டல சுரங்கத்த... மேலும் பார்க்க

Epstein Files: "என் மிகப்பெரிய தவறு; அதற்கு மன்னிப்புக் கேட்கிறேன்" - என்ன சொல்கிறார் பில் கேட்ஸ்?

அமெரிக்காவில் சிறுமிகளைக் கடத்திப் பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய குற்றச்சாட்டில் கைதான ஜெஃப்ரி எப்ஸ்டீன், கடந்த 2019 ஆம் ஆண்டு சிறையிலேயே மர்மமான முறையில் உயிரிழந்தார்.எப்ஸ்டீன் பல்வேறு தரப்பினருடன் உர... மேலும் பார்க்க

சென்னை: ஹனிட்ராப்பில் சிக்கிய தாசில்தார் - மனைவி, தோழியுடன் கைதான பிரபல ரௌடியின் பின்னணி!

சென்னை சோழிங்கநல்லூர் பகுதியில் வசித்து வரும், தாசில்தார் ஒருவருக்கு செல்போன் செயலி மூலம் பெண் ஒருவர் அறிமுகமாகியிருக்கிறார். அதைத் தொடர்ந்து தாசில்தாரும் அந்தப் பெண்ணும் காதல் ரசம் சொட்ட சொட்ட பேசி வ... மேலும் பார்க்க

நாகை: கொலை மிரட்டல் விடுத்த தவெக மாவட்டச் செயலாளர்! - தந்தை மகன் மீது வழக்கு பதிவு

தமிழக வெற்றிக் கழகத்தின் நாகப்பட்டினம் மாவட்ட செயலாளர் சுகுமாரன். இவரது மகன் ரொனால்டோ. தவெக தலைவர் விஜய் கடந்த செப்டம்பர் மாதம் நாகை வந்து பரப்புரை செய்தார். அதற்கான வரவு செலவு கணக்கை திருமருகல் கிழக்... மேலும் பார்க்க

விசாரணை என்ற பெயரில் ஆந்திர காவல்துறையினரால் கொடூர சித்திரவதை - தேசிய மனித உரிமை ஆணையம் விசாரணை!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பட்டியல் சமூகத்தை சேர்ந்தவர்களை விசாரணை என்ற பெயரில் ஆந்திர காவல்துறையினர் சித்திரவதை செய்த சம்பவம் குறித்து தேசிய மனித உரிமைகள் ஆணையம் விசாரணை செய்து வருவது தற்போது பரபரப்பை ... மேலும் பார்க்க

IDFC: `IAS அதிகாரிகள் முதல் வங்கி ஊழியர்கள் வரை' - அம்பலமான வங்கி மோசடி; ஹரியானா அரசு சொல்வது என்ன?

ஹரியானா மாநில அரசின் பல்வேறு துறைகள் கடந்த 2025-ம் ஆண்டில் ஐடிஎஃப்சி ஃபர்ஸ்ட் வங்கியில் ரூ.50 கோடியும், ஏயூ ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கியில் ரூ.25 கோடியும் டெபாசிட் செய்தன.இவ்வாறு பல்வேறு காலகட்டங்களில் சும... மேலும் பார்க்க