செய்திகள் :

சென்னை: ஹனிட்ராப்பில் சிக்கிய தாசில்தார் - மனைவி, தோழியுடன் கைதான பிரபல ரௌடியின் பின்னணி!

post image

சென்னை சோழிங்கநல்லூர் பகுதியில் வசித்து வரும், தாசில்தார் ஒருவருக்கு செல்போன் செயலி மூலம் பெண் ஒருவர் அறிமுகமாகியிருக்கிறார். அதைத் தொடர்ந்து தாசில்தாரும் அந்தப் பெண்ணும் காதல் ரசம் சொட்ட சொட்ட பேசி வந்திருக்கிறார்கள். இதையடுத்து இருவரும் நேரில் சந்திக்க முடிவு செய்திருக்கிறார்கள். அதன்படி சோழிங்கநல்லூர் பகுதியில் தனியார் விடுதிக்கு இருவரும் சென்று ஒருவரை ஒருவர் நேரில் பார்த்து பேசிக் கொண்டிருந்தபோது, ஒரு கும்பல் அங்கு வந்தது. தாசில்தாரை மிரட்டிய அந்தக் கும்பல் அவரிடமிருந்து 25 சவரன் தங்க நகைகள், 15,000 ரூபாய் பணம் ஆகியவற்றைப் பறித்தது. பின்னர் இங்கு நடந்த சம்பவத்தை வெளியில் சொன்னால் உனக்குதான் அவமானம் எனக் கூறிய அந்தக் கும்பல், தாசில்தாருக்கு மயக்க ஊசி ஒன்றை போட்டுவிட்டு தப்பிச் சென்றுவிட்டது.

பிரியதர்ஷினி

மயக்கம் தெளிந்த பிறகு நகை, பணத்தைப் பறிக்கொடுத்த தாசில்தார் சென்னை செம்மஞ்சேரி காவல் நிலையத்தில் புகார் ஒன்றைக் கொடுத்தார். அதில் முழு விவரங்களைக் குறிப்பிட்ட அவர், தன்னை ஏமாற்றியது எப்படி என்பதையும் போலீஸாரிடம் விவரமாக கூறினார். அதைத் தொடர்ந்து போலீஸார் விசாரணை நடத்தினர். விசாரணையில் தாசில்தாரை ஹனிட்ராப் மூலம் வீழ்த்தியது தெரியவந்தது. அது தொடர்பாக தாசில்தாரிடம் விசாரணை நடத்திய போலீஸார், அந்தப் பெண் குறித்த விவரங்களைச் சேகரித்தனர். அதில், தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த பிரபல ரௌடி ஹைகோர்ட் மகாராஜா தலைமையிலான டீம் தாசில்தாரை மிரட்டிப் பணம் பறித்த தகவல் தெரியவந்தது. உடனடியாக தாம்பரம் போலீஸ் கமிஷனர் அமல்ராஜ் உத்தரவின் பேரில் பள்ளிக்காரணை துணை ஆணையர் பொன் கார்த்திக் குமார் மேற்பார்வையில் செம்மஞ்சேரி உதவி ஆணையாளர் வெங்கடேசன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீஸாரின் பிடியில் பிரபல ரௌடி ஹைகோர்ட் மகாராஜா, அவரின் மனைவி பிரியதர்ஷினி, தோழி தனலட்சுமி ஆகியோர் சிக்கினர். அப்போது போலீஸாரிடமிருந்து தப்பிக்க முயன்றபோது ரௌடி ஹைகோர்ட் மகாராஜாவுக்கு கை, காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. அதனால் அவருக்கு மாவு கட்டு போடப்பட்டது.

ரௌடி ஹைகோர்ட் மகாராஜாவின் பின்னணி குறித்து போலீஸார் கூறுகையில், ``தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த ஹைகோர்ட் மகாராஜா, டிரைவராக வேலை செய்து வந்தார். அவர் வேலைப்பார்த்த இடத்தில் வேலை செய்த பிரியதர்ஷ்ணியை காதலித்து திருமணம் செய்துக் கொண்டார். அதன்பிறகு ஹைகோர்ட் மகாராஜாவுக்கு வேறு ஒரு பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டது. அந்தப் பெண்ணை கொலை செய்த வழக்கில் சில ஆண்டுகளுக்குப் பிறகுதான் ஹைகோர்ட் மகாராஜாவை தூத்துக்குடி மாவட்ட போலீஸார் கைது செய்தனர். குற்றச் செயலில் ஈடுபடும் ஹைகோர்ட் மகாராஜா எப்படி தடயம் இல்லாமல் தப்பிப்பது என்பதை முன்கூட்டியே ஸ்கெட்ச் போட்ட பிறகுதான் சம்பவத்தில் ஈடுபடுவதுண்டு. இவர் மீது கொலை, ஆள் கடத்தல் என 10-க்கும் மேற்பட்ட குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன.

தனலட்சுமி

இந்த நிலையில்தான் கடந்த 17-ம் தேதி சோளிங்கநல்லூரில் வசித்து வரும் தாசில்தார் ஒருவரை ரௌடி ஹைகோர்ட் மகாராஜா தன்னுடைய மனைவி, தோழி மூலம் ஹனிட்ராப் வலையில் வீழ்த்தியிருக்கிறார். அதன் பிறகு தாசில்தாரை நேரில் சந்திக்க தன்னுடைய தோழி, மனைவியை அனுப்பி வைத்த ரௌடி ஹைகோர்ட் மகாராஜா, அவரை மிரட்டி 25 சவரன் தங்க நகைகள், பணத்தைப் பறித்திருக்கிறார். மேலும் தாசில்தாருக்கு மயக்க ஊசி போட்டு விட்டு ரௌடி ஹைகோர்ட் மகாராஜாவின் தலைமையிலான கும்பல் தப்பிச் சென்றிருக்கிறது. சி.சி.டி.வி உதவியால் ஹைகோர்ட் மகாராஜா, அவரின் மனைவி பிரியதர்ஷினி, தோழி தனலட்சுமி ஆகியோரை கைது செய்தோம். அவர்களிடமிருந்து தங்க நகைகள், பணத்தைப் பறிமுதல் செய்திருக்கிறோம்'' என்றனர்.

நாகை: கொலை மிரட்டல் விடுத்த தவெக மாவட்டச் செயலாளர்! - தந்தை மகன் மீது வழக்கு பதிவு

தமிழக வெற்றிக் கழகத்தின் நாகப்பட்டினம் மாவட்ட செயலாளர் சுகுமாரன். இவரது மகன் ரொனால்டோ. தவெக தலைவர் விஜய் கடந்த செப்டம்பர் மாதம் நாகை வந்து பரப்புரை செய்தார். அதற்கான வரவு செலவு கணக்கை திருமருகல் கிழக்... மேலும் பார்க்க

விசாரணை என்ற பெயரில் ஆந்திர காவல்துறையினரால் கொடூர சித்திரவதை - தேசிய மனித உரிமை ஆணையம் விசாரணை!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பட்டியல் சமூகத்தை சேர்ந்தவர்களை விசாரணை என்ற பெயரில் ஆந்திர காவல்துறையினர் சித்திரவதை செய்த சம்பவம் குறித்து தேசிய மனித உரிமைகள் ஆணையம் விசாரணை செய்து வருவது தற்போது பரபரப்பை ... மேலும் பார்க்க

IDFC: `IAS அதிகாரிகள் முதல் வங்கி ஊழியர்கள் வரை' - அம்பலமான வங்கி மோசடி; ஹரியானா அரசு சொல்வது என்ன?

ஹரியானா மாநில அரசின் பல்வேறு துறைகள் கடந்த 2025-ம் ஆண்டில் ஐடிஎஃப்சி ஃபர்ஸ்ட் வங்கியில் ரூ.50 கோடியும், ஏயூ ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கியில் ரூ.25 கோடியும் டெபாசிட் செய்தன.இவ்வாறு பல்வேறு காலகட்டங்களில் சும... மேலும் பார்க்க

ஊட்டி: பழங்குடியைக் கொன்று தின்ற புலி, ஆவேசத்தில் வனத்துறைக்கு எதிராக சாலையில் இறங்கிய மக்கள்!

நீலகிரி மாவட்டம், ஊட்டி, ஷூட்டிங் மட்டம் அருகில் உள்ள சின்ன காடிமந்து பகுதியைச் சேர்ந்தவர் தோடர் பழங்குடி புஸ்தாள் குட்டன். 55 வயதான இவர் மலை காய்கறி தோட்டங்களில் வேலை செய்து வந்திருக்கிறார். வழக்கம் ... மேலும் பார்க்க

ஏழை பெண்களே குறி; ஆடம்பர வாழ்க்கை ஆசை - பாலியல் வதை.. மதமாற்றம்? - சிக்கிய சகோதரிகளின் பகீர் பின்னணி

மத்திய பிரதேச மாநிலம், போபாலைச் சேர்ந்த 21 மற்றும் 32 வயது பெண்கள் போலீஸில் கொடுத்துள்ள புகாரில், தங்களை சகோதரிகள் இரண்டு பேர் கட்டாய மதமாற்றத்தில் ஈடுபடுத்தியதாகத் தெரிவித்துள்ளனர். அதோடு தாங்கள் வேல... மேலும் பார்க்க

நீட் தேர்வு எழுதக் கட்டாயப்படுத்திய தந்தை; கொன்று உடலைத் துண்டுத் துண்டாக்கிய மகன் சிக்கியது எப்படி?

உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவைச் சேர்ந்தவர் மன்வேந்திர சிங் (49). தொழிலதிபரான இவரது மகன் அக்‌ஷத் பிரதாப் சிங்(21). மன்வேந்திர சிங் தனது மகனிடம் மருத்துவம் படிக்கும்படி கேட்டுக்கொண்டார். இதற்காக நீட் தே... மேலும் பார்க்க