செய்திகள் :

நல்லகண்ணு: "மக்களின் உரிமைகளுக்காக வாழ்நாளின் பெரும் பகுதியைச் செலவிட்ட போராளி" - தவெக விஜய் இரங்கல்

post image

தவெக தலைவர் விஜய் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு மறைவிற்கு இரங்கல் தெரிவித்திருக்கிறார்.

அவர் வெளியிட்டிருக்கும் பதிவில், "சுதந்திரப் போராட்ட வீரர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர், விவசாயிகளுக்காகவும் மக்களின் உரிமைகளுக்காகவும் தம் வாழ்நாளின் பெரும் பகுதியைச் செலவிட்ட போராளி, தோழர் அய்யா இரா.நல்லகண்ணு அவர்கள் காலமான செய்தியறிந்து மன வேதனை அடைந்தேன்.

நல்லகண்ணு
நல்லகண்ணு

அவரது இழப்பு, இந்த நாட்டிற்கும் கம்யூனிஸ்ட் இயக்கத் தோழர்களுக்கும் ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும். அவரைப் பிரிந்து வாடும் அவருடைய குடும்பத்தினருக்கும் உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன். மறைந்த தோழர், அய்யா இரா. நல்லகண்ணு அவர்களின் ஆன்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கின்றேன்" என்று பதிவிட்டிருக்கிறார்.

நல்லகண்ணு மறைவு: "தனக்கென வாழாமல், பிறர்க்கென வாழ்ந்த சிறந்த பண்பாளர்" - எடப்பாடி பழனிசாமி இரங்கல்

கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு (101) உடல் நலக்குறைவால் இன்று காலமானார். அரசியல் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இரங்... மேலும் பார்க்க

"காங்கிரஸுடன் கூட்டணி வைக்க தவெக தயாராக இருக்கிறது" - கிரிஷ் சோடங்கர் பளீச்

ஆட்சியில் பங்கு, அதிகாரத்தில் பங்கு என்று காங்கிரஸில் சிலர் பேசி வந்தனர். மேலும், தவெக தலைவர் விஜய்யை காங்கிரஸ் நிர்வாகி பிரவீன் சக்கரவர்த்தி நேரில் சந்தித்துப் பேசினார்.இதனால் காங்கிரஸ் - தவெக-வுடன் ... மேலும் பார்க்க

`அடுத்த நகர்வுக்கு தயாராகும் காங்கிரஸ்' - ராகுல் நடத்த போகும் பேரணி

தி.மு.க-வுடனான கூட்டணியை இறுதி செய்வதில் காங்கிரஸ் கட்சி பல்வேறு சிக்கல்களை சந்தித்து வரும் நிலையில், தி.மு.கவுக்கு செக் வைக்கும் ஏற்பாட்டில் களம் இறங்கியுள்ளது காங்கிரஸ்.ஆட்சியில் பங்கு என்கிற முழகத்... மேலும் பார்க்க

நல்லகண்ணு : '80 ஆண்டுக்காலம் அயர்வே இல்லாமல் களத்தில் நின்றவர்' - ரஜினி, கமல் இரங்கல்

இந்திய அரசியலில் மிக மூத்த தலைவர்களில் ஒருவரும் சுதந்திரப் போராட்ட வீரருமான நல்லகண்ணு அவர்கள், இன்று தனது 101வது வயதில் காலமானார். அவரின் மறைவிற்குப் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில... மேலும் பார்க்க

நல்லகண்ணு மறைவு: "ஒரு தலைவர் இப்படித்தான் இருக்க வேண்டும்" - சீமான் உருக்கம்

கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு (101) உடல் நலக்குறைவால் இன்று காலமாகி இருக்கிறார். அரசியல் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அந்தவகையில் நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் ச... மேலும் பார்க்க

தோழர் நல்லகண்ணு : தமிழ்ச் சமூக பாட்டாளி வர்க்கத்தின் நூற்றாண்டு ஒளி!

'அதிகாரம் கொடியது!'இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தடை செய்யப்பட்டிருந்த காலம் அது. நல்லகண்ணு உட்பட கட்சியின் தோழர்கள் அத்தனை பேரும் தலைமறைவாக இருந்தார்கள். கிராமம் கிராமமாக பதுங்கி நடந்து நடந்தே விரல்கள் கொ... மேலும் பார்க்க