மத்தியப் பிரதேசம்: தேர்வு எழுதும்போது பிரசவம்; கழிவறையில் குழந்தை பெற்ற பள்ளி மா...
பஸ்சில் வந்தவர் முகத்தில் மயக்க ஸ்பிரே அடித்து ரூ.15 லட்சம் கொள்ளை! - 3 பேர் கைது 1 கார் பறிமுதல்!
சிவகங்கை மாவட்டம் இளையான்குடி பகுதியைச் சேர்ந்தவர் அப்துல் ரகுமான். சென்னையில் உள்ள செல்போன் கடையில் வேலை பார்த்து வருகிறார். இவரது மகன் அக்ரம். இவர் தனது தந்தையான அப்துல் ரகுமானிடம், தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாட்டில் உள்ள செந்தில்குமார் என்பவரிடம் ரூ.15 லட்சம் உண்டியல் பணத்தை கொடுத்து விட்டு வரச்சொல்லி பணத்தை கொடுத்து அனுப்பி வைத்துள்ளார்.

சென்னையில் இருந்து ஆம்னி பஸ்ஸில் கடந்த 21ம் தேதி வந்த அப்துல் ரகுமான் ஒரத்தநாடு திருவோணம் பைபாஸ் சாலையில் இறங்கினார். அங்கே வெள்ளை நிற காரில் மர்ம நபர்கள் ஆறு பேர் இருந்துள்ளனர். அந்த நபர்கள் அப்துல் ரகுமான் முகத்தில் மயக்க மருந்து ஸ்பிரே அடித்து விட்டு அவர் வைத்திருந்த ரூ.15 லட்சத்தை கொள்ளையடித்து சென்றனர். அதிர்ச்சியடைந்த அப்துல் ரகுமான் பணப்பையை திருடிட்டு ஓடுறாங்க ஹெல்ப் ஹெல்புனு கத்தியதாக சொல்லப்படுகிறது. இதையடுத்து, அப்துல் ரகுமான் ஒரத்தநாடு போலீஸில் இது குறித்து புகார் அளித்தார். குற்றவாளிகளை கண்டுபிடிக்க தஞ்சாவூர் எஸ்.பி.ராஜாராம் உத்தரவிட்டார்.
இதைதொடர்ந்து ஒரத்தநாடு டி.எஸ்.பி.,கார்த்திகேயன் தலைமையில் தனிப்படை போலீஸார் சி.சி.டி.வி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். அதில் துப்பு கிடைக்காததால் சைபர் க்ரைம் போலீஸார் உதவியை நாடினர். இதில் சென்னை திருவெற்றியூர், நெல்லிக்காரன் தெருவை சேர்ந்த பொன்சுரேஷ், சென்னை தண்டையார்பேட்டை சேர்ந்த மணிகண்டன், கோயமுத்துார் ஆவாரம்பாளையம் பகுதியைச் சேர்ந்த தினேஷ், ஆகிய மூன்று பேரை கைது செய்தனர். கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட தலைமறைவான மற்ற மூன்று நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். கொள்ளை கும்பலிடமிருந்து ரூ.9.35 லட்சம் ஒரு காரை போலீஸார் பறிமுதல் செய்துள்ளனர். !















